எல்லா மொழிகளும் காலப்போக்கில் சமூக மாற்றங்களை தங்களுள் ஏற்று மாறுபடுவதை யாராலும் தடுக்க முடியாது. தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல! அப்படி மாறாத ஒன்று மறைந்தொழியும். இன்றுவரை தமிழ், கணணி ஏறியும்
சாதனைப் படைக்கிற தென்றால் அது நாணல் போல வளைந்தும், நிமிர்ந்தும் தன்னைக் காத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். சிலவேளைகளில் திரிபு உடையதாயினும் சொற்கள் மரபு நிலைக் குன்றாது, பொருள் மாறாது
வழங்குகின்றன. சில பொருள் மாறினும் பண்பாட்டுக்குள் அடங்கி கலாச்சாரத்தைக் காப்பனவாகவே இருக்கின்றன. இதுவே தமிழின் சிறப்பு!
1 . மேய்த்த - மேய்ச்ச (தகரம் சகரமாவது)
'ஊர் மேய்ச்சக் கழுதை உருப்படாது'.2 . ஐந்திலே - அஞ்சிலே (மெல்லெழுத்து அடுத்த
இனமான வல்லெழுத்து பொருந்தல்)'அஞ்சிலே வளையாதது ஐம்பதில் வளையாது'
3 . விளக்கு - வெளக்கு (இகரம் ஏகாரமாதல்)
'வெளக்க மாத்துக்குப் பட்டுக் குஞ்சமா?'4 . உலகம் - ஒலகம் (உகரம் ஒகாரமாதல்)
'உயிர் வாழ ஒழக்கரிசிச் சோறு போதும்'5 . ஒற்றுமை - ஒத்துமை (றகரம் தகரமாதல்)
'பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு'தொகுப்பு: திருமதி சிமோன்
பொருளில் மாறுபட்டுத் திரிந்த பழமொழிகள்:
அனுபவம் வாய்ந்த பெரியவர்கள், பொருள் பொதிந்த
சுருக்கமான அறிவுரைகளைக் கூறும் சொல்வழக்குகளே 'பழமொழிகள்' எனப்படும். உண்மைகளையும், படிப்பினை
களையும் உணர்த்துவதற்காகச் சொல்லப்பட்டவை அவை.
"களவும் கற்று மற" : தற்போது களவையும் கற்றுக்கொண்டு
பிறகு அதை மறந்து விட வேண்டும் எனும் பொருளில்
கொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையான வடிவம்
"களவும்கத்தும் மற" என்பதாகும். 'கத்து' என்றால் 'சூது'
என்று பொருள் .
"மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே": மண் குதிரை யில் ஆற்றில் இறங்கினால் அது கரைந்து விடும் என்றாலும்உண்மையான பொருள் 'மண் குதிரை' நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது என்பதே. நீரோட்டத்தின் சுழற்சியில் ஆற்றில் மணர்-குவியல் உண்டாகி மேடு போலத் தோன்றும். ஆனால் காலை
வைத்தவுடன் உள்ளே போய்விடும்."கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்காதே": கப்பல் கவிழ்வது போன்ற பெருந்துன்பம் வந்தாலும் கன்னத்தில் கை வைக்ககூடாது என்ற பொருளில் பார்க்கப்படுகிறது. உண்மையான பொருளோ, 'கப்பல் கவிழ்ந்து செல்வமெல்லாம் இழந்தாலும் 'கன்னம்' வைக்கும் திருட்டுத்
தொழிலைச் செய்யாதே என்று அறிவுறுத்துவதாகும்.
தொழிலைச் செய்யாதே என்று அறிவுறுத்துவதாகும்.
"அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்":
மேலோட்டமாக அடித்தால் எல்லாம் நடக்கும் என்பது போல் தோன்றுகிறது. ஆனால் இரு வேறு பொருள் இதற்கு
சொல்லப்படுகிறது:
"அடி" என்பது இறைவனின் திருவடி. என்றும்
அந்தத் திருவடியே உதவும். "அடி உதவுற" என்பது "அடி புதை உறை". அதாவது
காலடி புதைகிற உறை (செருப்பு)"கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?":
கையிலுள்ள புண்ணைப் பார்ப்பதற்குக் கண்ணாடி தேவையில்லை என்பதுபோல் தோன்றினாலும், இப்பழமொழி கூறும் பொருள் வேறு:
கையிலுள்ள புண்ணைப் பார்ப்பதற்குக் கண்ணாடி தேவையில்லை என்பதுபோல் தோன்றினாலும், இப்பழமொழி கூறும் பொருள் வேறு:
"கைப் பூண்" என்பது கையில் அணியக்கூடிய ஒரு நகை.கையில் அணிந்து கொள்ளும் நகையை அணியக் கண்ணாடி பார்க்கத் தேவையில்லை என்பதையே இது சொல்கிறது.