விண்ணில் மிதக்கும் விண்முகில்போல்
விரைவில் மறையும் நீர்க்குமிழ்போல்
கண்ணின் பார்வை தொலைநோக்கக்
காணும் உலகம் விரிந்தோடத்
தண்ணீர் மீதின் காட்சிகள்போல்
தளிர்ந்து மனத்தில் சஞ்சரிக்க
என்னுள் வாழ்ந்து எழுச்சியுறும்
இறந்த கால நினைவுகளே !
பள்ளிப் பருவ நாளங்கே !
பாடித் திரியும் நண்பரங்கே !
சொல்ல இயலாச் சிரிப்பங்கே !
துயரம் தாளா மனதங்கே !
செல்லம் கொடுக்கத் தாயங்கே !
சிந்தை ஊக்கும் தந்தையங்கே !
உள்ளம் என்னும் உலகினிலே
உலவித் திரியும் நினைவுகளே !
இன்ப துன்ப நினைவெல்லாம்
இறந்த கால மனச்சின்னம் !
இன்று நடக்கும் நிகழ்ச்சிகளை
எளிதாய் முடிக்க வழிக்காட்டி !
என்றும் வாழ்வுப் பயணத்தில்
இணைந்துச் செல்லும் வழித்தோழன் !
இன்றுச் செய்யும் செயல்கள்தான்
இனிமேல் மாறும் நினைவுகளாய் !
வாழ்க்கைப் பயணம் உள்ளவரை
வாழும் நினைவோ பலகோடி !
சூழும் நினைவில் தத்தளித்துச்
சுழன்று தவிக்கும் நம்மனது !
வீழ்த்தும் துன்ப நினைவுகளும்
விரும்பும் இன்ப நினைவுகளும்
ஆழ்த்தும் நம்மைக் கனவுலகில் !
ஆழ்ந்துப் பார்த்தால் மாயுலகம் !
- தணிகா
சமரசம்
காலமோ
மாறி ஓடும்
கற்பனை, சுவையும் மாறும் !
ஞாலமோ
சுமையை வாழ்வில்
நாளுமே
ஏற்றி வைக்கும் !
பாலமாய்
நின்று தாங்கும்
பாசமும்
மறைந்து போகும் !
தூலகம்
(விடம்)
நிறைந்த
போதில்
தூததும்
நினைவே அன்றோ !
எண்ணும்
பொழுதில் விளையாடும்
இளையோர்
நினைவும் அதிலன்றோ !
வண்ணம்
மின்னும் காதலதும்
வாழ்வில்
மாந்தர் நினைவன்றோ !
திண்ணம்
முதியோா் கனவெல்லாம்
தேடும்
வம்ச வளமன்றோ !
சுண்ணம்
(தூசு)
போன்று
மறைந்தேகி
தொடரும்
கடிதோர் நாளன்றோ !
அலைபாயும்
நினைவுகளோ ஆயிரங்காண் !
ஆங்கே
அலைக்கழியும்
மனமதிலே அடுக்கடுக்காய்
முற்றும்
கலையாத
கனவுகளும், காணுகின்ற உறவும்,
கண்டுவிட்ட
பிரிவினிலே கனக்கின்ற உணர்வும்
நிலையாக
நின்றாடி நிம்மதியைத்
தொலைக்கும் !
நீக்கமற
நிறைந்துவிடும் நினைவுக்கே
என்றும்
விலையாகக்
காலமதை வீணுக்கு இறைத்தே
விரைகின்ற
வாழ்வினிலே வரவொன்றும்
இலையே !
திருமதி சிமோன்
Aucun commentaire:
Enregistrer un commentaire