பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 31 mars 2014

வியப்பான செய்திகள்


சாராவின் அதிசய மாளிகை

கலிபோர்னியா நகரில் ஒருவீடு. சாரா வின்செஸ்டர் என்ற பெண்ணுக்குச் சொந்தமானது. பெரும் செல்வந்தர் குடும்பத்தில் 1840 -இல் பிறந்தாள். 1862 -இல் வின்செஸ்டர் என்பவருடன் திருமணம்.  இவர் ஆயுத கிடங்குக்கு உரிமையாளர். இவர்கள் குழந்தை சிறுவயதிலேயே நோய்வாய்பட்டு இறந்துவிட்டது. 1881 -இல்   கணவனை இழந்தாள். அடுக்கடுக்கான
தன்னுடைய சோகத்துக்குக் காரணம் அறிந்து பிராயசித்தம் செய்ய  விரும்பினாள். அவள் கணவரின் குடும்பத்தாரால் கொலை செய்யப்பட்ட மக்களின் ஆன்மா சாந்தி பெரறும் பொருட்டு அந்த ஆவிகள் தங்க ஒரு மாளிகையை கட்டுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டாள். 
1884 -ஆம் ஆண்டு சாந்தா க்ளாரா என்ற இடத்தில் உள்ள 8 அறைகள் கொண்ட கட்டி முடிக்கப்படாத பண்ணை வீட்டைச் சாரா வாங்கினாள்.அவள் திட்டமிட்டபடியே அந்த வீடு கட்டப்பட்டது. வருடத்தின் 365 நாட்களும் இரவும் பகலும் வேலை தொடர்ந்து கொண்டே இருந்தது.38 ஆண்டுகள் வேலைகள் நடந்த நிலையில் ஒரு  நாள் - 1922 ஆம் ஆண்டு  சாராவின் திடீர் மரணத்தால் கட்டிடவேலை  நிறுத்தப்பட்டது. அவள் இறந்த போது அவள் கட்டியிருந்த மாளிகை ஆறு ஏக்கர் நிலப்பரப்புக்கும் அதிகமான இடத்தை  ஆக்கிரமித்திருந்தது. மாளிகையில் 160 அறைகள் உள்ளன.பல அறைகள் பயன்படுத்தப்படவே இல்லை. சில அறைகளின் அகலம் வெகுசில அங்குலங்களே இருந்தன. மாளிகையில் இருக்கும் மாடிப்படிகள் எங்கே போகிறதென்றே தெரியாது. சாளரங்கள் வெற்றுச் சுவரை நோக்கி இருந்தது. ஏழுமாடிக் கட்டிடமான  இதில் 3 லிப்டுகள். 2,000 கதவுகள். 10,000 ஜன்னல்கள், பல மைல்கள் நீளத்துக்கு ரகசியப் பாதாளப் பாதைகள் உள்ளன.

வின்செஸ்டர் மாளிகை என்று அழைக்கப்படும் இந்த கட்டிடம் இன்று ஒரு மியூசியம். உலகின் விந்தையான இம்மாளிகையைக் காணப் பலரும் வருகின்றனர். சுற்றுலா பயணிகளை திகைக்கவும், ஆச்சரியபடவும் வைக்கும் மாளிகையாக  இது  திகழ்கிறது. 


23 ஆண்டுகளில் தனது 17வது குழந்தைக்கு காத்திருக்கும் தாய்  


திருமணமான 23 ஆண்டுகளில் தனது 17 -ஆவது குழந்தையின் வரவுக்காக சந்தோஷமாகக் காத்திருக்கும் தாய் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். லங்காஷயரின் மோர்கம்பே என்ற இடத்தில் வசித்துவரும் நோயல்(41), மற்றும் அவரது மனைவி ஸ்யு ரட்போர்ட்(38) என்ற இருவரும் பேக்கரி ஒன்றினை நடத்தி வருகின்றனர்.
திருமணமான இந்த 23 வருடங்களில் ஒவ்வொரு 17 மாத இடைவெளியிலும் அவர்கள் வீட்டில் ஒரு புதுவரவு தோன்றும். 2011 -ஆம் ஆண்டில் இவர்களது குடும்பம் பற்றி எடுக்கப்பட்ட டாக்குமெண்டரியான ’15 கிட்ஸ் அண்ட் கவுண்டிங்’ இவர்களை வெளியுலகில் பிரபலப்படுத்தியுள்ளது.
இவர்களது 16 -ஆவது மகன் காஸ்பர் சென்ற வருடம் (2012) அக்டோபர் மாதம் பிறந்தான்.தற்போது 11 மாத இடைவெளியில் தான் மீண்டும் தாயாகப் போவதை ஸ்யு மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தங்கள் குடும்பத்துடன் இணையப் போகும் புதுவரவு குறித்துக் கணவன், மனைவி இருவருமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
ஒன்பது அறைகள் கொண்ட வீட்டில் வசித்துவரும் இவர்கள் தங்களின் போக்குவரத்திற்காகச் சிறிய பேருந்து ஒன்றினையே வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பெண் விமானி:

