1 . வெளி நாடுகளிலிருந்து ஆப்பிள் வரவழைத்தால்
அது கெடாமல் இருக்க மெழுகு பூசுவார்கள்.
அளவுக்கதிகமாக பளபளப்புடன் இருந்தால்,
தோலைச் சீவிவிடுதல் நலம். இல்லையேல்
கான்சர், வயிற்றுப்போக்கு, வாயுத்தொல்லை,
குடல் அழற்சி போன்றவை ஏற்படலாம்.
2 . பழங்களைப் பழுக்க வைக்க மெதில் ப்ரோமைட்
எனும் வேதியப் பொருள் பயன்படுத்தினாலும்
தொல்லையே!
3 . எந்த விரும்பாத சம்பவத்தை மறப்பதற்காக
மது அருந்துகிறார்களோ அதே விஷயத்தை
மது நீண்டகாலம் நினைவில் நிறுத்துகிறது
என்கிறது ஒரு ஆய்வு.
4 வெங்காயம் கெட்ட கொழுப்பை அகற்றி இதய
நோய்,ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது.
இதிலுள்ள 'குர்செடின்' பார்வை குறைபாடு
ஏற்படாமல் காக்கிறது.வயிற்றுப் புற்று நோய்
வெங்காயம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு
வருவது குறைவு என்று 89 ஆம் ஆண்டு
'அமெரிக்க நேஷனல் கான்செர் இன்ஸ்டிடூட்'
அறிவித்தது. வெங்காயத்திலுள்ள குரோமியம்
சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை
அளவைக் குறைக்க உதவுகிறது.
5 . காலை எழுந்ததும் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது
உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும்.
6 . கார்போஹைடிரேட் அதிகமுள்ளவைகளை எந்த
அளவு, எவ்வளவு நேரம் சூடாக்குகிறோம் என்-
பதைப் பொறுத்து, அதிலுள்ள 'அக்ரிலாமைட'
என்ற ரசாயனம் வெளியேறும். காப்பிக்கொட்டை
உட்பட பொரிக்கிற, ரோஸ்ட் செய்கிற பொருள்கள்
இதில் சேரும். வத்தல், வடாம் போன்றவை
வெயிலில் காய வைத்து விடுவதால் ஈரத்தன்மை
இழந்து விடுகின்றன. மாவுப் பொருட்களைப்
பொரிக்க அதிக நேரம் எடுக்கும். அப்போதுதான்
'அக்ரிலாமைடு' வெளியேறுகிறது. நீரில் 30 நிமிடம்
ஊறவைத்துப் பொரித்தால், அந்த வெளியேற்றம்
பெரிதும் குறையும். எல்லாக் கிழங்குகளுக்கும்
இது பொருந்தும்.
7 . டயோச்ஜெனின் என்ற பைடோஈச்ட்ரோஜென்
கூட்டுப் பொருள் வெந்தயத்தில் இருப்பதால்,
பெண்களுக்கு மாத விலக்கு நேரங்களில் வரும்
வயிற்றுக்கோளாறுகள், அந்தச் சமயத்தில் ஏற்படும்
வயிற்றுக்கோளாறுகள், அந்தச் சமயத்தில் ஏற்படும்
எரிச்சல் உணர்வு ஆகியவற்றுக்கு தீர்வு தருகிறது.
மார்பக வளர்ச்சியினை முறைப்படுத்தும். 'வீக்கம்,
பசியின்மை மற்றும் வயிறு தொடர்பான கோளாறு-
களுக்கு இது பக்க விளைவு இல்லாத நல்ல மருந்து
என ஜெர்மனி அங்கீகரித்துள்ளது.
8 . வேக வைத்த உணவுகள் இரைப்பையில் நான்கு மணி
நேரம் தங்கி ஜீரண நீர்களுடன் பிசையப்பட்ட பின்
சிறு குடலுக்கு தள்ளப்படும். ஆனால் இயற்கை
உணவான பழங்கள், காய்கறிகளில் 80 % தண்ணீர்
ஆனதால், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் இரைப்-
பையை விட்டு வெளியேறிவிடும். எனவே இரண்டு
வகைகளையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது
உகந்ததல்ல. மாறாக விருந்துகளில் உணவுடன்
பழங்களைப் பரிமாறுவது வழக்கம். சுவையான
உணவை அதிகம் உண்டபின், பழங்களையும்
சாப்பிட்டால், முறையற்ற ஜீரணம் ஏற்பட்டு உணவு
இரைப்பையை விட்டு விரைவில் வெளியேறி,
வயிறு உபாதை குறையும் என்பதற்காகவே இந்த
ஏற்பாடு. இரு வகை உணவுகளின் சக்திகள் உடலில்
சேர வேண்டுமானால் தனித்தனியே உண்பதே
சாலச் சிறந்தது.
9 . வெங்காயம்,பூண்டு,உப்பு போன்றவை கிருமி நாசினி-
கள் என்பதால் அவை காற்றிலுள்ள நச்சுத்தன்மையை
கிரகிக்கும். எனவே உப்பைத் திறந்து வைக்கவோ,
வெங்காயம் , பூண்டுகளை உரித்து வைக்கவோ
வேண்டாம்.
10 . கறிவேப்பிலை:ஜீரண சக்தியை அதிகரிக்கும். பித்தம்,
வாயு, கபத்தை நீக்கும்.
11 . இஞ்சி: ஞாபக சக்தியைப் பெருக்கும். கல்லீரலைச்
சுத்தம் செய்யும். கிருமிகளை ஒழிக்கும்.
12 . பூண்டு: இரத்த அழுத்தத்தை சீராக்கும்.இதய அடைப்-
பை நீக்கும். தொண்டை சதை வளர்ச்சியைத்
தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
13 . காரெட்: இதிலுள்ள பீட்டா கரோட்டின் நோய் எதிர்ப்பு
சக்தியைத் தருகிறது.
14 . ஆரஞ்சு: இதன் இண்டர்பெறான் தொற்று கிருமிகளின்
எதிரி.
15 . பருப்பு வகை: இது வைட்டமின் ஈ மூலம் வெள்ளை
இரத்த அணுக்களை தூண்டிவிடுகிறது.
16 . கோதுமை: வைட்டமின் பி.4 நரம்பு மண்டலம், மூளை,
மண்ணீரல் ஆகியவற்றைத் திறம்பட செயல்படுத்து-
கிறது. தைமஸ் சுரப்பி செயல் பட உதவுகிறது.
17 . தேநீர்:மக்னேசியம் எதிர்ப்பு செல்கள் அழியாமல்
காக்கிறது.
18 . பால் பொருட்கள்: கால்சியம் உடல் வளர்ச்சிக்கும்,
எலும்புகளின் பலத்திற்கும் உதவுகிறது.
19 . கோஸ்: இதன் க்ளுடோமைன் குடல் புண்களை ஆறு
மடங்கு வேகத்தில் ஆற்றும். தொற்றுக் கிருமிகள்
அழியும்.
20 . இறால்,மீன்,நண்டு: அழிந்த செல்களால் நோயும்,
நோய்த் தொற்றும் வராமல் காக்கும்.