கடந்த
19/10/2014 அன்று பிரான்சு கம்பன் கழகத் தலைவரின் மகளது மஞ்சள் நீராட்டு
விழாவின் போது கம்பன் உறவுகளால் எழுதப்பட்டு மூன்று தலை முறைகளையும்
வாழ்த்தியக் கவிதை:
பாவரசி
வாழ்த்துக் கவிதை
இறைவன்
என்னும் படைப்பாளன்
இன்பத்
தமிழின் ஈர்ப்பாளன்
குறையாக்
கவிதைக் காப்பாளன்
குன்றில்
நிற்கும் குமரனவன் !
மறையா
நிலவாய்ப் படைத்திட்டான்
முனைந்தே
கவிஞன் சனார்த்தனனும்
நிறையும்
நெஞ்சில் வடித்திட்டான்
நீண்டு
வாழ்க வாழியவே !
வாழை
போலும் தொடர்ந்திடவே
வள்ளல்
வழியில் பாரதிபோல்
தாழை
மணமாய்க் கவிதைதனைத்
தானும்
தருவான் செல்வனவன் !
மாழை
மணியாய் அவன்புகழும்
மலர்ந்து
எங்கும் வீசுகவே !
மோழை
அகற்றும் வாழ்வதனில்
மேலும்
மேலும் வளர்ந்திடவே !
பெயர்த்தி
வந்தாள் பாவரசி
பெயரை
மீண்டும் நாட்டிடவே
செயலும்
சொல்லும் வளம்பெறவே
சிற்ப
அழகின் சாயலிலே !
தயவாய்
அருளைப் பொழிந்திடவே
தாழ்ந்து
தாளைப் பணிகின்றோம்
சயனம்
கொண்டே அவள்நாவில்
சத்தியம்
என்றும் தழைத்திடவே !
கம்பன்
உறவுகள்
பொன்விழாக் காணும் பாவலர் கி. பாரதிதாசனை வாழ்த்தி கழகக் கவிஞர்கள் படைத்தவை:
செந்தமிழ் அன்னையின் சீர்வளர் பெற்றியர்!
அந்தமிழ்க் கம்பன் அருட்செல்வர்! - சிந்தைமகிழ்
பொன்விழா போற்றுகின்ற பாரதி தாசனார்
பண்ணலாம் காண்க படர்ந்து!
- கவிஞர் வே. தேவராசு
நாமகள் பாராட்ட நற்றமிழ் தேனூட்ட
பூமகள் சீராட்டும் பொன்விழா! - பாமகனாம்
பாரதி தாசனார் பல்லான் டிசைபெறவே
பேரருள் கூட்டும்நற் பேறு!
-கவிஞர் சரோசா தேவராசு
பார்புகழ்க் கம்பன் படைப்பைப் பறைசாற்றும்
தார்புகழ்ப் பாரதி தாசனே! - பேரன்பால்
ஊர்புகழ் நீபெற்றும் ஓங்கு தமிழ்காத்தும்
சீர்புகழ் காண்க சிறந்து!
- கவிஞர் தணிகா சமரசம்
பொன்விழாக் கோலமுறும் பாரதி தாசன்..பாத்
தன்னிலே தான்மயங்கித் தள்ளாடும் - தென்றலே!
காதலிலே ஆயிரந்தான் கண்ணுற்ற வல்லுனனும்
வாதமிட உண்டோ வழி?
-கவிஞர் இராசேசுவரி சிமோன்
வானின் நிறைமதியோ? வீசும் வளியோ?செந்
தேனின் நறுஞ்சுவையோ? தென்றலோ? - காநேழிலோ?
மானின் தனிநடையோ? மாண்பார் கவிமணி கி.
பா.வின் தெளிதமிழ்ப் பா!
-பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
வந்தவரை வாயார வாழ்த்தி வரவேற்றுத்
தந்தநலங் கூறுந் தமிழழகை! - சொந்தமென
எம்மை அரவணைக்கும் இங்கவியே! பாரதியே!
உம்மை அடையும் உயர்வு!
- மருத்துவர் த. சிவப்பிரகாசம்
கம்பன் கவிதைக் கடலில் குளித்தாடி
இம்மண் செழிக்க எழுதுபவர்! - செம்மலாம்
பாரதி தாசரைப் பாரே புகழ்ந்தேத்தும்!
பேரருள் காக்கும் பெரிது!
- திருமிகு சிவஅரி
Aucun commentaire:
Enregistrer un commentaire