பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 27 juillet 2011

இன்றைய அறிமுகம்



பெருந்தலைவர் காமராஜ்


தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக இருந்த இவர் "கர்ம வீரர்", "கிங் மேக்கர்"என்றெல்லாம் அழைக்கப்பட்டவர். இராமநாதபுரம் மாவட்டத்தில் விருதுப்பட்டி கிராமத்தில் தேங்காய் வியாபாரியான குமாரசாமிக்கும், சிவகாமி அம்மையாருக்கும் 1903  ஜூலை 15 ஆம் தேதி பிறந்தார். 6 வயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். சுதந்திர உணர்வும், நாட்டுப்பற்றும்,மக்கள் மீது கொண்டஅக்கறையும் அவரை "படிக்காத மேதை"யாக, காமராஜர ஆட்சி திரும்ப வராதா என்று எல்லோரையும் ஏங்f வைக்கும் விதமாக உருவாக்கியது. நேர்மையும், எளிமையும் கொண்ட அவர் காந்திஜியின் உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டு, 1930 இல் அலிப்பூர் ஜெயிலில் இரண்டு வருடம் இருந்தார். 1940 இல் வார்தாவுக்குச் சென்று சத்தியாக்கிரகிகளின் பெயர்களை காந்தியிடம் சமர்ப்பிக்கச் சென்றபோது கைதாகி வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் முனிசிபல் கவுன்சில் தேர்தலில் வென்றுசேர்மன் ஆனார். ஆனால் தன் மனச்சான்றுக்கு அது ஏற்காத தால் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டார். 1942 இல் "வெள்ளையனே வெளியேறு" எதிர்ப்பில் மீண்டும் 3 வருடங்கள் அமராவதி சிறையில் இருந்தாலும் தன் அறிவைவளர்த்துக்கொள்ளும் வகையில் பல புத்தகங்களைப் படித்து நாட்களைப் பயனுறக் கழித்தார்.

1945 இல் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி ப்ரெசிடென்ட் ஆனார். அவரது குரு சத்தியமூர்த்தி மூலம் மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலர் ஆகவும் இருந்து கட்சியைப் பலப்படுத்தினார்.1954 முதல்  9 ஆண்டுகள் தமிழக முதலமைச்சராகவும், 1952 - 54 , 1969 -75 பார்லிமென்ட் உறுப்பினர் ஆகவும் பணியாற்றினார். இந்தியதேசிய காங்கிரஸ் முதுகெலும்பாக இருந்து 1964 இல் லால் பகதூர் சாஸ்திரியையும், 1966 இல் இந்திரா காந்தியையும் நாட்டின் பிரதமராக்கினார். வயதானவர்கள் பதவி விலகி கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற அவரது கருத்து "காமராஜர் பிளான்" என்றே அழைக்கப்பட்டது.
காமராஜர் தம் ஆட்சிக் காலத்தில் செய்த நன்மைகள் எண்ணிலடங்காதவை. அவரை இன்றளவும் நன்றியுடன் நினைவுகூரத் தக்க வகையில் ஆற்றிய பணிகளில் சில:
ராஜாஜி காலத்தில் மூடிய 6 ,௦௦௦ பள்ளிகளை மீண்டும் திறந்து, மேற்கொண்டு 12 ,௦௦௦ பள்ளிகளை (உலகிலேயேமுதன் முறையாக) திறந்தார்!  மொத்தம் இருந்த 12 ,௦௦௦ (7 %) பள்ளிகள் இவராட்சியில் 27 ,௦௦௦ (37 %) பள்ளிகளாக உருவெடுத்தன! ஏழை குழந்தைகளின் வயிற்றுப் பசியையும் போக்க "இலவச மதிய உணவுத் திட்டம்" கொண்டு வந்தார்! படிப்பும், உணவும் அளித்தாலும் கல்வித்தரமும் உயர்ந்து இருக்க வேண்டும் என்று வேலை நேரத்தை 180  மணியில் இருந்து 200  மணித் துளிகளாக்கினார். 1959 இல் சென்னை ஐ.ஐ.டி. ஆரம்பிக்கப்பட்டது.

