நுண்ணறிவு என்பது புரிந்துகொள்ளும் ஆற்றல், சிக்கலைத் தீர்க்கும்
ஆற்றல், தொடர்பு காணும் ஆற்றல், சூழ்நிலைப் பொருத்தப்பட, கருத்தியல்
சிந்தனைத் திறன் போன்ற ஆற்றல்கள் அல்லது திறன்களின் தொகுப்பாகும்.
நுண்ணறிவுச் சோதனைகளின் தந்தை எனக் கூறப்படும் ஆல்பிரட் பினே என்பவர்
புரிந்து கொள்ளல், புதுமை புனைதல், தொடங்கிய செயலைத் தொடர்ந்து
முடித்தல், தனது நடத்தையில் உள்ள குறைபாடுகளைத் தானே உணர்தல் போன்ற
கூறுகள் நிண்ணறிவினுள் அடங்கியுள்ளன என்றார்.
நுண்ணறிவின் அளவை உளவியல் வல்லுநர்கள் நுண்ணறிவு ஈவு என்னும் ஒர் அளவையினால் குறிப்பிடுகின்றனர்.
* டெர்மன் என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்.
*
ஒருவருடைய மனவயதுடன் அவனது கால வயதினை ஒப்பு நோக்க நுண்ணறிவுத் திறன்
அளவைக் குறிப்பிடுவர். மனவயதை கால வயதால் வகுத்து 100 ஆல் பெருக்கினால்
கிடைக்கும் எண்ணே நுண்ணறிவு ஈவு எனப்படும்.
* நுண்ணறிவு ஈவு (IQ) = மனவயது(மாதங்களில்) (MA)
---------------------------------------------------X 100
கால வயது (மாதங்களில் (CA)
* 100 ஆல் பெருக்குவது ஈவு பின்னமாக இல்லாமல் முழு எண்ணாக இருப்பதற்காகத்தான்.
* மனவயது என்பது சோதிக்கப்படுபவரின் நுண்ணறிவு முதிர்ச்சியைக் குறிக்கும் அளவாகும்.
*
நுண்ணறிவு வளர்ச்சி 16 வயது வரை நீடிக்கும். எனவே நுண்ணறிவு ஈவு
கணக்கிடும்போது சோதிக்கப்படுவோர் 16 வயதிற்குக் குறைவாக இருத்தல்
வேண்டும்.
IQ - 120 இருந்தால்
ஐஏஎஸ் படிக்கவைக்கலாம்
IQ - 110 இருந்தால்
மருத்துவம் படிக்கவைக்கலாம்
IQ - 100 அல்லது அதற்குக் கீழே
இருந்தால் ஏதாவது ஒரு பட்டம் படிக்கவைக்கலாம்
IQ - 80 க்கும் கீழே இருந்தால் சும்மா அவர்களைப் படி படி
என்று துன்புறுத்துவதைவிட அவர்களின் பிழைப்புக்கான ஏதாவது தொழிலைக்
கற்றுக்கொடுக்கலாம் என்று உளவியலாளர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
அமெரிக்காவின் நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்களின் குழு,
அமெரிக்கா முழுவதும் பரவலாக, மக்களின் நுண்ணறிவுத் திறனை(IQ) சோதித்ததில்,
தொற்று நோய்கள், IQ திறன்களை பாதிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்று
தெரிவிக்கின்றனர்.
இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை
நமது
மூளையின் எடை எவ்வளவாக இருக்கும் என் நினைக்கின்றீர்கள்? உமது உடல் எடையின் 2
வீதந்தான், நமது மூளையின் எடையாகின்றது.
வளர்ந்த மனிதனின் மூளை எடை 1.5 கிலோகிராம்.
ஒவ்வொரு நொடியும் நமது மூளைக்குள் 1 லட்சம் அமில மாற்றங்கள் நமக்குத் தெரியாமலே நடக்கின்றன.
நமது மூளையில் உள்ள ரத்த நாளங்களை விரித்து நீட்டினால், 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அவை நீளுமாம்.
மூளையில் 2 வயதில் தான் மிக அதிக செல்கள் அமைகின்றன. பிறகு அவை குறைய ஆரம்பித்து விடுகின்றன.
வாழ்க்கையில் மூளை, குவாட்ரிலியன்... அதா வது, 10 கோடியே கோடி தகவல்களை தனித்தனியாக தனக்குள் தக்க வைத்துக் கொள்கிறது!
18 வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக் கொள்கிறது.
நம் மூளை செயல்படும்போது 10 முதல் 23 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டும் என்று விரும்பினால் எந்த உயர் பானங்களையும் தேடி அலைய வேண்டாம், குடிநீர் போதும்.
நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே
பயன்படுத்தும். 5 முதல்
10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.
அறிவுக்கும் மூளையின் எடைக்கும் சம்பந்தம் இல்லை.
