மயக்கம் என்பது என்றுமே மனிதனின் உழைப்பின் வலி மிகுந்த அல்லது வாழ்வின் சுமை நிறைந்த நேரத்தில் தேவைப்படும் ஓர் வடிகாலாக விளங்குகிறது. ஆனால் அந்த மயக்கம் எதனால் ஏற்படுத்தப்படுகிறது என்பதில்தான் மனிதனின் தரமும் நிர்ணயிக்கப்படுகிறது.'கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி' என்றான் பாரதி! சிலருக்கு அவன் பாடலே மயக்கம் தரும். இசையும், இலக்கியமும், ஆடலும், கூடலும் என்று ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மயக்கம்! இவை வாழ்வின் சுவையைக் கூட்டுகின்றன என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை!ஆனால் தற்போது எங்கும் நீக்கமற நிறைந்து வரும் 'மது' மயக்கம் சுவைக்கு பதில் சுமையைக் கூட்டுவதாகவே உள்ளது.
'கள் என்னும் நஞ்சை உண்பவர், தூங்குகிறவர், இறந்தவர்களைப் போன்றவர்களே!' என்கிறார் வள்ளுவர். (துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார் கள்உண் பவர்)
1. 'உலக நல வாழ்வு அமைப்பு' குடிகாரர்களுக்கு 60 வகையான நோய்கள் வர வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறது.
2. உலக அளவிலான மரணங்களில் 4% மது அருந்துவதால் வருகிறது.
3. உலகின் மொத்த நோய்க் காரணங்களில் மதுவின் பங்கு 4.5%
4. இந்தியாவில் விபத்தில் காயமடைபவர்களில் 21% குடித்தவர்களாக இருக்கின்றனர்.
5. சென்னையில் மட்டும் தற்கொலை செய்து கொள்பவர்களில் 34% போதையில் இருப்பவர்கள்.
இவற்றை
விட வேலை பாதிப்பு, வருமான இழப்பு, வன்முறை, பலாத்காரம் போன்ற இன்ன பிற
மதுவால் ஏற்படும் இன்னல்கள் குடும்பங்களையும், சமூகத்தையும் பெரிதும்
பாதிக்கின்றன. இதனால் குடிப்பவரை விட, அவரைச் சுற்றியுள்ளவர் படும் துன்பமே
அதிகம்.
ஒருவருக்கு
தன் நலத்தைக் கெடுத்துக் கொள்ள உரிமை இருக்கலாம். ஆனால் ஓர் மகனாக,
கணவனாக, ஒரு சமுதாய உறுப்பினராக பிறர் வாழ்வைக் கெடுக்க நிச்சயம் உரிமை
இல்லை!
திருமதி சிமோன்
Aucun commentaire:
Enregistrer un commentaire