பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 24 février 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                          

அன்புடையீர்,

வணக்கம். 'பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா' என்றான் பாரதி!பூவின் மணம் போல், தென்றலின் இதம் போல், நிலவின் குளுமை போல் வாழ்க்கையை ரசிக்க வைப்பவள் பெண். ஒரு கவிதையைப் போல நெஞ்சை வருடி இன்பமூட்டுபவள் .  ஓவியம் போல நடமாடி கருத்தை நிறைப்பவள். சிலையாக நின்று கண்ணைக் கவர்பவள். அவளை ரசிப்பதில் தவறேதும் இல்லை.  

ஆனால் இவற்றை விட அவள் உயிரும், உணர்வும் உடைய ஒருத்தி. அவள் விரும்பிய வண்ணம்  வாழ அவளுக்கு உரிமை உண்டு. அதிலும் மனமும், எண்ணங்களும், ஆசைகளும் கொண்ட அவளது உடல் அவளுக்கே சொந்தமானது.  அதை அவள் விரும்பி ஒருவனுக்கு அர்ப்பணிக்கும் போதுதான் அவன் வாழ்வும் பூரணமடைகிறது.வழங்குதலும், பெறுதலுமாக   இணைதல்  சிறக்கிறது. அதுவே இல்லறமாகி இன்பம் வளர்கிறது. உலகம் செழிக்கிறது. இயற்கை நிறைவடைகிறது.

மாறாக வலிந்து முகர நினைக்கும்போது அந்த மென்மலர் தன் அழகிய இதழ்களை உதிர்த்து விடுகிறது. மனக்கசந்த பின் அதில் மணமில்லை! அவள் உள்ளக் கதவுகள் மூடிக் கொண்டபின், அங்கு நடக்கும் நிகழ்வுக்கு பொருளில்லை; சிறப்பும் இல்லை. ஆழ்ந்து யோசித்தால் அதில் இன்பமுமில்லை! இதை ஆண்கள் உணர்ந்து விட்டால், கண நேர வடிகாலாக பெண்களைப்  பார்க்க மாட்டார்கள்.

இதில் இன்னொரு அபாயம் உள்ளது. நசுக்கப்படும் எந்த உயிருக்கும் இயல்பாகத் தோன்றும் எதிர்ப்புணர்ச்சி! தனிப்பட்ட ஒருத்தி வலுவின்றி, தோற்று, நலிந்து, அழிந்து விடலாம்.  ஆனால் அவளது அழிவு  நடுகின்ற  சோகம் ஆழமானது. அதன் விளைவாக வளர்கின்ற நியாயமான கோபமும், வன்மமும் பறந்து விரிந்தது. சாதாரணமாகவே பெண்மை சக்தி கொண்டது. உள்ள பலம் உடையது . அது புயலாகி விட்டால் அழிவு சமூகத்திற்குத்தான். காலங்காலமாய் அடங்கியிருந்த பெண்மை, இந்த நூற்றாண்டில்  தலை நிமிர்த்த ஆரம்பித்திருப்பது கண்கூடு. அதில் சற்றே தீவிரம் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.  தூண்டி விடுவதற்குப் பதிலாக அவர்களை அவர்களுக்கு உணர்த்தியும், உறவைச் சமப்படுத்த விட்டுக்கொடுத்து, மதித்து, போற்றவும் செய்தால், உலகு அமைதிப் பூங்காவாக விளங்கும். உறவும் மணம் பரப்பும்!

திருமதி சிமோன்


பெண்ணெனும் புதிர்

                                                                Woman Hiding Painting

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான உறவு, இறைவன் உலக வாழ்வில் அளித்த ஓர் அற்புதக் கொடை. மெல்லியலாள் ஒருத்தியும், வலிமை மிக்க ஒருவனும் அன்பால் கனிந்து,பேதங்களை மறந்து, துறந்து ஒருவரில் ஒருவர் தன்னை இழக்கும்போது பெறும் பந்தம் காலம் கடந்து நிற்கும் சக்தி படைத்தது. தனக்குள் முகிழ்க்கும் அந்த நுண்ணுணர்வை போற்றிப் பாதுகாத்து வளர்ப்பதில்தான் அந்த உறவின் வெற்றி அடங்கியிருக்கிறது. அதற்காக செய்யும் காரியங்கள் தியாகங்கள் அல்ல. விட்டுக் கொடுப்பது தோல்வியல்ல. காதலில் சரணாகதி தலைக்குனிவு அல்ல. உடல் இணைப்பு அங்கு முதன்மை அல்ல.. இன்னும், இன்னும் என்று நெருங்கும் உள்ளங்கள், ஒன்றுக்குள் ஒன்று ஆழ்ந்து, ஒன்றை விட்டு ஒன்று பிரிய முடியா நிலையில் உண்டாவதே அந்த உறவென்னும் பாலம். அதற்கென ஓர் புனிதம் உண்டு. அன்புப் பெருக்கால் தன்னைக் காதலருக்கு வழங்கும் ஆகுதி அது. வாழ்க்கையின் தொடர் போராட்டங்களை, துன்பங்களைத் தாங்கும் மனவலிமையின் அடிக்கல் அது.

