- சிவானந்த போதம்
கல்லுண்டு, மரமுண்டு
மனிதரிலும் நீர் வாழும் சாதியுண்டு
அநேககுல மனிதருண்டு
மனிதரிலும் மனிதருண்டு, வானவரும்
மனிதராய் வருவதுண்டு
மனிதரிலே பிறப்பறுக்க வந்ததுவே
அருமையென வகுத்தார் முன்னோர்.
- கம்ப ராமாயணம்
உள்ளதொன்(று) ஈயான் ஆயின்
அடைந்தவர்க்(கு) அருளானாயின்
அறம் என்னாம் ஆண்மை என்னாம்!
- தயானந்த சரசுவதி சுவாமிகள்
அலைகள் அழிவதுபோல் தோன்றினாலும், கடலும் அலையும் உண்மையில் எப்படி ஒரே நீராகுமோ, அதே போல் உன்னிடத்தில் தான் அனைத்துலகமும் இருக்கிறது - அதைப் படைத்த இறைவனும் இருக்கிறான்.
இங்கு நடப்பதெல்லாம் பண்டமாற்றே! காலம், திறமை இவற்றைக் கொடுத்து பணம், பெருமை முதலியவற்றைப் பெறுகிறாய். கடவுளிடத்தில் உன்னைக் கொடுத்தால், அப்போது அகந்தை ஞான ஒளியைப் பெறுகிறது.
விவேகானந்தர்
உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.
அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டு வரும்.
அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம். அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டு வரும்.
வலம்புரி ஜான்
பறவை பறக்கும் போது இறகுகள் ஆங்காங்கே உதிரத்தான் செய்யும். பறக்கிற பறவை உடனே கீழே இறங்கி, அவற்றைக் கொத்திச் சேகரித்துக் கொண்டு இருந்தால் பயணம் தடைப்பட்டுப் போகும். இழப்புகளைப் பற்றி எண்ணாமல் போய்க்கொண்டே இருக்க வேண்டும். நதி தன் பாதையைத் தானே அமைத்துக் கொண்டு போகுமே தவிர, பாதை வெட்டுவதற்காக மண்வெட்டியும் கூடையும் கொண்டு போகாது. எனவே, எவ்வளவு திறமையோடும், வலிமையோடும் வாழ்க்கையில் நகர்கிறோம் என்பதைப் பொறுத்துதான் வெற்றி கிடைக்கும்.
இரா. பன்னீர்ச்செல்வம்
பணக்காரர்களை உருவாக்கலாம்
பட்டதாரிகளை உருவாக்கலாம்
பதவியார்களை உருவாக்கலாம்
பகுத்தறிவாளர்களை பண்பாளர்களை
உருவாக்குதல் கடினம்!
சிந்தனையாளர்களை உருவாக்குவது
அதைவிடக் கடினம்!!
Aucun commentaire:
Enregistrer un commentaire