துளையிட்ட
உன்(என்)பார்வை
என்(உன்)நெஞ்சில்
பாசத்
தூதாகி,
இதமாகி,
பதமான
மனதில்
முளைவிட்ட
எண்ணங்கள் மூண்டுவர,
அன்பு
முகைத்தெழுந்து
முந்திவர,
முற்றிநின்றக்
காதல்
கிளைவிட்டு,
நினைவலைகள்
குறுகுறுக்கும் உணர்வில்
கிட்டிவரும்
உறவின்பால் கிளர்ந்துவிடும்
மோகக்
களைகளைந்து,
பொங்கிவரும்
பெருமழையாய் உன்(என்)னில்
கலந்திடுமோர் துடிப்பினிலே கரைகின்றேன்(றாய்) நானே(நீயே)!
திருமதி சிமோன்
Aucun commentaire:
Enregistrer un commentaire