அழகை மிகைப்படுத்த வேண்டும் என்றக் காரணத்துக்காகச் செய்யும் செயல்கள் பல உடலுக்குக் கேட்டையே தருகின்றன.
வருடக்கணக்கில்
நாம் பரம்பரை பரம்பரையாக நமது நாட்டுச் சூழலுக்கும் பழக்கத்துக்கும்
உரியதான ஓர் உணவு முறையைப் பின்பற்றி வரும்போது, அதை மாற்றினால் நமது உடலே
தன் எதிர்ப்புணர்ச்சியை சிறு சிறு முறைகளில் வெளிப்படுத்துகிறது (வயிறு
கனத்துப் போதல், சிறு நமைச்சல், பொருட்படுத்தக் கூடிய வலி, வயிறு போகுதல்
இப்படி). என்றாவது ஒரு நாள் இது போன்று நடந்தால் தவறில்லை. ஆனால் தொடர்ந்து
வயிற்றை சோதித்தால், அதன் விளைவுகள் எதுவாகவும் இருக்கலாம்.
தமிழனுக்கு
அரிசி உணவு பழகிப்போன ஒன்று. 'விரைவு உணவு' (பாஸ்ட் புட்) என்னும் பேரால்,
குறைந்த அளவு-உடலை இளைக்க வைக்கும் என்ற கற்பனையில் தொடரும்போது
சிறுநீரகங்களை நாமே செயலிழக்க வைக்கிறோம். இதே போல் தான் தண்ணீருக்குப்
பதில் குளிர் பானங்கள் பருகுவதும். அவற்றில் சக்தியைக் காட்டிலும்,
ரசாயனங்களே அதிகம்.இதில் உடலைப் பளபளக்க வைக்கும் என்ற நம்பிக்கை
வேறு! 'சிகரெட் உயிருக்குக் கேடு' என்று குறித்து விற்பனைக்கு வருவது போல
அமெரிக்காவில் ஹாம்புர்கேர் பல விரும்பத்தகாத விளைவுகளைத் தரலாம் என்று
போர்டே மாட்டியுள்ளார்களாம்!
முக
அலங்காரத்திற்கென விற்கப்படும் கிரீம்களும், தலைக்குக் கருமை தரும்
சாதனமும் தோல் எரிச்சல், சிவப்பு, தடிப்பாதல், முகம் பிறகு சிறிது சிறிதாக
உடலில் கொப்பளங்கள் தோன்றுதல் என வெளிப்படுகின்றன. வெளி அடையாளங்களே
இவ்விதம் என்றால் ரத்தத்தில் அவை என்னென்ன மாற்றங்களைத் தருமோ, அவை எப்போது
எப்படி எதிரொலிக்குமோ! சில முகப் பவுடர்கள் கூட தோலின் இயற்கைத் தன்மையைப்
பாழாக்குகின்றன.
பெண்களின் மார்புக் கச்சைகள் மிக இறுக்கமாக இருந்தால் சீரணக் கோளாறு, மூச்சு விடுதலில் சிரமம் முதற்கொண்டு கான்சர் வரை ஏற்படுத்தும்.
இறுக்கமான
ஜீன்ஸ் உடைகள் பெண்களுக்கு உராய்வை ஏற்படுத்தி புண்ணாக்கியும், ஆண்களுக்கு
அளவுக்கு அதிகமான பிடிப்பால் ஆண்மையைக் குறைத்தும் செயல்படுகின்றன.
(அந்தக் காலத்தில் நிலக்கரி சுரங்க வேலையில் அழுக்கு பட்டாலும் தெரியாது,
உழைக்கும் என்பதற்காகக் கண்டு பிடித்ததைப் போட்டுக் கொண்டு வலம் வந்தால்
ஏன் இதெல்லாம் ஏற்படாது?)
இல்லாத உயரத்தை
ஏற்படுத்திக் கொடுக்கும் 'ஹை ஹீல்ஸ்' பெண்களின் இடுப்பு
எலும்பு, முழங்கால், கணுக்கால் எலும்புகளை நாளடைவில் பாதிக்கும்.
மேற்கண்டவற்றை
உபயோகிக்கும் பிரபலங்களை, சினிமா நட்சத்திரங்களைக் கண்டு நாமும் பின்பற்ற
விரும்பி அவர்களைப் போல் ஆக விழைகிறோம். ஆனால் அந்த நட்சத்திரங்கள் ஒளி
இழந்த பிறகு எந்த நிலையில் உள்ளார்கள் என்று நமக்குத் தெரியப் போவதில்லை;
தெரிந்துகொள்ள ஆர்வமுமில்லை. அப்படியே நம்மையும் நாம் விட்டு விட
முடியாதல்லவா? நமது வருங்காலம், முக்கியமாக 40க்கு மேல் ஆரோக்கியமாக
விளங்குவது நம்மைப் பொறுத்தமட்டில் அத்தியாவசியமானது அல்லவா!
திருமதி சிமோன்
Aucun commentaire:
Enregistrer un commentaire