உலகக் கம்பன் கழகச் சரித்திரத்தில் முதன்முறையாக, முன்னோடியாக ஆரம்பிக்கப்பட்ட “பிரான்சு கம்பன் கழக மகளிரணி” தன் முதலாம் ஆண்டைச், செவ்வனே செயலாற்றிய மகிழ்வுடன் நிறைவுறச் செய்துள்ளது. தொய்வுறாத மனமும், ஆக்கச் செயல்களில் விழைவும் கொண்ட எங்கள் ஆர்வத்தைப் பயனுறும் வகையில் ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.
உளந்திறந்த பாராட்டும், உழைப்பும், பொருளும் பங்காக அளித்த பாங்கும், நுாலகம் வளர புத்தகங்கள் நன்கொடையாகத் தந்து அளித்த உற்சாகமும் என்றும் எங்கள் நினைவில் மங்கா இடம் பெற்றிருக்கின்றன. தொடர்ந்த ஆதரவு, என்றும் எங்கள் முயற்சிகளுக்கு துணை நிற்குமென்ற நம்பிக்கையோடு, இரண்டாம் ஆண்டுக்கான எங்கள் கடமைகள் தொடர்கின்றன.
இந்திய ஒற்றுமையைச் சீரழிக்க அரசு ஒரு வலிமையான ஆயுதத்திற்கு
கூர் சீவ உள்ளது அறிந்து மனம் நொந்து போகிறது. சாதிவாரியாக மக்கள் பட்டியல் தயாரிக்க உள்ளார்களாம்! சாதாரண குடிமக்களுக்குத் தீமையெனத் தோன்றும் ஒன்று அரசியல்வாதிகளுக்குத் “தெரியாமல்” போவது ஏனென்று புரியவில்லை. நாட்டுப்பற்று உள்ளவர்கள் கடவுளை இனி நாட்டுக்காகவும் வேண்டிக்கொள்ள வேண்டியதுதான்!
கவிஞர் கி. பாரதிதாசன் அவா்களுடையக் கவிதை இந்தப் பொருமலையும், இதற்கானத் தீர்வையும் காட்டுகிறது.
--இராசேசுவரி சிமோன்--