பாசன வசதிக்காக அவர் செய்த சேவை மறக்கமுடியாதது. கீழ் பவானி, மணி முத்தாறு, காவேரி டெல்டா, ஆரணி ஆறு, விஜய் டாம், கிருஷ்ணகிரி, புள்ளம்பாடி, பரம்பிக்குளம், நெய்யாறு டாம் போன்ற நீர்நிலைகள் புத்துயிர் பெற்றன! பவானி அணை 10  கோடி ரூபாய் செலவில் 207 ,௦௦௦ ஏக்கர் நிலத்தை கோயம் புத்தூரில் வளப்படுத்தியது. சேலம் மேட்டூர் கால்வாய் 40 ,௦௦௦ ஏக்கரையும், 30 கோடி செலவிட்ட பரம்பிக்குளம் ஆறு, மதுரை வைகை, வட ஆற்காடு சாத்தனூர் என ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பசுமையில் குளித்தன! மொத்தம் 150 லட்சம் ஏக்கர் நிலம் (இதில் 56 லட்சம் நிரந்தர நீர் வசதி படைத்தவை) தமிழனின் கிடங்கினை நிரப்பியது. இது மட்டுமல்ல! 2 ,௦௦௦ கிணறுகள் தோண்டப்பட்டன! 25 % விவசாயக் கடன் நெடுநாள் கெடுவோடு வழங்கப்பட்டது. தவணை முறையில் எண்ணெய் என்ஜின், எலெக்ட்ரிக் பம்ப் வழங்கப்பட்டன.

காமராஜர் ஆரம்பித்து வைத்த தொழில் துறைகளோ இன்னொரு பெரிய பட்டியல் ஆகும். நெய்வேலி சுரங்கம்,நீலகிரி  கச்சா பிலிம் தொழில், அறுவை உபகரண உற்பத்தி-கிண்டி,சர்க்கரை,பை-கார்போ-நெட், சிமெண்ட் தொழிற்சாலைகள், ரயில்வே கோச் பாக்டரி, பெரம்பூர்,மேட்டூர் பேப்பர் இண்டஸ்ட்ரி, ஊட்டி நெய்வேலி பவர் ஸ்டேஷன் என்று தமிழ் நாடு கண்ட மேன்மைகள் ஏராளம். காமராஜரின் எண்ணிலடங்கா நற்காரியங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாரத அரசு மிக உயர்ந்த பட்டமான "பாரத ரத்னா" விருதினைக் கொடுத்து கௌரவித்தது. சென்னை விமான நிலையம் "காமராஜ் டெர்மினல்" என்றழைக்கப்படுகிறது. "மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்" அவர் பெயர் தாங்கி பெருமை கொள்கிறது.

எனினும் சாமான்யர்கள் நெஞ்சில் அவர் இன்றும் நிலைத்து நிற்பதே அவருக்கு மக்கள் செலுத்தும் உண்மை அஞ்சலி. காந்திஜியின் சரியான வாரிசாக வாழ்ந்து காட்டிய திரு காமராஜர்2 - 10 - 1975 இல் புகழுடம்பு எய்தினார்.

திரு தேவராசு

ஜொலித்திடும் ஜூலை

எண் 7  நெப்டியூன் கிரகத்தைக் குறிக்கிறது.
இதைக் 'கேது' என்று நாம் கூறுகிறோம்.
சிறப்பாக ஜூன் 21 முதல் ஜூலை 20 -27
வரை சந்திரனின் வீடு என்பர்.

