பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 27 février 2014

புதிய தொழில் நுட்ப படிப்புகள்


ஏவியேஷன், ஸ்பேஸ், டெலிகம்யூனிகேஷன், ஜி.ஐ.எஸ் அன்ட் ரிமோட் சென்சிங் சட்டம் ஆகிய பிரிவுகளில் பல புத்தாக்க படிப்புகளை இந்த 2013ம் ஆண்டில், ஐதராபாத்தின் நல்சார் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.
இப்படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், சர்வதேச அளவில் டெலிகாம் மற்றும் ஏரோஸ்பேஸ் துறைகளில் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறும் நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக, நல்சார் பல்கலையின் பாடத்திட்ட வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். வான்வழிப் போக்குவரத்து மேலாண்மை, ஏவியேஷன், ஸ்பேஸ் மற்றும் டெலிகாம் சட்டங்கள் ஆகிய துறைகளில் சிறப்பு படிப்புகளை மேற்கொண்டவர்கள், ஏர்லைன் துறையில், ஏர்லைன் மேலாளர்கள், வணிக மேம்பாட்டு மேலாளர்கள், மார்க்கெடிங் மேலாளர்கள், பாதுகாப்பு மேலாளர்கள், ஆபரேஷன் மேலாளர்கள், இன்டர்நேஷனல் ரிலேஷன் மேலாளர்கள், ஏவியேஷன் சட்ட நிபுணர்கள், விமானப் போக்குவரத்து மேலாளர்கள், மனிதவளத் துறை மேலாளர்கள், நிதி மேலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழலியலாளர்கள் ஆகிய பணி நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதிக்க முடியும்.

ஃபேஷன் டெக்னாலஜி:
இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம், தொலை நிலைக் கல்வி முறையில் ஃபேஷன் டெக்னாலஜி படிப்பை நடத்தி வருகிறது. டெக்ஸ்டைல் டிசைன், பேஷன் மெர்ச்சண்டைசிங் அண்ட் ப்ரோடக்க்ஷன் பிரிவுகளில் ஓராண்டு, 2 ஆண்டு பட்டப் படிப்பு, 4 ஆண்டு பட்டப் படிப்புகளை நடத்தி வருகிறது.

தொடர்புடைய படிப்புகள்
ஃபேஷன் டிசைனிங் படிப்புடன் கடந்த சிலஆண்டுகளாக ஃபேஷன் ஸ்டைலிங், ஃபேஷன் மீடியா கம்யூனிகேஷன், ஃபேஷன் பிசினஸ் மேனேஜ்மெண்ட், ஃபேஷன் ரீடெய்ல் மேனேஜ் மெண்ட், ஃபேஷன் மார்க்கெட்டிங் போன்ற படிப்புகள் நிஃப்ட், பேர்ல் அகாதெமி, டபிள்யூ.எல்.சி. கல்லூரி போன்ற நிறுவனங்களில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. வித்தியாசமான சிந்தனையும், நுணுக்கமான விஷயங்களை கவனிக்கும் திறமையும் கொண்டவர்களுக்கு இந்தத் துறைகள்  பணத்தை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. உலகின் முன்னணி பேஷன் நிறுவனங்கள் பலவும் இந்திய சந்தையில் நுழைய ஆர்வம் காட்டி வருகின்றன. சிறந்த கற்பனை வளம், மார்கெட்டிங் யுக்தி போன்ற திறன்களை பெற்றிருந்தால் மேலும் சாதிக்கலாம்.வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு நிச்சயம்.

பயோ டெக்னாலஜி:

20-ம் நூற்றாண்டை ஆட்டிப்படைத்தவை மூலக்கூறு அறிவியலும், கணினி அறிவியலும் என்றால் 21-ம் நூற்றாண்டை ஆட்டிப் படைக்க இருப்பது உயிரி தொழில்நுட்பமும், நானோ தொழில் நுட்பமும்.

உயிரி தொழில் நுட்பம் மூலம் அறுவைச் சிகிச்சை இல்லாமல் பிளாஸ் டிக் சர்ஜரி, மூட்டுவலி, புற்றுநோய், பாரம்பரிய நோய்கள், மரபணு நோய்கள் என மருத்துவத்துறையில் பயன்படுத்தி தீராத நோய்களைத் தீர்க்கலாம்.
ஜெனிட்டிக்கல் முறையிலான புதிய வகை தாவரங்கள் கண்டுபிடிப்பதிலும், இருதய நோய்களை குணமாக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் தயாரிப்பதிலும் உயிரி தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும்.
வருங்காலத்தில் உணவு பதப்படுத்துதல் துறைக்கு, உயிரி தொழில் நுட்பத் துறை பயனுள்ளதாக விளங்கும். இத்துறை வல்லுநர்களின் தேவை அதிகரிக்கும் என்பதால் இப்படிப்பை பலர் மேற்கொள்கின்றனர்.

பயோஇன்ஃபர்மேடிக்ஸ்:
  எனப்படும் உயிரியல் தகவல் தொழில்நுட்பம் இன்றைக்கு அதிகவேகமாக உலகில் வளர்ந்துவரும் துறைகளில்ஒன்றாகும். உயிரியல் துறையில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிகளை புகுத்துவதுதான் பயோஇன்ஃபர்மேடிக்ஸ். 
நோய்களுக்கான புதியபுதியமருந்துகள், சிகிச்சைமுறைகள் முன்னேறிவரும் இந்த காலகட்டத்தில் உயிரியல் தொடர்பான பலஆராய்ச்சிகளை செய்ய இந்த பயோஇன்ஃபர்மடிக்ஸ் துறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire