உலகில் பல உயிரி னங்களையும் படைத்த இறைவன், அவற்றின் கூடவே நோய்களையும் தந்து, தன்னுடைய இருப்பை உணர்த்திக் கொண்டிருக்கின்றார். மனித இனத்தைப் பொருத்தவரை, சாதாரண 'தலைவலி” முதல் 'எய்ட்ஸ்” போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் வரை எண்ணில் அடங்கா எத்தனையோ நோய்கள். இதில் 'புற்று நோய்” என்பது இன்று மனித இனத்தை பயமுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோய் ஆகும்.
புற்று நோய் என்பது கிருமிகளால் பரவும் தொற்று நோயன்று. நம் உடலிலுள்ள உயிரணுக்களின் தான்தோன்றித்தனமான செல்கள்தான் இதற்குக் காரணம். புற்றுநோய் என்பது ஒரே தன்மையுள்ள நோயுமன்று. உயிர் அணுக்கள் கட்டுக்கடங்காமல் எந்த வடிவில் பெருகினாலும் அது புற்றுநோய் எனப்படுகிறது. இந்நோய்க்கெனத் தனியான அடையாளங்கள் கிடையாது.
பாலினச் செல்களாகிய 'விந்து அண்டம்” என்ற இணைவிகள் மரபுப் பண்புகளைப் பெற்றோர்களிடமிருந்து வழித் தோன்றல்களுக்கு எடுத்துச் செல்கின்றன. இவ்விணைவிகளில் காணப்படும் ஒரு பொதுவான பொருள் 'குரோமசோம்கள்” எனப்படும். இதில் நியுக்ளிக் அமிலம் மற்றும் புரதம் என்று இரு வேதிப் பொருட்கள் உள்ளன. உயிரி யல் ஆய்வின்படி இந்த நியுக்ளிக் அமிலம்தான் மரபுப் பண்புகளை எடுத்துச் செல்கிறது. இந்த நியுக்ளிக் அமிலம், டி. என். ஏ (டிஆக்ஸி ரி போ நியுக்ளிக் அமிலம்), ஆர். என். ஏ (ரி போ நியுக்ளிக் அமிலம் ஆகும்).
குரோமோசோம்களில் நிறைய துகள்கள் அடங்கியிருக்கும். இவை 'ஜீன்கள்” எனப்படும். இந்த ஜீன்கள் தாறுமாறாகச் சிதறி கிடக்காமல் ஒரு நூல் இழையில் சீராகக் கோர்க்கப்பட்ட மாலை போல் இருக்கும். ஜீன்கள் ஒன்றைப்போலவே ஒன்று இருக்காது. ஒவ்வொன்றும் ஒரு உடலமைப்பை உருவாக்குவதிலேயோ, ஒரு சாயலை ஏற்படுத்துவதிலேயோ முனைப்புடன் இருக்கும். எல்லாம் ஒன்றிணைந்து உடலினை உருவாக்கும்.
டிஆக்சி ரிபோ நியுக்ளிக் அமில (டி.என். ஏ) மூலக் கூற்றில்தான் ஒவ்வொரு உயிரணுவின் செயல்முறை பற்றிய குறிப்பு உள்ளது. இந்தக் குறிப்பில் ஒரு சிறிய மாறுதல் ஏற்பட்டாலும், அது உயிரணுவின் செயல் முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்திவிடும். அதன் விளைவுதான் உயிரணுப் பெருக்கம். ஒரு ஜீனிலுள்ள புரோட்டீன் உருவாக்கக் குறிப்பிலுள்ள ஒரு அமினோ அமிலத்தில் ஏற்படும் ஒரே ஒரு சிறு மாறுதல், பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இம்மாதிரி மாறுதலைடைந்த ஜீனினால் மற்ற ஜீன்களும் கடும் மாறுதலை அடைகின்றன. இந்த ஜீன்களால் உருவாக்கப்படும் உயிரணுதான் புற்றுநோய் உயிரணுக்களை உற்பத்திசெய்து பெருக்கமடையச் செய்கின்றது.
புற்று உயிர் அணுவில் உள்ள குரோமசோம்களில் புற்றுநோய் ஜீன்கள் காணப்படுகின்றன. இவை சாதாரண உயிரணுவைப் புற்று உயிர் அணுவாக மாற்றுகின்றன. இவை கோடிக்கணக்காகப் பெருகிப் புற்று(நோய்)க் கட்டியை உருவாக்குகின்றன. வரம்பும், ஒழுங்கான உருவ அமைப்பும் இல்லாத புற்று உயிர் அணுவின் வளர்சிதைவு மாற்றத்துக்குப் பிராணவாயு (ஆக்ஸிஜன்) தேவையில்லை. சாதாரண உயிர் அணுக்களின் வளர்சிதை மாற்றம் பிராணவாயு இன்றி நடைபெறாது. மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை உடலில் உள்ள செல்கள் வளர்சிதை மாற்றம் அடைகின்றன.
