அச்சுறுத்தும் அண்மைக்காலம்
- இன்னும் 150 ஆண்டுகளில் இந்தியாவில் தென்மேற்குப் பருவமழையே இருக்காது என்கிறது வானிலை ஆய்வு மையம்.
- 2015 முதல் மழை பெய்வது கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து பூமி மணல் நிறைந்த பாலைவனமாகி விடுமாம். கடல் நீர் ஆவியாகி மழை பெய்தாலும் உஷ்ணத்தால் அத்துளிகள் மண்ணைத் தொடுவதற்குள் மீண்டும் ஆவியாகி விடுமாம்!
- ஒவ்வொரு வருடமும் வினாயகர் சதுர்த்திக்குப் பிறகு 65 டன்னுக்குக் குறையாமல் கழிவுகள் மெரினா கடற்கரையில் மட்டும் அகற்றப்பட வேண்டி உள்ளது. இந்தியா முழுதுக்குமான நீர் நிலைகளின் கதி பற்றி நாமே கணக்குப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!
- 2030 ஆம் ஆண்டில் உலகில் பாதிப் பேருக்குத் தண்ணீர் கிடைக்காது. நீரை மையமாக்கிப் போர்கள் எழக்கூடும்.
- இன்னும் 50 ஆண்டுகளில் தென்னிந்தியக் கடலோரப் பகுதிகள் சில வரைபடத்தில் இல்லாது போக வாய்ப்புள்ளது.
- பூச்சிக் கொல்லிகள், பிளாஸ்டிக் பொருட்கள், அழகு சாதனங்கள், சில மருந்துகள் தயாரிக்க ஈஸ்ட்ரோஜன் (பெண்தன்மை தரக்கூடியது) போன்ற வேதிப் பொருட்கள் தேவை. ஆனால் அவை ஆண்கள் உடலில் சேரும்பொழுது ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. பெண் குழந்தைகள் உடலில் சேரும்போது அவர்கள் சிறு வயதிலேயே பூப்பெய்துகின்றனர்.
- உலக நீரிழிவு நோயாளியரில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் இந்தியர்.
- தமிழக இளைஞரில் மது, புகை பிடிப்போர் 30 சதவிகிதத்தினர்.