எண் 7 இன் கீழ் பிறந்தவர்கள் உலகத்தைப்
பற்றிய பரந்த, நுட்பமான அறிவுடையவர்கள்.
நல்ல எழுத்தாளர்களாகவோ, ஓவியர்,கவிஞர்
களாகவோ இருப்பர். எல்லாச் செயல்களிலும்
தனிப்பட்ட தத்துவப் போக்கு இருக்கும். செல்வம்
சேர்ப்பது பற்றி சிரத்தை இல்லாவிட்டாலும்
சொந்த எண்ணங்களால் பணக்காரராவர். அறப்-
பணிக்கு உதவுவர். நல்ல திருமண வாழ்வு
கிடைக்கும். எதிர்காலக் கவலையால் முன்னெச்-
சரிகையாக இருப்பர்.இசையை ரசிப்பார்கள்.
மதத்தைப் பற்றிய விசித்திரமான எண்ணங்கள்
உடையவர்கள்.மறைபொருள் இயலில் பற்று
உண்டு. உள்ளுணர்வு, ஐம்புலன்களால் அறியாத
விஷயங்களை அறியும் ஆற்றல் உண்டு. பிறர்
மீது செல்வாக்குள்ள காந்த சக்தி இவர்களிடம்
உண்டு. மனசாட்சியோடு காரியமாற்றுவார்கள்.
உடல் வலிமையைக் காட்டிலும் மன வலிமை
அதிகம்.




ஏழாம் மாதத்தின் ஏனைய செய்திகள்

ஜூலியஸ் சீசரின் நினைவாக பெயரிடப்பட்டது.
கிரகோரி நாட்காட்டியின் ஏழாவது மாதம்.
31 நாட்கள் உடையது. ரோமன் நாட்காட்டியில்
5 வது மாதமாக இருந்தது. ஒவ்வொரு வருட-
மும் ஏப்ரல் மாதம் போல அதே நாளில்
தொடங்கும். பிறந்த நாள் கல் 'ரூபி'. பூ-லில்லி.
கடகம்-சிம்மம் ராசிகளை உட்கொண்டது.
(22 ஜூன் முதல் 22  ஜூலை வரை கடகம்.
23 முதல் 31 வரை சிம்மம்).

இந்நாளில் பிறந்த சில பிரபலங்கள்: லுய் தே
புனேஸ், ஜாக்லின் கெனடி, டயானா சார்லஸ்.
2001 - சிவாஜி கணேசன் மறைவு.

14 ஜூலை பிரெஞ்சு நாட்டின், உலகத்திற்கே
வழி காட்டின மக்கள் புரட்சி முடியாட்சியின்
வீழ்ச்சியாக அமைந்தது.

தமிழ் ஈழப் போராட்டம்:

1975 ஜூலை 27 - விடுதலைப் புலிகளின் முதல்
 ஆயுதத் தாக்குதல்.
1983 ஜூலை 23 - திருநெல்வேலித் தாக்குதல்.
 இன்று வரை "கருப்பு ஜூலை" என்றழைக்கப்படும்
 இதில் 13 சிங்கள ராணுவர்கள் கொல்லப்பட்டனர்.
 அந்த நாளில் அது பெரும் தொகை. பிரபாகரன்
 நேரடியாக 8  இராணுவத்தினரைக் கொன்றார்.
 'கிளர்ச்சி' என்றழைக்கப்பட்டு வந்த புலிகளின்
 அமைப்பு, "போராட்டம்" என்று உலக அரங்கில்
 அறிமுகமானது.
1987  ஜூலை இறுதியில் ராஜீவ் - ஜெயவர்த்தனா
  ஒப்பந்தம் கையெழுத்தானது.
1990  ஜூலை கடலிலும் புலிகள் தாக்குதல்.
1991  ஜூலை - "ஆகாயக் கடல் வெளிச் சமர்" படைத் 
  தள மீதானத் தாக்குதல்.
2001  ஜூலை 'கட்டு நாயக்கா' விமானப் படைத்தளம் 
 தாக்கப்பட்டு கிட்டத்தட்ட 28 விமானங்கள் முற்றாக
 அழிக்கப் பட்டன. இலங்கை அரசின் 3 பயணிகள் 
 விமானம் அழிந்து, 3 சேதமாக்கப் பட்டது. பொது 
 மக்கள் பாதிக்கப் படவில்லை.