திருமதி சிமோன்


                                                            நிழல் யுத்தம் 
                                                                   (பாலகுமாரன்)

பெண்ணைப் புரிந்துகொள்ள ஆற்றல் வேண்டும். அவகாசம் வேண்டும். அனுபவம் வேண்டும். எல்லாவற்றையும் விடப் புரிந்து கொள்ளும் ஆவல் வேண்டும். "மாயப் பிசாசு" என்று மருண்டவரை மீறி, "நொந்து கெடுவாய்" என்று சிந்தித்தவனைப் புறக்கணித்து, நீயும் நானும் ஒன்றா என்று யோசிக்கும் ஆணுக்குப் புத்தி வலிமை வேண்டும். எங்கு மோதினோம், எப்போது பிரிந்தோம் என்று வரலாறு ஆராய வேண்டும். பார்க்கும்போது தோன்றும் பிரமிப்பைப் புறக்கணித்து விட்டு, நுகரும்போது கிடைக்கும் போதையை மறந்து விட்டு, "நீ யார்" என்று தனக்குள்ளேயே கேட்க வேண்டும். 

கேட்டிருக்கிறார்கள்; காலம் காலமாய்க் கேள்வி கேட்டிருக்கிறார்கள்; நுண்ணறிவும், மெல்லிய உணர்வும் கொண்ட ஆண்கள் கேட்டிருக்கிறார்கள்.

                                            "யாயும் யாயும் யாராகியரோ 
                                              எந்தையும் நுந்தையும் 
                                              எம்முறைக் கேளிர்?"

எப்படி எனக்கு நீ உறவானாய் - உறவென்று ஆன பிறகு எப்படி எனக்குள் தடமானாய் - எது நம்மைப் பிரியவோட்டாமல் செய்த சக்தி என்று வியந்து நின்றிருக்கிறார்கள். விடைதான் கண்டதில்லை!

கல்பகோடி காலமாய் ஓர் உறவு விநோதமாய், விடையறியாமல், வளர்ந்து வந்திருக்கிறது, வளர்ந்து வருகிறது.



,yf;fpaj;jpy; ngz;fs;

jPq;fdp ngw;w jPe;jkpo; Xsitahh;
khq;fdp cw;w kjpg;GW mk;ikahh;
ehd;kyh; R+l;ba eq;if Nfhijahh;
jhz;kyh; gzpe;j jz;zpir Qhdpahh;
mq;fit rq;fit Mjp ke;jpahh;
kq;ifah;f; furpahh; kfpo;er; nrs;isahh;
ntz;zpf; Faj;jpahh; nts;sp tPjpahh;
,d;d gyUk; ,Ue;jhh; me;ehs;;;
md;WNghy; ,d;Wk; Md;w mwpthy;
vd;Wk; rpwe;Nj Vw;wk; ngWth;!
,ay;njhWk; gapYk; ,d;dpa yhNu
,aw;Wk; nray;fspy; ,ay;gha;r; rpwg;gh;!
,yf;fpak; ,ak;Gk; ,d;ndwp xOf;fk;!
,yl;rpa tho;tpy; ,d;gk; epiyf;Fk;!
ngz;ikNa vd;Wk; ngUik Nrh;f;Fk;!
fz;nzdg; Nghw;wpf; fhg;gJ flNd!

               NjtuhR

விடியலை நோக்கி

                                                      

சில வருடங்களாக பிப்ரவரி பதினான்காம் நாள் (வாலெண்டைன் டே ) காதலர் தினமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. இப்போது அது பெண்களின் விழிப்பு தினமாக உருவாக வேண்டும் என்ற ஆர்வத்தில் உலகமெங்கும் 202 நாடுகளில்  100 கோடி பெண்கள் கூடி அமைதிப் புரட்சி செய்கிறார்கள். இருப்பின் புது அர்த்தம் காண, புது விடியல் காண பெண்களுக்கான வன்முறைக் கெதிராக வெளிநடப்பு, போர்க்கொடி, விண்ணப்பம், நடனம் என சாத்வீகப் புரட்சி நடத்துகிறார்கள்!

உலகில் மொத்தம் எழுநூறு கோடி மக்கள் உள்ளனர். அவர்களில் பாதி பேர் பெண்கள். நியாயமாகப் பார்த்தால், இருபாலரும் இணைந்து எங்கும் எதுவும் செயல்பட வேண்டும். ஆனால் இல்லறம்,  வேலை, சம்பள விகிதம், சமூக வழி நடத்தல் எல்லாவற்றிலும் பெண் பின்னுக்குத் தள்ளப்படுகிறாள். அதிலிருந்து மீள காலங்காலமாக போராட்டம் நடந்து வருகிறது. இன்றைய சற்றே மூச்சு விடும்படியான சுதந்திரம் அதன் விளைவே!

ஆனால் இது உரிமைப் போராட்டம் மட்டுமல்ல. உயிர் காக்கும்  போராட்டம். வாழ்க்கை நிம்மதிக்கான போராட்டம். பெண்மையின் பாதுகாப்புக்கான போராட்டம். 

