பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 11 septembre 2011

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

தமிழ் அழிந்துவிடக் கூடாது, அதன் மூலம் நமது
பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை
அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல
வேண்டியது நமது கடமை என்றெல்லாம் வேண்டிய-
வரைப் பேசியாகிவிட்டது. ஆனால் இது ஒரு கசப்பு
மருந்தைப் போல இளைய சமுதாயத்திக்கும், இளம்
பெற்றோருக்கும் இருக்குமோ என்ற ஐயத்திற்கு 
இடமிருக்கிறது.

ஒரு பொருளின் மதிப்புத் தெரியாவிட்டாலும், அதனால்
பெறக்கூடிய இன்பத்தை அறியும் போது அதை அடைய
வேண்டுமென்ற ஆவல், தன்னோடு அதை இருத்திக்கொள்ள
வேண்டுமென்ற ஆசை ஏற்படுவது இயல்பு. தமிழ் மீது
பற்று உண்டாக்க, அதன் சிறப்பைப் புரிய வைப்பது
இனிப்பு வழங்கி கவர்வது போன்ற சுலபமான வழி
எனத் தோன்றுகிறது.

அதனால்தான் தமிழ் கூறும் நீதி,நடுநிலை,ஒழுக்கம்,
சமரசம்,பக்தி, மனிதம் என்று  வார்த்தைகளிலேயே
எல்லோரையும் பயமுறுத்தி, தள்ளி நிறுத்தி வைப்பதைப்-
பார்க்கிலும்,

  "மான் என அவளைச் சொன்னால், மருளுதல்
                                                                அவளுக்கில்லை
   மீன்விழி உடையாள் என்றால் மீனிலே கருமையில்லை
   தென்மொழிக் குவமை சொன்னால் தெவிட்டுதல்
                                                                 தேனுக்குண்டு
   கூன்பிறை நெற்றி எனில் குறை முகம் இருண்டு போகும்"

என்று   எல்லோராலும் சுவைக்கக் கூடிய விதத்தில்
தமிழால் உண்டாகும் இன்பத்தைப் புரியவைக்க
முயன்று இருக்கிறோம்.

-திருமதி சிமோன்