தியாகச் செம்மல்களை நாம் மறந்தும், துறந்தும் வெகு நாட்களாகிவிட்டன.
அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பையும் தருவதில்லை என்பதற்கு சாட்சியாக தில்லையாடி வள்ளியம்மையின் உருவப்படம் மின்வலையில் கிடைக்கவில்லை!
எனினும் செயற்கரியச் செய்தவர்களை மனிதசரித்திரத்திலிருந்து அவ்வளவு சுலபத்திலமறைத்துவிடமுடியாது.22-2-1898 இல் தோன்றி 22-2 -1914 வரையிலான 16 வயதே நிரம்பிய வள்ளியம்மை, தேசப்பிதா அண்ணல் காந்தி அடிகளால் "பலன் கருதாமல் தியாகம் செய்து வெற்றி கண்ட அவரே எனக்கு விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்" என பாராட்டப்பட்டவர்.
தஞ்சாவூரிலுள்ள தில்லையாடி என்னும் இடத்திலிருந்து பிழைப்புக்காக தென்னப்பிரிக்காவிலுள்ள ஜோகுன்ச்பர்க் நகரில் குடியேறிய முனுசாமி ஜானகி தம்பதியரின் மகள் வள்ளியம்மை. 1913 இல் வெள்ளையர் விதித்த தலைவரி தனை எதிர்த்து காந்தியுடன் ஆட்சி எதிர்ப்பு நடத்தினார்.13 டிசம்பர் விடுதலை ஆனாலும் வெளிவர மறுத்து தலைவரி இத்தன பிறகே வெளி வந்தார்.
வெள்ளையர் சர்ச் திருமணம் தவிர வேறெதுவும் சட்டப்படி செல்லாது என அறிவித்ததால் பல இந்தியக் குடும்பங்கள் தங்கள் புனிதத் தன்மையை திடீரென இழந்தன.குழந்தைகள் தர்ம த்திற்கு புறம்பாக பிறந்தவர்களாகவும், மனைவிகள் உரிமை அற்றவர்களாகவும் ஆகிப் போனார்கள். இதை எதிர்த்து காந்தி அடிகள் அறப்போராட்டம் நடத்திய போது வள்ளியம்மையும் அதில் கலந்து கொண்டு அனுமதி இல்லாமல் நுழையக்கூடாத பாதை வழியே பாத யாத்திரை சென்றார்.கைதி ஆகி மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார்.அப்போது "சொந்தக் கொடி கூட இல்லாத நாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற கேலிப் பேச்சைப் பொறுக்கமாட்டாது தன் புடவையைக் கிழித்து "இதோ ஏன் நாட்டுக் கொடி" என வீரத்துடன் முழங்கியவர் வள்ளியம்மை.பிற்காலத்தில் காந்தி அவர் புடவையில் இருந்த அதே பச்சை, வெள்ளை, மஞ்சள் நிறங்களைக் கொண்டு இந்தியக் கொடியை உருவாக்கினார்.
1971 இல் நாகப்பட்டின மாவட்ட தில்லையாடியில் வள்ளியம்மை நினைவு மண்டபம் ஒன்று நிறுவப்பட்டது. காந்திஜியும் ஒரு முறை அங்கு வருகை புரிந்தார்.
அல்வினா