மிகச்
சாதாரண மனிதர்கள் மூளையை 2 சதவீதமே பயன்படுத்துகிறார்களாம். நாம் புத்திசாலி
என்று பாராட்டுபவர்கள்கூட 5 சதவீத மூளையையே பயன்படுத்துகிறார்கள். ஆய்வாளர்கள் 7
சதவீத
மூளையையும், விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளையையும் பயன்படுத்துவதாக ஆய்வு
கூறுகிறது.
இதயம் பம்ப் செய்யும் இரத்தத்தில் 15-20% நேரடியாக மூளைக்கு செல்கின்றது.
மனித மண்டை ஓட்டை திறந்து மூளையை எடுத்தால் அதனுடன் நேரடியாக இணைந்துள்ள நம் கண்களும் அதனோடு சேர்ந்து வந்துவிடும்.
மனித மூளையில் 80% தண்ணீரே உள்ளது. நீர் வறட்சி மூளையை பாதிப்புக்குள்ளாக்கலாம். ஆகையால், நீர்
வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும்.
தொடர்ச்சியான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான மூளை
செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்.
முன்பெல்லாம் மூளையில் உள்ள உயிரணுக்கள் இறந்தால் அவைகளுக்கு மாற்றாக புதிய
அணுக்கள் வருவதில்லை என நினைத்திருந்தார்கள். ஆனால் உடற்பயிற்சியினால்
மூளையில் நினைவாற்றல் மற்றும் படிப்புக்கு ஏதுவாக இருக்கும் ஹிப்போகேம்பஸ்
என்ற பகுதியில் புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன எனக் கண்டுபிடித்து
இருக்கின்றனர்.
தோப்புக்கரணம் மூளையை நன்கு வளர்ச்சியடையச் செய்யுமாம். இயற்கையிலேயே
மன அழுத்தம் உள்ள பிள்ளைகள்( ஆட்டிஸம்), மூளை வளர்ச்சி குன்றிய
பிள்ளைகளுக்கும் இது மிகவும் பயனுள்ள யோகாசனமாம்.
பெண்களின் மூளையில் உள்ள செல்களை விட ஆண்களின் மூளையில் உள்ள செல்களின்
எண்ணிக்கை நான்கு சதவீதம் அதிகம். அதனால்,மூளையின் எடையும் ஒரு 100 கிராம்
அதிகம். பெண்களின் மூளையில்
செல்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும்,செல்களுக்கிடையே உள்ள இணைப்பு
அதிகம். அதாவது, பெண்கள் குறைந்த அளவு செல்களை வைத்துகொண்டு விரைவாக வேலை
செய்கிறார்கள்.
மூளையில் லிம்பிக் சிஸ்டம் என்றொரு அமைப்பு
இருக்கிறது.இதுதான் நமது பலவித உணர்ச்சிகளைக் கையாள்கிறது. இது,ஆண்களைவிடப்
பெண்களுக்கு சற்று பெரிதாக இருக்கும். இதன் விளைவாக மற்றவர்கள் மீது
அக்கறை செலுத்துவது,உணர்வு ரீதியான பிணைப்பை ஏற்படுத்திகொள்வது,ஆகியவற்றில்
ஆண்களை விட பெண்கள் மேலானவர்கள். இதனால்தான் குழந்தைகளைக்
கவனிப்பது,வீட்டைப் பராமரிப்பது, போன்ற விசயங்களைப் பெண்கள் சிறப்பாகக்
கையாள்கிறார்கள்.உலகத்தின் எந்தக் கலாச்சாரமாக இருந்தாலும் இதுதான் நியதி.
மூளையின் இடப்பக்கம் ,கணக்குப் போடுவது, தர்க்க ரீதியான சிந்தனைகள் இதற்கு
பொறுப்பு.மூளையின் வலப்பக்கம் மொழியாற்றல், பேச்சுத்திறன் இதற்கு
பொறுப்பு. இடப்பக்க மூளையையும் வலப்பக்க மூளையையும் கோர்பஸ் கோலோசம்
(corpus colosum) என்ற ஒரு " சாலை : இணைக்கிறது. ஆண்களைவிடப் பெண்களின்
மூளையில் இந்த சாலை பெரியது. அதன் காரணமாகப் பெண்களின் மூளையில் தகவல்
பரிமாற்றங்கள் மிக வேகமாக நடக்கின்றன. இதனால் பெண்கள், மூளையின் இரண்டு
பக்கங்களையும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மொழியை கற்றுகொள்வதில்
ஆரம்பித்து, உள்ளுளணர்வு என்று எல்லாவற்றிலும் அவர்களுக்கு திறன் சற்று
கூடுதல்.
அந்தக் காலத்தில் மாணவர்களை, கற்பூர புத்தி, கரித்துண்டு, வாழை
மட்டை புத்தி என்று பாகுபாடு
செய்வார்கள்
கற்பூர புத்தி - இந்த வகை
குழந்தைகள் சொன்னவுடனேயே புரிந்துகொள்வார்கள்..
கரித்துண்டு - இரண்டுமுறை சொன்னால் புரிந்துகொள்வார்கள்.
வாழை மட்டை புத்தி - எத்தனை முறை சொன்னாலும் புரிந்துகொள்ளமாட்டார்கள்.