கண்களில் துாசி விழுந்தால் கண்களைக் கசக்க வேண்டாம். வலது கண்ணில் என்றால் இடது கால் பெருவிரல் நகத்தையும், இடது கண்ணில் என்றால் வலது கால் பெருவிரல் நகத்தையும் சிறிது நேரம் நன்றாக அழுத்தித் தேய்த்தால் துாசி கண் ஓரத்தில் ஒதுங்கிவிடும்.
தீக்காயம் அல்லது சூடுபட்டால் அந்த இடத்தில் சமையல் எண்ணையைத் தடவி, அதன் மேல் பொடி உப்பைத் துாவி மெல்லத் தடவி விட்டால் புண்ணாகாது.
வயிற்றுப் புண்ணுக்குத் தினமும் காலையில், வெறும் வயிற்றில், 5 முழுமிளகை வாயில் போட்டுத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
கழுத்து வலி உள்ளவர்கள் உறங்கும் போது தலையணையைத் தவிர்ப்பது நல்லது.
முகம் வழுவழுப்பாக, தினமும், தக்காளிக் கூழும் அரைத் தேக்கரண்டி தயிரும் முகத்தி்ல் பூசி ஐந்து நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும்.
இளைப்பதற்கு, கொள்ளை (லான்த்தீய்) வேகவைத்து, அந்த நீரைப் பருகிவரவும்.
முகச் சுருக்கம் போக, கடலை மாவுடன் தயிர் கலந்து தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
வெயிலில் முகம் கருக்காமலிருக்க, தினமும், சிறிது பாலில் குளிர் நீர் கலந்து தடவவும். தானே காய்ந்த பின் கழுவ வேண்டும்.
கால் பித்த வெடிப்புக் குறைய, குளிப்பதற்கு முன், வெது நீரில் 10 நிமிடம் காலை வைத்திருக்க வேண்டும்.
களைப்பு நீங்க, சாக்லேட் சாப்பிடலாம். மூளையின் நுண்ணறிவுத் திறனை அது மேம்படுத்துவதால், உடன் சுறுசுறுப்பு ஏற்படும்.
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காலையில் திடுமென படுக்கையை விட்டு எழாது, பக்கவாட்டில் படுத்து சிறிது நேரமும், கட்டிலில் உட்கார்ந்து சிறிது நேரமும் இருந்தால் தலை சுற்றல் இருக்காது.
- மலச்சிக்கலுக்கு வாழைப்பழம் நல்ல பலன் தரும். ஊட்டச்சத்து நிறைந்த இது, நோய்த்தடுப்பு மருந்தும் ஆகும்.
- பசியைத் தோற்றுவிக்க இஞ்சி உதவும். நாக்கில் ருசி தெரியாக் குறையைப் போக்கும்.
- தினசரி தேன் சாப்பிட நரம்புத் தளர்ச்சி குறையும். பாலை விட தேன் ஆறு மடங்கு சக்தியானது.
- நீரிழிவு நோயுள்ளவர்கள் இன்சுலின் நிறைந்த சின்ன வெங்காயத்தைத் தாராளமாக உபயோகிக்கலாம்.