சில வருடங்களாக பிப்ரவரி பதினான்காம் நாள் (வாலெண்டைன் டே ) காதலர் தினமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. இப்போது அது பெண்களின் விழிப்பு தினமாக உருவாக வேண்டும் என்ற ஆர்வத்தில் உலகமெங்கும் 202 நாடுகளில் 100 கோடி பெண்கள் கூடி அமைதிப் புரட்சி செய்கிறார்கள். இருப்பின் புது அர்த்தம் காண, புது விடியல் காண பெண்களுக்கான வன்முறைக் கெதிராக வெளிநடப்பு, போர்க்கொடி, விண்ணப்பம், நடனம் என சாத்வீகப் புரட்சி நடத்துகிறார்கள்!
உலகில் மொத்தம் எழுநூறு கோடி மக்கள் உள்ளனர். அவர்களில் பாதி பேர் பெண்கள். நியாயமாகப் பார்த்தால், இருபாலரும் இணைந்து எங்கும் எதுவும் செயல்பட வேண்டும். ஆனால் இல்லறம், வேலை, சம்பள விகிதம், சமூக வழி நடத்தல் எல்லாவற்றிலும் பெண் பின்னுக்குத் தள்ளப்படுகிறாள். அதிலிருந்து மீள காலங்காலமாக போராட்டம் நடந்து வருகிறது. இன்றைய சற்றே மூச்சு விடும்படியான சுதந்திரம் அதன் விளைவே!
ஆனால் இது உரிமைப் போராட்டம் மட்டுமல்ல. உயிர் காக்கும் போராட்டம். வாழ்க்கை நிம்மதிக்கான போராட்டம். பெண்மையின் பாதுகாப்புக்கான போராட்டம்.
UNODC அறிக்கையின்படி 10 லட்சம் பெண்களுக்கு மேல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸ் பதிவு செய்திருக்கிறது. உலக பெண்கள் தொகையில் மூன்றில் ஒருத்தி தன் வாழ்வில் வன்முறை, பலாத்காரத்தால் பாதிக்கப்படுகிறாள்.
14 ஆண்டுகளுக்கு முன் Eve Ensler என்ற அமெரிக்கப் பெண்மணியின் நாடகமே இந்தப் புரட்சியின் தொடக்கம். தற்போதைய சின்னமும், இந்திய எழுச்சியும் கீழே:
திருமதி சிமோன்
Aucun commentaire:
Enregistrer un commentaire