பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 décembre 2013

விளக்கேற்றல்

                                                                    



தமசோ மா ஜோதிர் கமய
(இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்: பிருஹத் ஆரண்யக உபநிஷத்)

மாணிக்கவாசகப் பெருமானும் இறைவனை "ஒளி வளர் விளக்கே' என்றும்; "சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே' என்றும் பலவாறு போற்றியுள்ளார்

சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான திருவருட் பயன் உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டதுஇந்நூலின் ஏழாம்பத்து "உயிர் விளக்கம் " 68 -ஆவது குறட்பா:C

உற்கை தரும் பொற்கை உடையவர்போல் உண்மைப்பின்

நிற்கை அருளார் நிலை.

பொருள் : இருளில் நடப்போர் தீப்பந்தத்தை ஏந்தி வருகிறவன் முன்னே செல்லத், தாம் அவன் பின்னே செல்வர். அதுபோலப் பாசப் பற்றாகிய இருளை விலக்கி ஞானநெறியிற் செல்லும் உயிர்களுக்கு உதவியாக இறைவன் தனது திருவருள் ஒளியை வழங்கி வருகின்றான். உயிர் அவனுக்குப் பின் நிற்றலே திருவருளை முற்றப் பெறும் முறையாகும்.என்கிறது.

 இறைவனைப் பூஜிக்கும் முறைகளில் தீபாராதனை சிறப்பான இடத்தைப் பெறுகிறது.இறைவனே தீப வடிவில் விளங்குகிறார். நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம் என்பதை எடுத்துக் காட்டவே தீபாராதனை செய்யப்படுகிறது.

கற்பூர தீபாராதனை:
கற்பூரம் என்பது ஒரு விநோதமான ஹைட்ரோகார்பன் பொருள். இதை எரிக்கும்போது பதங்கமாதல் (சப்ளிமேஷன் ) என்னும் முறையில் எரிகிறது. அதாவது அந்தப் பொருளை சூடு படுத்தும்போது திட நிலையில் இருந்து திரவ நிலைக்குச் செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்குப் போய்விடும்.
கற்பூர தீபாராதனைக்குப் பிறகு பிரசாதமாக கொடுக்க அதில் எதுவுமே மிஞ்சாது. இதரவகை வழிபாடுகள் மூலம் நைவேத்தியம் மிஞ்சும். அதை பிரசாதமாக கொடுப்பதற்கு வழி உண்டு. கற்பூரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டு ஒளி கொடுப்பதைப்போல நாமும் மற்றவர்களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த தீபாராதனை செய்யப்படுகிறது. மேலும்  கற்பூரம் போல வெள்ளை உள்ளம், தூய உள்ளம் உடையோர், இடைப்பட்ட நிலைகளைக் கடந்து நேராக இறைவனிடத்தில் ஐக்கியமாகலாம் என்பதையும் கற்பூர ஆரத்தி நினைவுபடுத்துகிறது.

வீடுகளில் முன்பகுதியில் அமைந்த முற்றங்களில் மகளிர் மாலை நேரத்தில் விளக்குகளை வைத்து நெல், மலர் இட்டு வழிபட்ட செய்திகள் நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி முதலிய இலக்கியங்களில் உள்ளன.
விளக்கேற்றுவது என்பது வெளிச்சம் பெறுவதற்கான நிகழ்வு. இருள் எண்ணும் அறியாமையைப் போக்கி அறிவு என்னும் வெளிச்சம் பெருகிறோம்.எனவே தான்  அனைத்து சமய சமூகத்திலும் அது நெய்விளக்காக இருந்தாலும் சரி, விலங்கு கொழுப்பில் செய்யப்பட்ட மொழுகுவர்த்தியாக இருந்தாலூம் சரி விளக்கேற்றி வழிபடும் பழக்கம் வந்தது.மேலும் விளக்கு மங்களத்தை  உண்டு செய்வதால் எல்லா  விழாக்களிலும், விசேஷங்களிலும் விளக்கேற்றுவது முதலாவதாக  நடைபெறும் மங்கள வைபவமாக அமைகின்றது.

குத்துவிளக்கு :
இந்தியாவின் மரபு சார்ந்த விளக்குகளுள் தலையாயதாகும். மங்களகரமான அடையாளங்களுள் ஒன்றாக  கருதப்படும் இவ்விளக்கு, சமய சார்பான சடங்குகளுக்கும், மற்றும் பொது  விழாக்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய்நாதம், திரிபிந்து, சுடர்அலை மகள், சுடர்கலை மகள், தீ - மலை மகள். இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும் என்பது வழக்காகும்.குத்துவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றித் தொழுவது நலம் தரும். முதலில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிய பிறகுதான் திரியிட்டுத் தீபம் ஏற்ற வேண்டும்.குத்து விளக்கில் தாவர நெய்களே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோயில்களில் முற்காலத்தில் பசு நெய்யையும் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.



அகல் விளக்கு:
 எண்ணெய் விளக்கின் ஒரு வகையாகும். இது பொதுவாக களிமண்ணால்  செய்யப்பட்டு மெழுகில் தோய்க்கப்பட்ட பருத்தி திரியால் நெய்  அல்லது காய்கறி எண்ணெய் கொண்டு எரியூட்டப்படும். சில  நிகழ்வுகளில் பித்தளையால்  ஆன விளக்குகள் பயன்படுத்துவதும் வழக்கில் உள்ளது. கார்த்திகை மாதம் வந்தாலே பெரும்பாலான வீடுகளின் மாடப் பிறையில் மண்ணால் ஆன அகல் விளக்குகள் சுடர் விட்டு எரிந்துகொண்டிருக்கும்

மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குப் போல், மனித வாழ்வும் மண்ணில் தான் தொடங்குகிறது. கை தவறியோ, காற்றிலோ தள்ளப்பட்ட விளக்குகள் உடைந்து விடுகின்றன. அது போலத்தான் மனித வாழ்வும் நிலையில்லாதது. மண்ணில் ஆரம்பிக்கும் வாழ்வு, மண்ணிலேயே முடிகிறது.தனக்கு என்று கொடுக்கப்பட்ட ஆயுள் காலத்திற்குள் மனிதன் சாதனைகளைச் செய்ய வேண்டும். நல்லவனாக வாழ வேண்டும்
மனித எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சுடர் தெளிவாக நமக்கு காட்டுகிறது. எந்த நிலையிலும் விளக்கின் சுடரானது மேல் நோக்கியே எரியும். அது போல் மனிதனும் எப்போதும் உயர்வான எண்ணங்களை வளர்த்துக்கொள்வதோடு அதற்காகப் பாடுபட்டால் உயர்வு என்பது உறுதி. விளக்கில் ஊற்றப்படும் எண்ணெயும் ஒரு தத்துவத்தை விளக்குகிறது. ஊற்றிய உடன் எண்ணைய் எங்கும் வியாபித்து எல்லா இடங்களையும் தொடுவது போல், மனிதனும் பிரபஞ்சம் எங்கும் உள்ள இறைவனின் கருணையை உணர வேண்டும்

மெழுகுவர்த்தி அல்லது மெழுகுதிரி என்பது மெழுகை எரிபொருளாகக்   கொண்டு  ஒளி தருவது. கெட்டி மெழுகின் நடுவே நூல் திரி ஒன்றைக் கொண்டிருக்கும். நெருப்பைப்  பற்ற வைத்ததும் மெல்ல மெல்ல அருகில் உள்ள மெழுகு இளகும். இதனால் திரியில் உள்ள தீ தொடர்ந்து எரியும்.கிறித்தவ சமய வழிபாட்டில் மெழுகுவர்த்தி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

பாஸ்கா மெழுகுத்திரி : (இயேசுவை குறிப்பது) இந்த மெழுகு தன்னையே கரைப்பதால் மட்டுமே ஒளி தரமுடியும். இந்த மெழுகு உருவாக பல தேனீக்கள் இணைந்து உழைக்க வேண்டியிருந்தது . விசுவாசிகளாகிய நாம் ஒருங்கிணைந்து உழைப்பதன் வழியாகவும், நம்மையே தியாகம் செய்வதன் வழியாகவும் இந்த உலகை நாம் ஒளிமயமாக்க முடியும்.

தொகுப்பு:
லூசியா லெபோ


 


Aucun commentaire:

Enregistrer un commentaire