பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 30 avril 2014

பட்டின் தோற்றம்

பகட்டாக பட்டு ஆடைகள் அணிந்து வலம் வரும் தோழிகளே பட்டு கண்டறியப்பட்டதின் வரலாறு:

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சீனப் பேரரசி ஒருவர்((Si Ling-Chi), தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த போது, முசுக்கொட்டைச் செடியில் அழகாகக்  கட்டப்பட்டிருந்த ஒரு கூட்டினைப் பார்த்திருக்கிறார். அதிலிருந்து ஒரு இழையைப் பிடித்து இழுத்திருக்கிறார். அது நீண்டுகொண்டே போக, மொத்தக்  கூடுமே, ஒரே இழையால் ஆன விவரம் அவருக்குத் தெரிந்திருக்கிறது. தோட்டத்தில் இருந்த மற்ற கூடுகளையும் சேகரித்து, இழைகளைப் பிரித்துசிறியதாக ஒரு உடை தயாரித்துப் பார்த்தாராம். 

அந்த நூலிழையும், அதில் தயாரித்த உடையின் நேர்த்தியும் அவருக்கு ரொம்பவே பிடித்துப் போக, பட்டு நூலாடைகள் தயாரிப்புக்கு அதுவே  ஆரம்பமாக அமைந்திருக்கிறது.பட்டு வளர்ப்பதை ஒரு தொழிலாக மேம்படுத்தியிருக்கிறார். அந்த ராணியைச் சீனர்கள் பட்டின் கடவுளாக இன்றைக்கும் போற்றுகிறார்கள். பட்டு என்பது ராஜகுடும்பத்துக்கு மட்டுமே உரித்தானது என்று ரகசியம் காக்கப்பட்டதாம். மேலும் ஒரு பெண் கண்டுபிடித்ததாலோ என்னவோ பட்டுத் தொழில் நுட்பம் பெண்களுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியமாக வெகு காலத்துக்கு இருந்தது. அதன் பிறகு சுமார்  2,500ஆண்டுகள் கழித்து, ஒரு ரோமானிய மன்னன், சீன இளவரசியைத் திருமணம் செய்ய, அதுநாள் வரை சீனர்களுக்கு மட்டுமே ரகசியமாக  வைக்கப்பட்டிருந்த பட்டு, இடம் பெயர்ந்திருக்கிறது. 

பட்டுப் புழுவை வளர்க்கத் தெரியாததால், அதையடுத்த சில காலத்துக்கும் சீனாவில் மட்டுமே பட்டின் கொடி பறந்து கொண்டிருந்ததாம்.  இதைத் தெரிந்து கொண்ட ஜப்பானியர்கள், பட்டுப் புழு வளர்க்கத் தெரிந்த சீனப்பெண்களைக் கடத்திக் கொண்டும், வேலைக்கு அழைத்துச் சென்றும்அவர்கள் மூலம் தொழில் நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டு, பட்டு நூல் உற்பத்தியில் சீனர்களையே தோற்கடித்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் ஜப்பான் பட்டு நெசவு, வளர்ப்புக்கான காப்புரிமையை மேலை நாடுகளுக்கு தர முன் வந்தது. இது உலகளாவிய பட்டு நெசவுக்கு வழி வகுத்தது.

பண்டைய இந்தியாவின் ஒரு பகுதியை ஆண்ட இளவரசன் ஒருவன், சீன இளவரசி ஒருத்தியை மண முடித்தார். அவள் வழியாக வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு வலுவான சான்று இல்ல. ஆனால் பட்டுத் தொழில்நுட்பம் கி.மு. 1ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு அறிமுகமானதாகச் சொல்லப்படுகிறது.
இந்திய மன்னரான கனிஷ்கர் காலத்தில், கி.மு. 58இல், இந்தியாவில் இருந்து பட்டு ரோமுக்கு ஏற்றுமதி செய்ததாக வரலாற்றுத் தகவல் இருக்கிறது. கி.பி.16 நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் பட்டு உற்பத்தியில் ஆர்வம் காட்டினார்கள். அதனால் அப்போது சீனாவுக்கு நிகராக இந்தியாவும் பட்டு ஏற்றுமதியில் முன்னணியில் இருந்தது.

படிப்படியாக இந்த நுட்பம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவுகிறது. இன்றும் பட்டு உற்பத்தியில் சீனாதான் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியா, உஸ்பெஸ்கிதான், தாய்லாந்து, ஜப்பான், கொரியா, வியட்னாம், ஈரான் என 30க்கும் மேற்பட்ட நாடுகளும் குறிப்பிடத்தகுந்த வகையில் உற்பத்திசெய்கின்றன.

கூடுகளிலிருந்து பட்டுப்பூச்சிகள் வெளிவரும் முன்னரே அவற்றிலிருந்து பட்டினை நாம் தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும். அதாவது பட்டுப்பூச்சிகளைக் கொன்றுதான் பட்டுநூல் பெறப்படுகிறது.

தொகுப்பு:
திருமதி. லூசியா லெபோ

Aucun commentaire:

Enregistrer un commentaire