மக்கள் வாங்கும் பட்டின் தரத்தை அறியும் நவீன இயந்திரத்தை
கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் தமிழக அளவில் காஞ்சிபுரம் மற்றும் சேலம் ஆகிய ஊர்களில்அறிமுகம் செய் துள்ளது.
சுத்தமான பட்டுச் சேலைகளில் வெண் பட்டுக் கூட்டில்
இருந்து எடுக்கப்பட்ட பட்டு நூல் பயன் படுத்தப்படுகிறது.மேலும்
இதன் ஜரிகை வேலைப்பாட்டில் 50 சதவிகிதம் வெள்ளி, 0.6 சதவிகிதம் தங்கம்
மற்றும் தாமிரம் கலக்கப்படுகிறது. இவை ஒவ் வொன்றும் எவ்வளவு உள்ளது என்பதை
இயந் திரம் காட்டி விடும். இதன் மூலம் போலிகளை எளிதாகக் கண்ட றியலாம்.
பொதுமக்கள், பட்டுப்புடவையின் தரத்தை அறிய சேலம் தங்கம் பட்டு மாளி கையை அணுகி புக்கிங் செய்து கொள்ளலாம். தரம் சோதிக்கப்பட்டு பட்டின் தன்மை குறித்த விவர அட்டையுடன் மறுநாள் பெற்றுக் கொள்ளலாம்.
கோ ஆப்டெக்ஸ், நெசவாளர் பட்டுக் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் பட்டுச் சேலைகளை சோதனை செய்து கொள்ள ரூ.30ம், பட்டு வேட்டிக்கு ரூ.20ம், தனியார் ஜவுளிக் கடை களில் வாங்கும் பட்டுப் புடவைகளை பரிசோ திக்க ரூ.50ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள் ளது.
பொதுமக்கள், பட்டுப்புடவையின் தரத்தை அறிய சேலம் தங்கம் பட்டு மாளி கையை அணுகி புக்கிங் செய்து கொள்ளலாம். தரம் சோதிக்கப்பட்டு பட்டின் தன்மை குறித்த விவர அட்டையுடன் மறுநாள் பெற்றுக் கொள்ளலாம்.
கோ ஆப்டெக்ஸ், நெசவாளர் பட்டுக் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் பட்டுச் சேலைகளை சோதனை செய்து கொள்ள ரூ.30ம், பட்டு வேட்டிக்கு ரூ.20ம், தனியார் ஜவுளிக் கடை களில் வாங்கும் பட்டுப் புடவைகளை பரிசோ திக்க ரூ.50ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள் ளது.
பா(ப)ட்டுப் புடவை("‘singing silk saree’) 22 02 2010
ஐதராபாத் : "ஸ்வரம்மதூரி' எனும் பெயரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாட்டுப் பாடும் பட்டு புடவைகள் தென் மாநிலங்களில் பிரபலமடைந்து வருகின்றன. இதுகுறித்து, ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், தர்மாவரம் பகுதியை சேர்ந்த உடை வடிவமைப்பாளரான பி.மோகன் என்பவர் கூறுகையில், "பாட்டுப் பாடும் பட்டுப் புடவையில் முந்தானையில், ஐபாட் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அதில், பதியப்பட்டுள்ள 200 பாடல்கள், 4 மணி நேரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகும். இதற்காக, இந்த வகை பட்டுப்புடவையில், 2 ஜி.பி., மெமரி சிப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு மாதங்கள் கடினமாக உழைத்து, இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது' என்றார்.
இந்த சேலையின் உரிமையை பெற்றுள்ள நெசவாளர் பி.தத்தா சிவா கூறியதாவது: தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த ஷோரூம்களில் இருந்து, இந்த சேலைகளுக்கு ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன. ஒரு சேலை உருவாக்க, ஒரு மாதம் ஆகிறது. எங்கள் யூனிட்டை சேர்ந்த பத்து உறுப்பினர்கள் தொடர்ந்து பணியாற்றி, இந்த சேலையை முழுவதுமாக உருவாக்கி உள்ளனர். இதற்கு முன், எல்.இ.டி., கொண்டு "ஒளிரும்' சேலை உருவாக்கினோம். அதே போன்று, சந்தனக் கட்டை கொண்டும் முன்னர் பட்டுப்புடவை தயாரித்திருந்தோம். அவற்றிற்கு ஏராளமான ஆர்டர்கள் வந்தன. ஆனால், நேரமின்மை காரணமாக, எங்களால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இவ்வாறு தத்தா சிவா கூறினார்.
09 03 2014
கற்றாழையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் புடவைகள் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது என்று இந்திய தொழில்நுட்ப கழகம் சான்றளித்து உள்ளது.
பட்டின் வேறு பயன்பாடுகள்:
- அறுவை சிகிச்சையில் தையலுக்குப் பயன்படுவது பட்டு இழைகளே.
- பாராசூட் மற்றும் விண்வெளி ஓடங்களில் பட்டுக்கயிறுகள் பயன்படுகின்றன.
- பட்டுக்கூடுகளிலிருந்து பிரித்தெடுக்கும் புரதம் மருந்துப்பொருளாகவும் ஊட்டப்பொருளாகவும் பயன்படுகிறது.
- பல்வேறு வகை ஒப்பனைப் பொருட்களினல் பட்டுக்கூடு புரதம் சேர்க்கப்படுகிறது.
- பட்டுப்புழு கூட்டுப்புழு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன.
- பட்டுப்புழு வளர்ப்புக் கழிவுப்பொருட்கள் கால்நடைத் தீவனம் மக்கிய உரங்கள், மண்புழு உரம் ஆகியைவ தயாரிக்கப் பயன்படுகின்றன.
- பட்டுக்கூடு சுத்திகரிப்பு தொழிலில் கழிவுப் பொருட்களான கூட்டுப்புழுவின் மேலோடு கைட்டின், கைட்டோன் போன்ற மருந்துப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன.
- பலவகைப் பொருட்கள் தயாரிப்பில் மல்பெரி வேர், இலை ஆகியவை பயன்படுகின்றன.
- அதிவேக சைக்கிள் பந்தயங்களில் பட்டு இழைகளைக் கொண்டு இரப்பர் சக்கரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
1857ஆம் ஆண்டு வாக்கில் ப்ரான்சின் தென்பகுதியில் இருந்த பட்டு உற்பத்திப் பண்ணைகளில் பட்டுப் புழுக்கள் எல்லாம் ஒரு வித்தியாசமான நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின.
அதனால் பட்டுத் தொழிலில் பெரிய சரிவு ஏற்பட்டது. இதைச் சரிசெய்வதற்காகப் பட்டு உற்பத்தியாளர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளரான லூயீ பாஸ்டரை (Louis Pasteur) அழைத்தார்கள். லூயீ பாஸ்டர், நோய்க்கான காரணம் பாக்டீரியா எனக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு நோய்த் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆதாரமாக இருந்ததாம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire