அன்புடையீர்,
வணக்கம். 'இறைவன்', அவன்பாற்படும் ஈர்ப்பு, அதனால் விளையும் அனுபவங்கள், அந்த அடிப்படையில் உண்டாகும் நம்பிக்கை இவற்றை எந்த மொழியிலும், எந்த விளக்கத்தாலும் அளிப்பதற்கில்லை ! அதனால்தான் இன்று வரை அவன் புரியாத புதிராகவே இருக்கிறான்.
விஞ்ஞானம், கடவுளைப் படைத்தவன் மனிதன், அவனது உள்ளார்ந்தத் தனிமையைப் போக்கிக்கொள்ள, பயத்திற்குத் துணை நிற்க அவனே உருவாகிக் கொண்டது என்கிறது. அதனால்தான், தன் அச்சத்திற்குக் காரணமான பஞ்ச பூதங்கள் முதற்கொண்டு வணங்க ஆரம்பித்தான் என்று சான்றும் அளிக்கிறது. எனினும் பிரபஞ்சத்தைப் பூரணமாக அறியும் ஆவலின் ஆழமான ஆராய்ச்சிகளின் முடிவில், ஓர் ஒழுங்குபட்டக் கட்டுப்பாடு, சக்திகளின் சமனப்படுத்தப்பட்ட செயல்பாடு இவற்றுக்கு அடிப்படை எது, அது ஏன் வேறு முறையில் இல்லை என்பதற்கான பதில் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆராயாமலே ஒரு மனிதன் ஏற்றுக்கொண்டுள்ள 'ஒரு மாபெரும் சக்தி'யின் முழு இயக்கம் என்ற முடிவையே அவர்களும் முன் வைக்க வேண்டியுள்ளது.
ஆன்மிக உணர்வாளர்களுக்கோ எந்தக் கவலையும் இல்லை. அவர்களுக்கு "இறைவன்" இருக்கிறான் ! இன்பத்திலும்,துன்பத்திலும் கை கொடுக்க, ஆறுதல் அளிக்க, வழி காட்ட, தானே வழி நடத்திச் செல்ல என்று ஒவ்வொரு நிலையிலும் அவர்கள் அவனை உணர்கிறார்கள். அவர்களது ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைக்கிறது. வேறு எந்தப் புறச் சலனமும் அவர்களைப் பாதிப்பதில்லை !
இந்த ஆத்மார்த்தமான அனுபவங்களைப் புறக்கணிப்பதற்கில்லை. விஞ்ஞானம் கூறுவது போல இது மூளையின் செயல்பாடாகவே இருந்தாலும், அவர்களே மூளையின் ஒரு பகுதியைத்தான் நாம் உபயோகிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்றும் சொல்கிறார்களே ! அதனால் ஆன்மிகவாதிகள் சராசரி மனிதர்களைப் போலன்றி சற்றே அதிகமாக 'அறிவின் வழி பெற்ற ஞானம்' மூலம் இந்த அனுபவங்களைப் பெறுகிறார்கள் என்று கொள்ள வாய்ப்பிருக்கிறதே !
போட்டியிட்டுத் தன் நிலையை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும் இந்தக் காலக் கட்டத்தில், எப்படி எல்லோரும் வெற்றியின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு விளக்கம் தேவை இல்லை. 'கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெற, வியர்த்தமான எத்தனை கடும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன என்பதை அறியும்போது மனிதனின் புகழ் ஆசை அவனை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். (வருங்காலத்தில் 'புகழ்' வெளிச்சத்தில் ஒருவன் 15 நிமிடங்களே இருக்க முடியுமாம். ஏனெனில் அதற்குள் இன்னொருவன் அவன் இடத்திற்கு வந்து விடுவானாம்!) ஆனால் அந்த நிலையை அடைந்தபின், முழு திருப்தியை அவன் அடைந்து விட்டானா என்பதுதான் முக்கியம். தானே தன் சாதனையை முறியடிக்க முயல்வதும், அல்லது வேறு வகைகளில் மீண்டும் ஈடுபடுவதும் அவனது நிறைவற்ற நிலையையேக் காட்டுகிறது ! ஆனால் இதையே ஒரு வேதாந்தி , "நீ பெறும் இன்பம் நிலையற்றது" என்று கூறினால் அது வேலையற்ற ஒருவனின் வீண் பிதற்றல் என்கிறோம். உன்மத்த நிலையில் மட்டுமே இப்படிச் சிந்திக்க முடியும் என்பது உண்மையானால், உலகின் போக்கைச் சிறிதேனும் மாற்றும் சக்தி படைத்த அறவுரைகளையும், ஞானத்தையும் அளித்த ஞானிகள் அனைவருமே உன்மத்தர்கள் தானா!?
தனிப்பட்ட ஒருவன் தன் அனுபவத்தால் கூறும் இதே உண்மையைத்தான் மதங்கள் தங்கள் செயல்பாடுகளால் புரியவைக்க முயல்கின்றன.ஒரு சில நிலைகளில், அங்கே இருந்து உழைப்பதும் பலவீனம் கொண்ட மனிதர்கள்தாம் என்பதால், ஒரு சில தவறுகளோ அல்லது தவறான முன்னுதாரணங்களோ காணக் கிடைக்கலாம். எனினும் பெரும்பாலோரின் ஆன்ம ஈடேற்றத்திற்கு அவை வழிகோலுகின்றன என்பதில் ஐயமில்லை ! "இறைவன் அல்லது மூலக் காரணமான - ஆதியும், அந்தமுமான மகத்தானச் சக்தியின் கூறு" ஆகிய "நீ", "உன்னை" உணர்வதை விடுத்து, உன் சக்தியைப் பயனில்லாதச் செயல்களில் விரயம் செய்யாதே என்று சொல்லி, மக்களின் அறியாமையைப் போக்க அவை உழைக்கின்றன.ஆனால் இவ்வுலக வாழ்வுக்கு "அறியாமை" மிகவும் அவசியம், குழந்தையின் பேதைமை போல. பேதைமை இருக்கும் வரைதான் அது குழந்தை. அந்தத் தூய நிலை திரிந்த பின் எல்லாக் கசடுகளும் மனதை ஆட்கொள்கின்றன. அறியாமை இருக்கும் வரைதான் மனிதன். சுயநலத்தோடு, 'தான், தன் குடும்பம்' என்ற கூட்டுக்குள் இருப்பான். அது நீங்கியபின் கொட்டைக்குள் ஒட்டாத விதையாகத் தனித்துப் போவான் !
"ஆன்மிகம்" பற்றி அறியாதோர் இல்லை. அதிகம் தெரிந்த ஒன்றைத் தான் அதிகம் பின்பற்ற மாட்டோம்; எல்லாமாக விளங்கும் தாயைப் போற்றாதிருப்பது போல ! எனவேதான் இது பற்றி சற்றே சிந்திப்போம் என்று தோன்றியது.
இந்தியா ஒரு ஆன்மிகக் கடல். தெய்வீகச் சிந்தனையை அது எப்படியெல்லாம் ஊட்டுகிறது என்பதை அடுத்துப் பார்ப்போம்.
திருமதி சிமோன்

Aucun commentaire:
Enregistrer un commentaire