புற்று உயிர் அணுவை மூடியுள்ள மெல்லிய திரை போன்ற உறை, சாதாரண உயிரணுக்களை மூடியுள்ள மெல்லிய திரையிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். அயல் பொருட்களினால் பாதிப்படையாமல் பாதுகாப்பதற்காகப் பாதுகாப்பு மூலப் பொருள் அடங்கிய மென்திரையே, புற்று உயிரணுவை மூடியிருக்கும்;. இம்மூலப் பொருள் அடங்கிய உறை புற்று உயிரணுக்களின் தற்காப்பாகச் செயல்படுகின்றது.
புற்றுநோய் பரவும் விதங்கள்:
- இரத்த நாளங்களின் சுவர்களில் தோன்றி இரத்த ஓட்டம் மூலமாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுதல்
- ஊனீர் ஓட்டத்தில் கலந்து, ஊனீர்ச் சுரப்பிகளுக்கும் பரவுதல்
- ஒரு திசுவில் தோன்றி மற்ற திசுக்களுக்கு நேரடியாக ஊடுருவிச் சென்று பரவுதல்
புற்று நோயானது, உடலின் எல்லா பாகங்களையும் தாக்கக் கூடிய நோயாகும். சொpமான மண்டலத்தில், வாய் முதல் ஆசனவாய் வரையிலும், சுவாச மண்டலத்தில், மூக்கு, மூச்சுக்குழல், நுரையீரல் போன்ற பகுதிகளிலும், சிறுநீரகம் தொடர்பான உறுப்புக்களிலும், தோல், எலும்பு மஜ்ஜை, இரத்தம், மூளை, பெண்களுக்கு மார்பகம், கருப்பை போன்ற உறுப்புக்களிலும் எங்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
புற்ற நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், நூறு விழுக்காடு குணப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆரம்ப நிலையில் கவனிக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டால், நோய்முற்றி மரணம் ஏற்படும் நிலை உருவாகும். இந்நோய் உண்டான இடத்தை மட்டும் பாதிக்காமல், நாட்கள் செல்லச் செல்ல உடலின் மற்ற பாகங்களிலும் பற்றிப்படரும் தன்மை கொண்டதால், ஆரம்ப நிலையிலேயே கவனித்தல் மிகமிக அவசியம். நோயை அதிகம் வளரவிட்டுச் சிகிச்சையை மேற்கொண்டால், முழுவதும் குணமாக்குவது கடினம். நண்டின் வளையை ஒரு பக்கம் அடைத்தால் அது மறுபக்கமாக வழி ஏற்படுத்திக் கொண்டு வெளியேறும். இந்நோயும் அத்தன்மை கொண்டதால் ஆங்கிலத்தில் Cancer (கேன்சர்) எனப்பட்டது. கரையான் புற்றினை வெட்டி அப்புறப்படுத்தினால் அது முன்பைவிட வேகமாக வளர்ந்துவிடும். அதனால் தமிழில் சித்தர்கள் இந்நோயைப் 'புற்று” என்றனர்.
புற்றநோய்க கட்டியானது தொட்டால் கடினமாகவும் கீழே உள்ள திசுக்களில் ஒட்டி ஊடுருவி இருப்பதால், அசைக்க முடியாமலும் இருக்கும். புற்றுநோயைப்பற்றிய விழிப்புணர்வும், தெளிவும்; ஒவ்வொரு மனிதனுக்கும் மிகமிக அவசியம். ஏறக்குறைய உலகின் எல்லா நாடுகளிலும் இவ்விழிப்புணர்வு மக்களுக்கு அளிக்கப்படுகின்றது.
பிரான்சு அரசு 50 வயதைக்கடந்த பெண்களுக்கு மார்பகத்திற்கான பரி சோதனையையும், 50 வயதைக்கடந்த ஆண், பெண் இருபாலாருக்கும் குடல் புற்றுநோய்ப் பரி சோதனையும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்துகொள்ள, சமூகப் பாதுகாப்பு மையங்கள் மூலம் வலியுறுத்துகிறது. இப்பரி சோதனைகள் செய்துகொள்வதன் மூலம், எந்தவிதமான பாதிப்புகளும் கிடையாது. மாறாக, நோய்க்கான அறிகுறி இருந்தால், உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு, உரி ய சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிசெய்கிறது. இதை அலட்சியப்படுத்துவதற்கோ இதில் வெட்கப்படுவதற்கோ எந்த அவசியமும் இல்லை.
இறைவன் நமக்குக் கொடையாகக் கொடுத்த இவ்வுடலைப் பேணிக்காப்பது நமது கடமை. 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”. எந்த வயதாக இருந்தாலும் சரி
ஊக்கம் பெறுவோம்! உடல் நலம் காப்போம்!
உலகுக்கு உழைப்போம்! உயர்வினைக் காண்போம்!
சரோசா தேவராசு