எந்த சாதனைக்கும் ஓர் ஆரம்பம், ஓர் முனைப்பு,
ஓர் இலட்சிய வேட்கை இருக்கும். அதில் ஏற்படும் சோதனைகளுக்கு அஞ்சாமல்
வென்று வாகை சூடிய பின்னரே அது உலகை ஈர்க்கும். அதுவும் கால நேரம்
கனிந்திருந்தால். எத்தனையோ கண்டுபிடிப்புகள் சற்றே முன்பாக வந்து
மக்களால் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பிறகு அவையே
போற்றப்பட்டு கொண்டாடப்பட்டன. ஆனால் உண்மையான தாகம் கொண்ட படைப்பாளி இந்த
வரவேற்புக்கும், ஆரவாரத்துக்கும் எதிர்பார்த்து உழைப்பதில்லை. அவன்
ஈடுபாடு, அவனது கவனம் எல்லாம் தன் முயற்சியில் மட்டுமே! இதில் முழு வெற்றி
கண்ட இருவரை, கிழக்கிலும், மேற்கிலும் தடம் பதித்த இருவரைக் காண்போம்:
ஆண்டோ பீட்டர் :
மென்பொருள் தமிழனின் கையில் தவழ, கணினியில் உபயோகிக்கின்ற தமிழ் எழுத்துருவை உருவாக்கிய அறிஞன். தூத்துக்குடி ஆறுமுகநேரியில், விவசாயக் குடும்பத்தில் வந்த முதல் தலைமுறைப் பட்டதாரி.
விலை
அதிகமான, சிக்கலான, சொற்ப அளவில் கிடைத்த எழுத்துருக்கள் இணையத் தமிழ் பரவ
விடாமல் தடுத்த நிலையில், ‘அமுதம்’ எழுத்துருவை இவர் தலைமை ஏற்றக் குழு
வடிவமைத்தது. ‘பொனடிக்’, ‘டிரான்ஸ்லிட்ரேசன்’, ‘தமிழ் 99’ எனப்
பலவற்றுக்குப் பின் ஆங்கிலத்தில் ‘அம்மா’ எனத் தட்டினால், தமிழ் எழுத்துரு
காண்பதில் இவர் பங்கு கணிசமானது. தமிழ்த் தட்டச்சு முறை தெரியாதவர் கூட
கணினி உபயோகிக்கும் வசதி கிடைத்தது. 20 ஆண்டுகளாகத் தொடரும் ‘தமிழ்
சினிமா.காம்’ வலைதளம் இவர் உருவாக்கியதே! இவருடைய ‘சாப்ட்வியூ’ நிறுவன
அடிப்படை இலட்சியம், கிராமத்து மாணவர்களுக்கு கணினி அறிவைப் புகட்ட
வேண்டும் என்பது. ஆனால் தன் 40ஆவது வயதில் மாரடைப்பால் (2012) காலன் அவரது
சேவைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்!
வெர்னர் வான் பிரவுன் :
ஹிட்லர் சீன ஏவுகணைகளைக் கண்டு, தன் உலகாளும் ஆசையை நிறைவேற்ற ‘ஜேர்மன் ஆர்மி ராக்கெட் சென்டர் ’ என்ற அமைப்பை உண்டாக்கினார் . அதன் தலைவரே வெர்னர் . ராக்கெட்டுகளின் திட எரிபொருளுக்குப் பதில் திரவ எரிபொருளை நிரப்பி இலகுவாக்கி வெர்னர் அவற்றை 300 கிலோ மீட்டருக்கும் அப்பால் செல்ல வைத்தார் . இந்திய அக்னி-5 போன்ற பாலஸ்டிக் வடிவமும் அவர் அமைத்ததே. முதலில் 12,000 பேரை பலிவாங்கி, 10 ஆண்டுகள் ஆராய்ந்து 1,000 கிலோ வெடிபொருளை சுமந்து 3,000 கிலோமீட்டர் வேகத்தில் 300 கி.மீ. சென்று தாக்கியது வி-2.
இரண்டாம் உலகப் போரில் இதனால் ஏழாயிரத்து சொச்ச வீரர்கள் பலியானர். ஹிட்லரின் மரணத்துக்குப் பிறகு வெர்னர் அமெரிக்காவிடம் சரணடைந்தார். நாசாவிற்காக செயற்கைக் கோள் தயாரிப்பில் இறங்கினார் . நிலவுக்கு மனிதனை இறக்கியதில் அவர் பங்கு கணிசமானது. செல்போன், சாட்டிலைட் டிவி, தொலை தொடர்பு அத்தனையிலும் அவர் பணி அடங்கியுள்ளது. 1977இல் அவர் மறைந்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire