சமூக உரிமைகள் -
கீழ்கண்ட உரிமைகளை 1946 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் தரப்படும்:
- வேலைக்கு செல்வதற்கான உரிமை,
- பந்த் நடத்துவதற்கான உரிமை,
- உடல் பேணலுக்கான மருத்துவ பாதுகாப்பிற்கான உரிமை,
- படிப்பிற்கான உரிமை ( 16 வயது வரை கட்டாயமாக பள்ளிக்கு செல்ல வேண்டும்.)
ஒற்றுமை மற்றும் குடும்ப வாழ்க்கை -
குடும்பத்தில் கணவனும் மனைவியும் விட்டுக்கொடுத்தும், ஒருவருக்கொருவர்
மதித்து நடத்தல் வேண்டும்.
ஒவ்வொருவரும் மற்றொருவரின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும்.
கல்யாணம் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு நடைபெற வேண்டும்.
பெற்றோர்களும் இதற்கு அவர்களுடைய மனப்பூர்வமான சம்மதத்தை
தெரிவித்திருக்க வேண்டும்.
தங்கள் குழந்தைகளின் நலனிற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும். மேலும்
அவர்களை ப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு -
பாதுகாப்பே பிரஞ்சு நாட்டின் தலையாய கடமையாகும். மனித உடலை ஒரு
பொருளாகவோ அல்லது ஒரு சாமானாகவோ கையாளப்படுவதை இந்நாடு
ஒருபோதும் அனுமதிக்காது.
உடல் ரீதியான வன்முறை, பாலிய கொடுமை சட்டப்படிக் குற்றமாகும்.
அதே போன்று கட்டாயப்படுத்தி வேலையை வாங்குதல், அடிமைப் படுத்துதல்,
மனித உடலில் கள்ளக்கடத்தல் செய்தலும் பிரஞ்சு நாட்டின் சட்டத்திற்கு
புறம்பானது.
-தொடரும்-