அறிவு என்பது தன்னை அறிவதுதான். எதையாவது அறிவதாய் இருந்தால் நீ உன்னையே அறிகிறாய்!
உலகத்தை காப்பது உன் வேலை அன்று. சும்மா இருப்பது மாத்திரமே உன் கடமை. அதுவாகவோ, இதுவாகவோ இருப்பது உன் கடமை அல்ல.
ரமண மகரிஷி
உலகத்தில் நீ வாழ்ந்திருக்கும் வரை பிறர் உன்னிடம் அச்சமும், மரியாதையும் கொள்ளும்படி நட. ஒருவருக்கும் தீங்கு செய்யாமலும் பிறரால் உனக்கு தீங்கு வராதபடியும் காத்துக்கொள்.
ராமகிருஷ்ண பரமஹம்சர்
தனித்திரு. ஏகாந்தமாய் இறைவனை மனதில் இருத்தி வழிபடு. விழித்திரு. உடலைக் கிடத்தி உறங்குவது சிற்றின்பம் aagum
இறைச் சிந்தனையில் ஆழ்ந்து பேரின்ப களிப்பில் மூழ்குவதே உண்மை இன்பம். பசித்திரு. அதிக உணவும் அடிக்கடி உண்பதும் நோய்க்கு வித்திடும்.
வள்ளலார்
பிறர் வேண்டுதலால் செய்கிற தர்மத்தை விட உன் மனம் கனிந்து கொடுக்கிற தர்மமே சிறந்தது. சின்னஞ்சிறு விதை மரமாகி கனி கொடுப்பதைப் போல நீ செய்யும் சிறு தர்மமும் வளரும் தன்மை கொண்டது.
மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார்