ஒளியை ஓர் மின் காந்த அலை என்று கூறுகிறார்கள். வானவில்லின் நிறம் கொண்டு சிவப்பு-ஊதா கதிர்கள் இடையே உள்ளக் கதிர் வீச்சு என்றும் சொல்லலாம்.
இது "அலை-துகள்" என இரு தன்மை கொண்டது.
வெற்றிடத்தில் கிட்டத்தட்ட வினாடிக்கு ஒன்றே முக்கால் லட்ச மைல்களுக்கு மேல் வேகம் கொண்டது.
ஒளி ஓர் ஊடகத்தின் வழியே செல்கையில் சிதறி, அதன் அலை நீளத்தில் மாற்றம் நிகழ்கிறது. இது "ராமன் சிதறல்" அல்லது "ராமன் விளைவு" எனப்படுகிறது.
ஒரு ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்துக்குச் செல்கையில் அதன் பாதையில் விலகல் ஏற்படுவதுண்டு. (உதா.) காற்றிலிருந்து கண்ணாடிக்கு, கண்ணாடியிலிருந்து காற்றுக்கு)
ஒரு பொருளில் பட்டுத் தெறிப்பது "பிரதிபலிப்பு".
நமக்கு நன்கு தெரிந்தக் கதிரவன் ஒளியில் 44% மட்டுமே நம் பார்வைக்குரியதாக உள்ளது. மிகுதி புற ஊதாக் கதிர்களாக உள்ளன.
1900 இல் மாக்ஸ் பிளான்க் என்பவர் கருப்பொருள் கதிர் வீச்சை, ஒளியலை அதிர்வு எண்களைப் பொறுத்து, ஆற்றலை இழக்கவோ பெறவோ செய்ய முடியும் என அறிந்தார். இவ்வொளி ஆற்றல் கட்டிகள் "குவாண்டம்" எனப்படும்.
ஒளிப்பாதை:
பழனி அருகே ஆண்டிப்பட்டி மலைப்பகுதியில் ஆறாயிரம் ஆண்டுகள் பழமையான "சவுக்கை" (பெருங்கற்களால் ஆன ஓர் அமைப்பு) உள்ளது. இது ஆய்த எழுத்துப் போல இரு உருண்டைப் பாறாங்கற்களை, ஒரு பலகை போன்ற பாறாங்கல் கொண்டு மூடுவது. இடைச் சங்கத் தமிழர் சூரிய ஒளி நகரும் பாதையைக் கணிக்க உபயோகப்படுத்தியது. ஆறு மாதங்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் (தட்சணாயன காலம்), ஆறு மாதங்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் (உத்தராயண காலம்) இது உள்ளது. சவுக்கையிலுள்ள துவாரம் வழியாக, சூரிய உதயத்தின் போது, ஒளிக்கதிர்கள் செல்லும் திசையைக் காணலாம்.
இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இது போன்று உள்ளன.
Aucun commentaire:
Enregistrer un commentaire