ஒரு சொல் பல பொருள்
பிரெஞ்சு மொழியில் ஒரே உச்சரிப்புக் கொண்ட பல சொற்கள் உண்டு. உதாரணமாக வேர் (vert ) ) என்னும் உச்சரிப்புடைய இந்த சொல் பச்சை நிறத்தை குறிக்கும்; இதே உச்சரிப்பை உடைய verre - கண்ணாடி, vers - திசையில், செய்யுள், ver - புழு என பல பொருட்களை குறித்து நிற்கும். இம்மொழியை கற்கும்போது இதைப் பற்றி விபரமாகச் சொல்லித் தருவார்கள். இதை அறிந்திருந்தால்தான் டிக்டேஷன் எனப்படும் சொல்வது எழுதும் தேர்வில் கவனமாக இருக்க முடியும். இதைவிடச் சிறப்பு நம் தமிழில் உண்டு. ஒரே சொல் பல பொருள் தருவதைப் பற்றி அறிந்து இருப்பீர்கள். எடுத்துக் காட்டாக 'கல்” என்னும் சொல் மைல்கல் எனப் பெயர் சொல்லாகவும் இளமையில் கல் என்ற இடத்தில் கற்றல் என்னும் வினையாகவும் வந்திருக்கிறது.
'கால்” - உடலின் உறுப்பு, காலாண்டு, கால் பாகம் என அளவையையும் இது குறிக்கும். இதுபோல உங்களுக்கு தெரிந்த ஒரு சொல் பல பொருள்தரும் சொற்களை எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்களேன். அதனை எங்கள் வலைப்பூவில் (blog) ல் வெளியிடுகிறோம்.
லெயா