இன்றைய
அறிமுகத்தில் கண்ட வந்தனா சிவா போன்றவர்கள் உலக நாடுகளில், மிகப் பரந்த
பாரத தேசத்தில் அமைதியாக பெரும் புரட்சியையும், விழிப்புணர்வையும்
ஏற்படுத்துகிறார்கள் என்றால், அதே அடிச்சுவட்டில், தமிழ் நாட்டு 15
மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் "களஞ்சியம்" என்ற பெயரில் (2004
முதல்) கூட்டு விவசாயம், அதிலும் தரிசு நிலங்களைத் தேர்ந்தெடுத்து, கம்பு,
திணை, வரகு, சாமை, கேழ்வரகு, முத்துச்சோளம், குதிரைவாலி என சிறு தானிய
உற்பத்தி செய்கிறார்கள்.
1994இல்
'பெண்கள் இணைப்புக்குழு' எனசேர்ந்தவர்கள்,இன்று இந்தஆயிரத்திற்கும்
மேற்பட்ட பெண்கள் குழுவாய் சாதனை படைக்கிறார்கள் .ஆரம்பத்தில்இயற்கை
உரத்தோடு நெல் சாகுபடி மட்டுமே செய்தவர்கள், வருங்காலத்தில் நெல், கோதுமை
போன்ற தானியங்களுக்குத் தேவையான நீர் கிடைக்க வாய்ப்பற்று போகும் என்ற
முன்யோசனையுடன் சிறு தானிய உற்பத்தியில் இறங்கியிருக்கிறார்கள்! பராமரிப்பு
செலவின்றி சத்துள்ள உணவு வகைகளை தற்போது வெளியூர்களுக்கும் விற்பனை
செய்கிறார்கள்.
சிலர்
சேர்ந்து பயிரிட்டு விளைச்சலை தங்களுக்குள் பகிரும் முறையும், மக்களிடம்
பணம் வாங்கி, பதிலுக்கு இயற்கை முறையில் விளைந்த தானியங்களை அளிக்கும்
திட்டமும் இவர்கள் திறனுக்கு ஒரு சான்று. தாங்களே இத்தானியங்களால் உணவு
தயார் செய்தும் தருகிறார்கள்.
நெல்,
வாழை, கரும்பு போன்ற பயிர்களுக்கு 'ஜீவாமிர்தம்' என்ற பெயரில் இயற்கை
உரமும் தயாரிக்கிறார்கள். அதையே காய வைத்து, 'கனஜீவாமிர்தம்' என்ற பெயரில்
நீண்ட நாட்கள் வைத்திருந்தும் உரமாக பயன்படுத்துகிறார்கள்.
பெண்களால் எதைத்தான் செய்ய முடியாது?!
செய்தி: "சினேகிதி"
Aucun commentaire:
Enregistrer un commentaire