காதல் என்னும் உணர்வே களிப்பில் ஆழ்த்துவது. அதை
அணுஅணுவாகச் சுவைக்க வைக்கிறது தமிழ். அந்த அன்பு
ஊற்றை எப்படி எல்லாம் வகைப் படுத்தி இரசித்து
உள்ளனர் என அறிந்து மகிழுங்கள்:
உள்ளனர் என அறிந்து மகிழுங்கள்:
வங்கணம் - காதல் வெள்குதல் - வெட்கப்படுதல்
சந்தேசம் - தூது மயல் - மயக்கம்
ஊடல் - பொய்க்கோபம் கைக்கிளை - ஒருதலைக்காதல்
சித்தசன் - மன்மதன் கற்பு - கன்னித்தன்மை
மெய்மறத்தல்-தன்னை மெல்லியள் - நளினமானவள்
மறத்தல் துடியிடை - உடுக்கைப்போல இடை
அலர்தல் - மலர்தல் நிறை அழிதல் - கற்பிழத்தல்
கூடல் - இணைதல் தழுவல் - அணைத்தல்
முத்தாடல்-முத்தமிடல் களவொழுக்கம்-பிறரறியாமல்
மருவுதல்-கட்டிப்பிடித்தல் உறவு கொள்தல்
மருள்தல்- கவர்தல் கிழவன் - கணவன்

இல்லாள்-வீட்டுக்குரியவள் மொய்த்தல்-நெருக்குதல்.
பசலை - பிரிவால் நிறம் குன்றல்
தடங்கண்ணாள் - பெருங்கண்ணுடையவள்
மடல் - கடிதம் மடலேறல் - காதல் மீதூர
ஊராருக்கு அறிவித்தல்
காமம் - உடலிச்சை
மடல் - கடிதம் மடலேறல் - காதல் மீதூர
ஊராருக்கு அறிவித்தல்
காமம் - உடலிச்சை
வார்த்தைகளில் விளையாடுவது தமிழனுக்கே உரிய கலை.
மு. கருணாநிதியின் கற்பனை இதோ:
கவிதையில் 'க' போனால் எஞ்சுவது 'விதை' (எண்ணங்கள்
கவிதையால் 'விதைக்கப் படுகின்றன)
கவிதையில் 'வி' போனால் எஞ்சுவது 'கதை' (கதைகள்
கவிதையில் உருவாக்கப்படுகின்றன)
கவிதையில் 'தை' போனால் எஞ்சுவது 'கவி' (கவிதான்
கவிதையை எழுத முடியும்)
'பரதம்' என்ற சொல்லில் 'ர' எனும் எழுத்தில் கீழே உள்ள
நீட்டலை நீக்கினால் 'பாதம்' ஆகிறது. (நடனத்திற்கு உயிர்
பாதமே!)
'ப' வை நீக்கி விட்டால் 'ரதம்' ஆகிறது. (ரதம் போன்ற
அலங்காரம் நடனத்திற்குத் தேவை)
முதல் இரண்டு எழுத்துகளையும் நீக்கி விட்டால் 'தம்' ஆகிறது .
('தம்' இல்லாமல் நடனமாட முடியாது)

இதே போன்ற வேறு வார்த்தை விளையாட்டுக்கள்:
(திருப்பிப் படித்தாலும் அதே வார்த்தைகள் வரும்)
விகடகவி தேரு வருதே!
மோரு போருமோ! மேள தாளமே!
தேயுதே! மாறுமா!
வினவி கற்க
விரைந்து சொல்லச் சிரமமான வாக்கியங்கள்:
யார் தச்ச சட்டை, தாத்தா தச்ச சட்டை!
பழுத்த கிழவி கொழுத்த மழையில் வழுக்கி விழுந்தாள்!
ஓடுற நரியிலே ஒரு நரி கிழ நரி கிழ நரி முதுகிலே
ஒரு பிடி நரை முடி!
கொக்கு நெட்டை கொக்கு நெட்டை கொக்கு இட்ட முட்டை

கட்ட முட்டை!
சரக்கு ரயிலை குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த
முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை
இறங்கவில்லை!
வாழைப் பழத்தில் வழுக்கித் தாழைப் புதரில் விழுந்தாள்!
கடலோரத்திலே உரல் உருளுது பெரளுது தத்தளிக்குது
தாளம் போடுது!