அறிவைப் பயன்படுத்துவோரும், ஆக்க முறையில் அதை வெளிப்படுத்துவோரும், சமூக நலனுக்காக அதை உபயோகிப்போரும் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள். அதில் அவர்களுடைய சுய நிறைவும் இருக்கலாம்.பணமும், பதவியும் அவர்களை நாடி வரலாம். அதற்காக காய்ப்பு அடைவதில் அர்த்தமில்லை. அவர்களால் மக்கள் அடைந்த நன்மை என்ன, உலகம் பெற்ற பலன் என்ன எனக் காண்பதே நல்லது. இந்தக் காலக் கட்டத்திலும், தாய் நாட்டில் இராமல் தங்கள் செயல் திறனை வெளிநாட்டுக்கு அளித்து விட்டார்கள் என்று புலம்புவதில் பயனில்லை. மனித குலம் அவர்களால் எவ்வாறு மேம்பாடடைகிறது என்றே பார்க்க வேண்டும். அவ்வகையில் இந்தியர் பெருமை கொள்ளத்தக்க முறையில் வெற்றி அடைந்தோர் பலர். அவர்களில் ஒரு சிலரது செயல்பாடுகள்:
1. எல்.என்.மிட்டலின் நிறுவனம் 1976இல் 65,000 டன் எஃகு தயாரித்தது. 2003இல் ஒரு நாளைக்கு 95,980 டன். ஆண்டுக்கு 3 கோடி 50 லட்சம் டன். உலகின் 2வது பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது.
2.
1980களில் தொழில் நுட்பத் திறமை, வல்லமை காரணமாக உயர்ந்த ஸ்வராஜ் பால்
லண்டன் மிருகக் காட்சி சாலை நிதி நெருக்கடியால் மூடப்படும் நிலையில்
இருந்தபோது 10 லட்சம் பவுண்ட் நன்கொடை அளித்து அதைக் குழந்தைகளுக்கான
மிருகக்காட்சி சாலையாக மாற்றினார்.
3. விவியன் ரெட்டி: தென்னாப்பிரிக்காவில் எலெக்ட்ரிக்கல் தொழிலில் வெள்ளையர் கண்ட வெற்றியை முறியடித்தார்.
4. தேஷ் பாண்டே: சைக்காமோர் நெட்வொர்க்கின் சேர்மன், சக நிறுவனர். தன் கோரல் நெட்வொர்க்சை விற்றது 15 மில்லியன் டாலருக்கு!
5.சபீர் பாட்டியா: பில்கேட்சிடம் தன் ஹாட் மெய்லை 390
மில்லியன் டாலருக்கு விற்றார். 1999இல் இந்திய ஹாக்கி அணியிலிருந்து 6
வீரர்களை விலக்கிய நேரத்தில் 16 ஹாக்கி வீரர்களுக்கும், கோச் மேலாளருக்கும்
தலா 1 லட்ச ரூபாய் அளித்தார்.
6. கன்வல் ரேக்கி: நிதி உதவியால் ஹொட்மெயில் எக்சோடஸ் கார்பொரேஷன், ஜாஸ்லீ தோன்றக் காரணமாய் இருந்தவர்களுள் ஒருவர்.
7. கிருஷ்ணா பரத்: கூகுள் ந்யூஸ் இணைய தள எண்ணம் தோன்றியவர்.
8. அமர் போஸ்: ஸ்பீக்கர்கள் தயாரிப்பின் மன்னர்.
9.ராஜீவ்
தேசாய்: நாசா நிர்ணயித்த 400 கோடி டாலர் 'பாத் பைண்டர்' விண்கலத்துக்குப்
பதில், 40இல் ஒரு பங்கு செலவு செய்து தயாரித்து செவ்வாய் கிரகத்தில்
இறக்கிக் காட்டினார்.
10. சுபாஷ் சந்திரா: ஸீ டிவி மூலம் மீடியா கிங் ஆனவர்.
11. குருராஜ் தேஷ் பாண்டே; இவரது தொடர்பு சாதன நிறுவனம் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ளது.
12.அருண் நெற்றாவாலி: பெல் லாப் என்ற ஆராய்ச்சி நிறுவனத் தலைவர். 30,000 கண்டு பிடிப்புகளும், பல நோபெல் பரிசுகளும் பெற்றது அது.
சிலிக்கன் வல்லே மட்டும் 100,000க்கும் மேற்பட்ட இந்திய மில்லியனர்களைக் கொண்டுள்ளது.
வாஷிங்க்டனின் டிசி, இந்திய சியிவோ உயர் தொழில் நுட்ப கவுன்சில் 200 தலைமை பொறுப்பாளர்களைக் கொண்டுள்ளது.
இதல்லாது யுனைடெட் ஏர்லைன்ஸ், சிடி பாங்க், பிரிட்டன்
ஸ்டான்டர்ட் சார்ட்டெட் பாங்க் இவற்றின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள்
இந்தியர்களே!
Aucun commentaire:
Enregistrer un commentaire