பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 27 juillet 2011

இன்றைய அறிமுகம்



பெருந்தலைவர் காமராஜ்


தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக இருந்த இவர் "கர்ம வீரர்", "கிங் மேக்கர்"என்றெல்லாம் அழைக்கப்பட்டவர். இராமநாதபுரம் மாவட்டத்தில் விருதுப்பட்டி கிராமத்தில் தேங்காய் வியாபாரியான குமாரசாமிக்கும், சிவகாமி அம்மையாருக்கும் 1903  ஜூலை 15 ஆம் தேதி பிறந்தார். 6 வயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். சுதந்திர உணர்வும், நாட்டுப்பற்றும்,மக்கள் மீது கொண்டஅக்கறையும் அவரை "படிக்காத மேதை"யாக, காமராஜர ஆட்சி திரும்ப வராதா என்று எல்லோரையும் ஏங்f வைக்கும் விதமாக உருவாக்கியது. நேர்மையும், எளிமையும் கொண்ட அவர் காந்திஜியின் உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டு, 1930 இல் அலிப்பூர் ஜெயிலில் இரண்டு வருடம் இருந்தார். 1940 இல் வார்தாவுக்குச் சென்று சத்தியாக்கிரகிகளின் பெயர்களை காந்தியிடம் சமர்ப்பிக்கச் சென்றபோது கைதாகி வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் முனிசிபல் கவுன்சில் தேர்தலில் வென்றுசேர்மன் ஆனார். ஆனால் தன் மனச்சான்றுக்கு அது ஏற்காத தால் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டார். 1942 இல் "வெள்ளையனே வெளியேறு" எதிர்ப்பில் மீண்டும் 3 வருடங்கள் அமராவதி சிறையில் இருந்தாலும் தன் அறிவைவளர்த்துக்கொள்ளும் வகையில் பல புத்தகங்களைப் படித்து நாட்களைப் பயனுறக் கழித்தார்.

1945 இல் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி ப்ரெசிடென்ட் ஆனார். அவரது குரு சத்தியமூர்த்தி மூலம் மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலர் ஆகவும் இருந்து கட்சியைப் பலப்படுத்தினார்.1954 முதல்  9 ஆண்டுகள் தமிழக முதலமைச்சராகவும், 1952 - 54 , 1969 -75 பார்லிமென்ட் உறுப்பினர் ஆகவும் பணியாற்றினார். இந்தியதேசிய காங்கிரஸ் முதுகெலும்பாக இருந்து 1964 இல் லால் பகதூர் சாஸ்திரியையும், 1966 இல் இந்திரா காந்தியையும் நாட்டின் பிரதமராக்கினார். வயதானவர்கள் பதவி விலகி கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற அவரது கருத்து "காமராஜர் பிளான்" என்றே அழைக்கப்பட்டது.
காமராஜர் தம் ஆட்சிக் காலத்தில் செய்த நன்மைகள் எண்ணிலடங்காதவை. அவரை இன்றளவும் நன்றியுடன் நினைவுகூரத் தக்க வகையில் ஆற்றிய பணிகளில் சில:
ராஜாஜி காலத்தில் மூடிய 6 ,௦௦௦ பள்ளிகளை மீண்டும் திறந்து, மேற்கொண்டு 12 ,௦௦௦ பள்ளிகளை (உலகிலேயேமுதன் முறையாக) திறந்தார்!  மொத்தம் இருந்த 12 ,௦௦௦ (7 %) பள்ளிகள் இவராட்சியில் 27 ,௦௦௦ (37 %) பள்ளிகளாக உருவெடுத்தன! ஏழை குழந்தைகளின் வயிற்றுப் பசியையும் போக்க "இலவச மதிய உணவுத் திட்டம்" கொண்டு வந்தார்! படிப்பும், உணவும் அளித்தாலும் கல்வித்தரமும் உயர்ந்து இருக்க வேண்டும் என்று வேலை நேரத்தை 180  மணியில் இருந்து 200  மணித் துளிகளாக்கினார். 1959 இல் சென்னை ஐ.ஐ.டி. ஆரம்பிக்கப்பட்டது.

பாசன வசதிக்காக அவர் செய்த சேவை மறக்கமுடியாதது. கீழ் பவானி, மணி முத்தாறு, காவேரி டெல்டா, ஆரணி ஆறு, விஜய் டாம், கிருஷ்ணகிரி, புள்ளம்பாடி, பரம்பிக்குளம், நெய்யாறு டாம் போன்ற நீர்நிலைகள் புத்துயிர் பெற்றன! பவானி அணை 10  கோடி ரூபாய் செலவில் 207 ,௦௦௦ ஏக்கர் நிலத்தை கோயம் புத்தூரில் வளப்படுத்தியது. சேலம் மேட்டூர் கால்வாய் 40 ,௦௦௦ ஏக்கரையும், 30 கோடி செலவிட்ட பரம்பிக்குளம் ஆறு, மதுரை வைகை, வட ஆற்காடு சாத்தனூர் என ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பசுமையில் குளித்தன! மொத்தம் 150 லட்சம் ஏக்கர் நிலம் (இதில் 56 லட்சம் நிரந்தர நீர் வசதி படைத்தவை) தமிழனின் கிடங்கினை நிரப்பியது. இது மட்டுமல்ல! 2 ,௦௦௦ கிணறுகள் தோண்டப்பட்டன! 25 % விவசாயக் கடன் நெடுநாள் கெடுவோடு வழங்கப்பட்டது. தவணை முறையில் எண்ணெய் என்ஜின், எலெக்ட்ரிக் பம்ப் வழங்கப்பட்டன.

காமராஜர் ஆரம்பித்து வைத்த தொழில் துறைகளோ இன்னொரு பெரிய பட்டியல் ஆகும். நெய்வேலி சுரங்கம்,நீலகிரி  கச்சா பிலிம் தொழில், அறுவை உபகரண உற்பத்தி-கிண்டி,சர்க்கரை,பை-கார்போ-நெட், சிமெண்ட் தொழிற்சாலைகள், ரயில்வே கோச் பாக்டரி, பெரம்பூர்,மேட்டூர் பேப்பர் இண்டஸ்ட்ரி, ஊட்டி நெய்வேலி பவர் ஸ்டேஷன் என்று தமிழ் நாடு கண்ட மேன்மைகள் ஏராளம். காமராஜரின் எண்ணிலடங்கா நற்காரியங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாரத அரசு மிக உயர்ந்த பட்டமான "பாரத ரத்னா" விருதினைக் கொடுத்து கௌரவித்தது. சென்னை விமான நிலையம் "காமராஜ் டெர்மினல்" என்றழைக்கப்படுகிறது. "மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்" அவர் பெயர் தாங்கி பெருமை கொள்கிறது.

எனினும் சாமான்யர்கள் நெஞ்சில் அவர் இன்றும் நிலைத்து நிற்பதே அவருக்கு மக்கள் செலுத்தும் உண்மை அஞ்சலி. காந்திஜியின் சரியான வாரிசாக வாழ்ந்து காட்டிய திரு காமராஜர்2 - 10 - 1975 இல் புகழுடம்பு எய்தினார்.

திரு தேவராசு