UNODC அறிக்கையின்படி 10 லட்சம் பெண்களுக்கு மேல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸ் பதிவு செய்திருக்கிறது. உலக பெண்கள் தொகையில்  மூன்றில் ஒருத்தி தன்  வாழ்வில்  வன்முறை, பலாத்காரத்தால் பாதிக்கப்படுகிறாள். 

14 ஆண்டுகளுக்கு முன் Eve Ensler என்ற அமெரிக்கப்  பெண்மணியின் நாடகமே இந்தப் புரட்சியின் தொடக்கம்.  தற்போதைய சின்னமும், இந்திய  எழுச்சியும் கீழே:


                             

திருமதி சிமோன் 

பெண்ணின் புதைமணல்

                                                                

பெண் இல்லாமல் வாழ்க்கையில் சுவை இல்லை என்பது  எல்லா ஆண்களுக்கும் தெரியும். இருப்பது இரண்டே குலம்  என்னும்போது, பெண்ணுக்கு ஏற்படும் ஏற்றமோ தாழ்வோ அவர்களைத்தான் சார்கிறது.  அதன் பலனும் அவர்களைத்தான் அடைகிறது என்பதை அவர்கள் உணர்ந்து விட்டால் உலகில் பெரும்பாலான பிரச்னைகளும், துன்பங்களும் தகர்க்கப்பட்டு விடும். ஆனால் உண்மை நிலை நேர்மாறானதாக உள்ளது.

வாழ்க்கை ஓர் இன்பப் பூங்கா என்று எண்ணி அதில் பவனி வரத் தொடங்கும் ஒருத்தி, ஏதோ ஒரு தருணத்தில் யாரோ ஒருவனால் திசை மாற்றப் படுகிறாள். அந்த ஒருவன் அன்பும் பண்பும் உடையவனாக இருந்தால் அவள் பயணம் அமைதியும் அழகும் உடையதாக இருக்கும். இல்லையேல் நரகம் என்ற ஒன்று அவளுக்குத் தேவையே இல்லை! அவளது ஆசைகள், கற்பனைகள், இலட்சியங்கள் எல்லாமே புதைந்து போகின்றன.  அவனோடு சமமாகக் கைகோர்த்து செல்ல விரும்பிய அவளை, அவனே புதை மணலில் அமிழ்த்தி விடுகிறான். கைகொடுப்பார் யாருமின்றி, குரலடங்கி, சிறிது சிறிதாக சுவடு தெரியாமல் அவள் அமிழ்ந்தே போகிறாள்!

இது ஆண்களைக் குறை கூற வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுவதில்லை. கீழ் கண்டச்  செய்திகள் பெண்களின் நிலையை ஐயமற எடுத்துரைக்கின்றன. படிக்கும் போது மனம் நொந்து, தயவு செய்து இவற்றுக்கு முற்றுப்புள்ளி இடுங்கள், சக மனிதப் பிறவியாக அவர்களை  எண்ணுங்கள் என்று கையெடுத்துக் கும்பிட்டு இறைஞ்சத் தோன்றுகிறது:

பெண்களைத் தாயாக மதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடைய தமிழ் நாட்டில்:  விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை ஆண்டுகளில் 83 கற்பழிப்பு, 39 கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. பதிவு செய்யப்படாமல் போனது எத்தனையோ?!

சேலம், தருமபுரி மாவட்டத்தில் பிறப்பு விகிதம் ஆயிரம் ஆணுக்கு 765 பெண்களே ! காரணம் பெண் சிசுக்கொலை !

தொட்டில் குழந்தைகளில் 1545 பேர் பெற்றோர்களால் விரும்பி சேர்க்கப்பட்டவை! 950 கழிவறை, குப்பைத் தொட்டி, சாக்கடைகளில் கண்டுபிடிக்கப் பட்டவை.

குழந்தைகளைத் திருடி, பராமரித்து பிச்சைக்குப் பழக்கும் சமூக விரோதக் கும்பல்கள்  இப்போது பெண்களையும் கடத்தி பிச்சை எடுக்க வைக்கிறார்கள். குழந்தைக்கு போதை ஊசி போட்டு, பசியில் மயங்கி இருப்பதுபோல் பிச்சை எடுக்க வைப்பதில், செலவு போக மாதம் இரண்டு லட்சம் வரை கிடைக்கிறதாம். சில வேளைகளில் போதை அதிகமாகி குழந்தைகள் இறப்பதும் உண்டாம் !

வருடம்தோறும் 78 ஆயிரம் பெண்கள் பிரசவத்தின் போது இறந்து போகிறார்கள்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.


"நம் தேசத்தில் தாயின் கருவறை கூட பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லை" - அப்துல் கலாம்

"பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றியவை. இவற்றுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்திரத்திலோ இடமில்லை. இவை தமிழ்ச் சொற்களும் இல்லை" - பெரியார் (4/5/1973 விடுதலை இதழ்)

திருமதி சிமோன்