ஜூலியஸ் சீசரின் நினைவாக பெயரிடப்பட்டது.
கிரகோரி நாட்காட்டியின் ஏழாவது மாதம்.
கிரகோரி நாட்காட்டியின் ஏழாவது மாதம்.
31 நாட்கள் உடையது. ரோமன் நாட்காட்டியில்
5 வது மாதமாக இருந்தது. ஒவ்வொரு வருட-
மும் ஏப்ரல் மாதம் போல அதே நாளில்
தொடங்கும். பிறந்த நாள் கல் 'ரூபி'. பூ-லில்லி.
கடகம்-சிம்மம் ராசிகளை உட்கொண்டது.
(22 ஜூன் முதல் 22 ஜூலை வரை கடகம்.
23 முதல் 31 வரை சிம்மம்).
இந்நாளில் பிறந்த சில பிரபலங்கள்: லுய் தே
புனேஸ், ஜாக்லின் கெனடி, டயானா சார்லஸ்.
2001 - சிவாஜி கணேசன் மறைவு.
14 ஜூலை பிரெஞ்சு நாட்டின், உலகத்திற்கே
வழி காட்டின மக்கள் புரட்சி முடியாட்சியின்
வீழ்ச்சியாக அமைந்தது.
தமிழ் ஈழப் போராட்டம்:
1975 ஜூலை 27 - விடுதலைப் புலிகளின் முதல்
ஆயுதத் தாக்குதல்.
1983 ஜூலை 23 - திருநெல்வேலித் தாக்குதல்.
இன்று வரை "கருப்பு ஜூலை" என்றழைக்கப்படும்
இதில் 13 சிங்கள ராணுவர்கள் கொல்லப்பட்டனர்.
அந்த நாளில் அது பெரும் தொகை. பிரபாகரன்
நேரடியாக 8 இராணுவத்தினரைக் கொன்றார்.
'கிளர்ச்சி' என்றழைக்கப்பட்டு வந்த புலிகளின்
அமைப்பு, "போராட்டம்" என்று உலக அரங்கில்
அறிமுகமானது.
1987 ஜூலை இறுதியில் ராஜீவ் - ஜெயவர்த்தனா
ஒப்பந்தம் கையெழுத்தானது.
1990 ஜூலை கடலிலும் புலிகள் தாக்குதல்.
1991 ஜூலை - "ஆகாயக் கடல் வெளிச் சமர்" படைத்
தள மீதானத் தாக்குதல்.
2001 ஜூலை 'கட்டு நாயக்கா' விமானப் படைத்தளம்
தாக்கப்பட்டு கிட்டத்தட்ட 28 விமானங்கள் முற்றாக
அழிக்கப் பட்டன. இலங்கை அரசின் 3 பயணிகள்
விமானம் அழிந்து, 3 சேதமாக்கப் பட்டது. பொது
மக்கள் பாதிக்கப் படவில்லை.
1954 வியட்நாம் வடக்கு-தெற்கு என பிரிக்கப்பட்டது.
1969 நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் அல்ட்டரின் 'அப்பல்லோ'
விண்கலம் மூலம் சந்திரனில் நடந்த முதல் மனிதர்
எனப் புகழ் பெற்றனர்.
2011 ஜூலை 1 - திருவனந்தபுர பத்மநாப சுவாமி கோவிலில்
பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகைக் கண்டுபிடிப்பு.
2011 ஜூலை 2 - சூடான் இராணுவம் லிபியாவைத் தாக்கி,
அல்-கப்ரா என்ற தெற்குப் பகுதி நகரைக் கைப்பற்றியது.
2011 ஜூலை 13 - மும்பையில் 3 இடங்களில் வெடிகுண்டுத்
தாக்குதல். 22 பேர் பலி. 140 பேருக்கு மேல் காயப்பட்டனர்.
2011 ஜூலை 20 - கம்போடிய-தாய்லாந்து எல்லையில்
பிரியா-விகார் இந்து கோவிலிலுள்ள இரு நாட்டு ராணுவங்-
களையும் ஐநா உயர் நீதி மன்றம் வெளியேற்றப் பணித்தது.
2011 ஜூலை 21 - குவாம் விடுதலை நாள் (1944 )
"நாசா"வின் 'டோன்' என்ற ஆளில்லா விண்கலம் வெஸ்டா
சிறுகோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.
இந்தோனேசியாவின் 'சுலாவெசித்' தீவில் "லோக்கொன்"
எரிமலை சீறத் தொடங்கியது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் 'தெற்கு சூடான்' என்ற புதிய நாடு
உருவானது.
ரூ.32000 செலவில் மலிவு வீடுகளை அமைக்க இந்தியாவின்
"டாடா" நிறுவனம் முன்வந்துள்ளது.