 ஆண்களே  கார் ஓட்டுவது  அரிதாக இருந்த காலகட்டத்தில், சரளா விமானியானது  செயற்கரிய வியப்பூட்டும் சாதனை. சுதந்திரதிற்கு முன்பிருந்த ஒன்றுபட்ட இந்தியாவின், தற்கால பாகிஸ்தானின் லாகூரில் (Lahore,  Pakistan) பி.டி. ஷர்மா ( P. D. Sharma) என்பரைத் தனது 16 வயதில் மணந்த சரளா  1914 -இல் பிறந்தவர்.  இவரது கணவர் குடும்பத்தினருக்குச் சொந்தமாக ‘ஹிமாலயா ஃப்ளையிங் கம்பெனி’  (Himalaya Flying Company) என்ற விமான நிறுவனம் இருந்தது.   பத்ரிநாத்திற்கும் ஹரித்துவாருக்கும்  (Badrinath and Haridwar) இடையே அந்நிறுவனம் தன் பயணச் சேவையை நடத்தி வந்தது.  சரளாவின் கணவர் குடும்பத்தில் அந்நாட்களில் 9 பேர் விமானியாக இருந்தார்கள்.  முதன் முதலில் ஏர்மெயில் விமானியாக (airmail pilot’s licence) இந்தியாவில் உரிமம் வாங்கியவரும் இவரது கணவர் பி.டி. ஷர்மாதான். அவர் கராச்சிக்கும் லாகூருக்கும் இடையில்  பறக்கும் விமானத்தின் விமானியாகப் பணிபுரிந்து வந்தார்.தனது மனைவி சரளாவையும் விமானியாக்க அவரது கணவர் ஆர்வமுடன் இருந்தார்.  அவரையும் விட  கணவர் ஷர்மாவின் தந்தை மிகவும் தூண்டுகோலாக இருந்து மருமகளை ஊக்குவித்து வந்தார்.  தனது மகனிடம் அவர் சரளாவிற்கு விமானப் பயிற்சியைத் துவக்க வலியுறுத்திய வண்ணம் இருந்தார்.  ஆனால் ஷர்மாவிற்குப் போதிய நேரமில்லாததால்  தானே தனது மருமகளை “லாகூர் ஃப்ளையிங் கிளப்” (Lahore Flying Club) இல் சேர்த்து ‘டிம்மி தஸ்த்தூர்’ (Timmy Dastur) என்ற பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார்.அவர் சரளாவிற்குச்  சரியாக  8 மணி 10 நிமிடங்கள் பயிற்சி அளித்த பிறகு தனியாக விமானத்தை இயக்க அனுமதி கொடுத்தார்.  தனது கணவர் பணியிலிருந்து வரும்வரைக் காத்திருந்து அவரது அனுமதியுடன் 1936 -ஆம் ஆண்டு ‘ஜிப்சி மாத்’ (Gypsy Moth) என்ற சிறுவகை விமானத்தில் சரளா தனியாகப் பறந்தார்.  அப்பொழுது நான்கு வயது மகள்  ஒருத்திக்கு இளந்தாயாக இருந்த சரளாவிற்கு வயது 21 தான்.  தான்  வழக்கமாக அணியும் புடவையிலேயே விமானியாகப் பறந்தார். வர்த்தக விமானங்களை ஓட்டும் பயிற்சி பெற்றுத் தன் கணவரைப் போலவே விமானியாக விரும்பினார்.இரெண்டாம் உலக போர் மூண்டதால் அவர் பயிற்சியைத் தொடர முடியவில்லை. இதை அடுத்து அவள் வாழ்க்கையில் பல சோகங்கள். விமானிகளாகிய அவள் கணவரும் மைத்துனரும் அடுத்தடுத்து விமான விபத்தில் இறந்தனர். 23 - 24 வயதில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி விதவையான அவளுடைய ஆசை நிறைவேரமால் போயிற்று.
லாகூர் கலைக் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் நுண்கலையைச் சிறப்புப் பாடமாகப் பயின்றார். 1948 -இல் P P Thakral என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இன்றும் தனது  98 வயதில் சுறுசுறுப்பான  தொழில் அதிபராக விளங்குகிறார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire