இந்த ஆண்டு 2014 மகளிர் தினத்தைத் தொடர்ந்து பெண்கள் அசத்தலாகச் செய்த சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
தனியே பறந்து திறமையை நிரூபித்த ஏர்- இந்தியா பெண்கள்:
தனியே பறந்து திறமையை நிரூபித்த ஏர்- இந்தியா பெண்கள்:
சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில்
சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கும், பின்னர் அங்கிருந்து
மறுமார்க்கமாகச் சென்னைக்கும் ஏர்-இந்திய விமானத்தை முழுக்க முழுக்கப் பெண்களே
இயக்கினர்.மகளிர் தினத்தில் தனது பெண் ஊழியர்களைக்
கவுரவிக்கும் வகையில் பெண்களை மட்டும் பயன்படுத்தி விமானத்தை இயக்க வைக்க
ஏர்-இந்தியா முடிவு செய்தது.விமானி தீபா தலைமையில் உதவி விமானி,
பணிப்பெண்கள் கொண்ட பெண்கள் குழுவே இந்த விமானத்தை இயக்கியது. இதில் 85
பேர் பயணம் செய்தனர்.
பெண்களுக்காக ஒரு தனி வெப் டிவி:
மகளிர்
தினத்தன்று
பெண்களுக்காக பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வெப் டிவிக்கு ஸ்த்ரீ என்று
பெயர் சூட்டியுள்ளனர்.இதில் பெண்களுக்கான நிகழ்ச்சிகள் மட்டுமே
ஒளிபரப்பப்படும்.பெண்களின் சுய முன்னேற்றத்துக்காகவும், அவர்கள் சமுதாயம்
சார்ந்த
விழிப்புணர்வு பெறவும் இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் வழிவகுக்கும்
என்பதில் ஐயமில்லை.அறிவியல், ஆன்மீகம், மருத்துவம், சட்டம், பெண்கள்
விழிப்புணர்வு, சுய
முன்னேற்றம், சமையல் என பல்வேறு துறைகளில் உள்ள பெண் சாதனையாளர்களும்
தங்கள் துறை சார்ந்த அனுபவங்களை இந்த நிகழ்ச்சிகளில் பகிர்ந்து
கொள்கிறார்கள்.ஆரம்பத்தில் தமிழில் மட்டுமே நிகழ்ச்சிகளை தர உள்ள இந்த
ஸ்த்ரீ டிவி வெகு
விரைவில் பல மொழிகளிலும் பல புதுமையான நிகழ்ச்சிகளை தர உள்ளது.இந்த ஸ்த்ரீ
டிவி இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும்
ஒளிபரப்பாகும். அதுமட்டுமில்லாமல் இந்த டிவியில் ஒளிபரப்பாகும்
நிகழ்ச்சிகளை எந்தவித இணைய வேக தடங்களும் இல்லாமல் ஒரே நேரத்தில் பலரும்
பார்த்து ரசிக்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர்.
இத்தாலியின் Ursuline Sisters of the Holy Family ஊர்சுலைன் திருக்குடும்பச் சபையைச் சேர்ந்தவர் அருட்சகோதரி Cristina Scuccia . இவரது வயது 25.
மார்ச் 19, 2014 அன்று "The
Voice of Italy," என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், அமெரிக்கப் பாடகரும், கவிதை எழுதுபவரும், நடிகையுமான Alicia
Keys அவர்களின் “No One” என்ற பாடலைப் பாடினார். பொதுவாக
இந்நிகழ்ச்சியில் போட்டியாளர் பாடும்போது நடுவர்கள், போட்டியாளரைப்
பார்க்காத வகையில் பின்பக்கமாகத் திரும்பியிருப்பார்கள். பாடுபவரின் குரல்
பிடித்திருந்தால் மட்டுமே அவர்கள் திரும்புவார்கள். அப்படி அவர்கள்
திரும்பிப் பார்த்தபோது ஓர் அருட்சகோதரி பாடிக்கொண்டிருப்பதையும், அவரது
திறமையையும், துறவற ஆடையையும் கண்டு வியந்துள்ளனர். அருட்சகோதரி
Cristina, இந்நிகழ்ச்சியில் பாட வந்ததற்கான காரணத்தையும், உண்மையிலேயே அவர்
அருட்சகோதரிதானா எனவும் நடுவர்கள் கேட்டபோது, தான் உண்மையிலேயே,
உண்மையிலேயே அருட்சகோதரிதான் எனவும், நான் பெற்றுள்ள இந்தக் கொடையைப்
பகிர்ந்துகொண்டு நற்செய்தி அறிவிக்க வந்தேன் எனவும் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த Gerdi McKenna என்ற பெண்ணுக்கு மார்பக புற்றுநோய். இந்த துக்கச் செய்தியை அறிந்த அவளுடைய நண்பிகள் தோழிக்குத் தங்களுடைய ஆறுதலையும் தேறுதலையும் வெளிப்படுத்த விரும்பினார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் தலையை மழித்துக்கொள்ள முடிவு செய்தார்கள். தங்களின் இந்தச் செயலைப் புகைப்படம், வீடியோ எடுக்குமாறு தென் ஆப்பிரிக்காவில் உள்ள Albert Bredenhann என்ற புகழ் பெற்ற புகைப்பட நிபுணருக்கு அழைப்புவிடுத்தனர். அவர் அந்த பெண்களில் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு அவர்களின் சம்மதம் பெற்றார். முடிதிருத்தும் நிலையத்தில் இந்த நிகழ்வு படமாக்கப்பட்டது.இந்தப் படபிடிப்பு முடிந்ததும் அனைவரும் தங்கள் தோழிக்குச் சிறு விருந்து அளித்தனர். தன்னைப் போலவே மொட்டையாகி நின்ற தோழிகளைக் கண்ட மேகேன்னா ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். தன்னலமற்ற அன்பின் ஆழத்தை, அவர்களின் நட்பின் மேன்மையை என்றும் மறக்க இயலாத வகையில் பதிவு செய்ய தனக்கு வாய்ப்பு கிட்டியதைப் பெருமையாக ஆல்பர்ட் கருதுகிறார்.
அன்பை வெளிப்படுத்த எதையும் செய்வோம்:

இப்படி வெட்டிய முடியை CANSA (Cancer Association of South Africa) நிறுவனத்துக்கு தானமாக கொடுத்தனர்.
தொகுப்பு: லூசியா லெபோ
Aucun commentaire:
Enregistrer un commentaire