சந்திப்புகள் நடத்த மற்றும் சங்கம் அமைக்கச் சுதந்திரம்-
எல்லோரும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், மற்றவர்களைத் தொந்தரவு செய்யாவண்ணம் மற்றும் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு இருப்பின், சந்தித்துக் கொள்ள, சங்கம் அமைக்க உரிமையுள்ளது. சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு சங்கத்திலும் வணிக மன்ற கூட்டணியிலும் அல்லது கட்சியில் எவ்வித பயமும் இன்றி உறுப்பினராகச் சேர எல்லோருக்கும் அனுமதி உள்ளது.
அபிப்பிராய சுதந்திரம்-கருத்தை வெளிப்படுத்துவதில் சுதந்திரம்-
பத்திரிக்கைத் துறைகள், ஊடகங்கள் மற்றும் தனிமனிதன் பேச, எழுத மற்றும் பிரசுரிக்க எந்தத்தடையும் இல்லை. ஒவ்வொருவருக்கும் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த எந்தத் தடையும் இல்லை. எல்லோரும் தங்களுடைய அரசியல் மற்றும் சங்கங்கள் அமைக்கும் உரிமைகளைச் சுதந்திரமாகச் செயல்படுத்தலாம்.
ஆனால் இந்தச் சுதந்திர உரிமையின் பயன்பாடுகள் மற்றவர்களை மதிக்கும்படியாகவும், சமயம் மற்றும் கொள்கைகள் இல்லாமலும் மற்றும் அவதுாறு பரப்பும் வகையில் இல்லாமலும் இருத்தல் வேண்டும். இனவெறி, சட்டத்தால் தண்டிக்கப்படக்கூடிய மிகப்பெரியக் குற்றச் செயல் ஆகும்.
வெளியில் நடமாடச் சுதந்திரம்-
பிரஞ்சு நாட்டு குடிமகன்களுக்கு பிரான்சு நாட்டு எல்லைக்குள்ளும் மற்றும் ஐரோப்பியாவிற்குள்ளும் எந்தவிதத் தடையுமின்றிச் சுதந்திரமாக வெளியில் நடமாட உரிமை உள்ளது. ஐரோப்பியப் பிரஜைகள் அனைவரும் ஐரோப்பிய அங்கத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் நடமாட மற்றும் ஸ்தாபனம் நிறுவ சுதந்திரம் உள்ளது. சட்டப்படி முறையாக பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவரும் சுதந்தரமாக நடமாடலாம். இதற்கென்று எந்த ஒரு தனிப்பட்ட உள்நாட்டு பாஸ்போர்ட் கிடையாது.
--தொடரும்--