தாவரங்களின் பரிணாம வளர்ச்சியில் ஆரம்பக் காலத்தில் தோன்றிய பூ ஞ்சை உயிரி னம் காளான் ஆகும். இவை தமது இனப் பெருக்கத்திற்குத் தேவையான விதைகளைப் பூக்கள் போன்ற வடிவில் உற்பத்தி செய்து கொள்கின்றன. பல தரப்பட்ட சூ ழ்நிலைகளிலும் காளான் வளரக்கூடியது. பெரும்பாலும் மழைபெய்து முடித்ததும் வெயில் அதிகம் படாத இடங்களில் இது வளரும். இயற்கையாக வளரும் காளான்களைப் பிடுங்குவர். சில வகை காளான்களை உண்ணலாம். சிலவகை, போதை தரும். சிலவகை, பயங்கர விஷம். எல்லாமே ஒன்றுபோலவே தோன்றும். ஆகவே, கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டு ம்.
கோடை காலத்தை அடுத்து வரும் மழைக்காலம் முடிந்ததும் அதாவது குளிர் ஆரம்பிப்பதற்கு முன்பாகப் பிரான்சில் பல காடுகளில் சிலர் குடும்பங்களுடன் சென்று காளான்களைப் பிடுங்கிச் சேர்ப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆதி மனிதர்களால் உண்ணப்பட்ட இயற்கை உணவு காளான். பண்டைய காலங்களில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அரச வம்சத்தினர் தமது அழகை மெருகூட்டுவதற்காகக் காளானைத் தினமும் உணவில் சேர்த்து வந்தனர்.
காளானின் மருத்துவ குணங்களை அறிந்த சாதாரண மக்களும் தற்போது தமது உணவில் இதைச் சேர்த்துக் கொள்கிறார்கள். இது ஒரு சிறந்த சைவ உணவு.
காளானில் நார்ச்சத்து, புரதச்சத்து அதிகமாகவும், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து மிக குறைவாகவும் உள்ளது. அன்றாடம் நமக்குத் தேவைப்படும் புரதத்தைக் காளானால்மட்டும் பூ ர்த்தி செய்ய இயலாது. ஆனால் இறைச்சி, மீன், பால், வெண்ணெய் போன்றவற்றில் காணப்படும் புரதத்தைப் போன்று காளான் புரதமும் தரத்தில் சிறந்து விளங்குகின்றது. பல தாது உப்புகளும் விட்டமின் B ,D, K உம் உள்ளன.
நோய்க்கு மருந்தாகும் காளான் :
காளான்களுக்கு ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் குணமும், ரத்த சோகை நோய் வராமல் தடுத்து வாழ்வு காலத்தை அதிகரிக்கும் குணமும் உண்டு.
காளான் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு.
நீண்ட நாட்களாகக் குணமாகாத காயங்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.
பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்குவதுடன் கருப்பை தொடர்பான நோய்களையும் குணமாக்குகின்றது. மேலும் பெண்களின் மார்புப் புற்றுநோயைக் கட்டுபடுத்தவும் செய்கின்றது.
உடல் எடையைக் குறைக்கும் காளான்
அதிக சக்தி கொண்ட உணவை எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் குறைந்த சக்தியை அளிக்கக்கூடிய காளான் போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதால் உடல் குண்டாவதைத் தவிர்க்க முடியும் என்று டாக்டர் செஸ்கின் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
காளான்கள் பல நாடுகளில் முறையாகப் பயிர் செய்ய படுகிறது.
எளிதாகக் கிடைக்கக்கூடிய மரத்தூள், தவிடு போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி நம் வீடுகளிலேயே இதைப் பயிர் செய்யலாம். நம் தேவையைப் பு+ர்த்தி செய்வதுடன் குறைந்த காலத்தில் வருமானம் பெறவும் முடியும்.
காளானிலிருந்து காளான் சூப், காளான் கட்லட், காளான் சம்பல், காளான் சான்ட்விச் மற்றும் பல சுவையான உணவு வகைகளைத் தயாரிக்கலாம்.
லெயா