பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 18 janvier 2010

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம். கம்பன் கழக மகளிரணி, கழகத்தின் தமிழ் இலக்கியப் பகிர்வுடன், மாதந்தோறும் ஒரு தலைப்பினை விளக்கத்தோடு கூடிய கருத்தரங்கமாக நடத்துகிறது. நூலகம் ஒன்றை நிறுவ எண்ணிச் செயல்படும் எங்களிடம் தற்போதே கணிசமான அளவில் புத்ககங்கள் உள்ளன. இந்த வலைப்பதிவு எங்கள் ஆர்வத்தின் வெளிப்பாடாக, உயரிய முறையில் தொடரும். நாங்கள் நடத்தவிருக்கும் “மகளிர் விழா” வருகிற 11.04.2010 அன்று நடைபெறவுள்ளது.

மேலே உள்ள சின்னத்தில் காணப்படும் மங்கையர் அனைவரும் அன்பிலும் அறிவிலும், பண்பிலும் சேவையிலும், வீரத்திலும் விஞ்ஞானத்திலும், ஆன்மீகத்திலும் தன்னிகரற்றவர்கள். (அவா்களைப் பற்றிய குறிப்புகள் அவ்வப்போது வெளியாகும்).  பெண்கள் அனைவருமே அத்தகு உயர் நிலையை அடைய வேண்டுமென்ற ஆவலுடன் செயலாற்ற விழையும் எங்களைத் தங்கள் ஆதரவு ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறோம்.

தங்கள் மேலான கருத்துக்களும், படைப்புக்களும் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

-- இராசேசுவரி சிமோன்