1954  வியட்நாம் வடக்கு-தெற்கு என பிரிக்கப்பட்டது.
1969   நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் அல்ட்டரின் 'அப்பல்லோ'
  விண்கலம் மூலம் சந்திரனில் நடந்த முதல் மனிதர் 
  எனப் புகழ் பெற்றனர்.

2011 ஜூலை 1 - திருவனந்தபுர பத்மநாப சுவாமி கோவிலில் 
 பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகைக் கண்டுபிடிப்பு.
2011  ஜூலை 2 - சூடான் இராணுவம் லிபியாவைத் தாக்கி,
 அல்-கப்ரா  என்ற தெற்குப் பகுதி நகரைக் கைப்பற்றியது.
2011 ஜூலை 13 - மும்பையில் 3 இடங்களில் வெடிகுண்டுத் 
 தாக்குதல். 22 பேர் பலி. 140 பேருக்கு மேல் காயப்பட்டனர்.
2011  ஜூலை 20 - கம்போடிய-தாய்லாந்து எல்லையில் 
 பிரியா-விகார் இந்து கோவிலிலுள்ள இரு நாட்டு ராணுவங்-
 களையும் ஐநா உயர் நீதி மன்றம் வெளியேற்றப் பணித்தது.
2011 ஜூலை 21 - குவாம் விடுதலை நாள் (1944 )
"நாசா"வின் 'டோன்' என்ற ஆளில்லா விண்கலம் வெஸ்டா
 சிறுகோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.
இந்தோனேசியாவின் 'சுலாவெசித்' தீவில் "லோக்கொன்"
 எரிமலை சீறத் தொடங்கியது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் 'தெற்கு சூடான்' என்ற புதிய நாடு
 உருவானது.
ரூ.32000 செலவில் மலிவு வீடுகளை அமைக்க இந்தியாவின் 
 "டாடா" நிறுவனம் முன்வந்துள்ளது. 

இணையமெனும் இனிய வலை

 காணொளி உரையாடல்

வெளி நாட்டில் இருக்கும் நம் சொந்தங்களின் குரலைக்  கேட்பது  மட்டுமல்ல அவர்களை நாம் பார்த்துக்கொண்டே பேசலாம். இதுவரை முகம்  பார்க்காமல் நட்பு வளர்த்தவர்கள் இனி ஒருவரை ஒருவர் பார்த்தபடி சாட் செய்யலாம். எந்த விளம்பர இடைஞ்சலும் இல்லாமல் வேகமாகவும் நேரடியாகவும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்கு வீடியோ வழி சாட்டிங் துணை செய்கிறது.   இது காணொளி உரையாடல் என்றும் அழைக்கப் படுகிறது. இதற்கு அதிகம் பயன் படுத்தப் படுவது  Skype என்ற மென்பொருள். ஒரு நேரத்தில் ஒரு பயனர் கணக்கைத்தான் பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் பல   Skype கணக்குகளில் தொடர்புக் கொள்ள விருப்பம் என்றால்   Multi Skype Launcher என்ற மென் பொருளைப் பயன்படுத்த வேண்டும். ஆறு வழி வீடியோ சாட்டிங் செய்யும் வசதியை ஓவூ என்ற மற்றொரு மென்பொருளும் தருகிறது.  முன்னணி வகிக்கும் சமூக இணைப்பு இணைய தளமான   பேஸ்புக, Skype தொழில் நுட்பத்துடன் இணைந்து இந்த வீடியோ சாட் செய்யும் முறையை அறிமுகப் படுத்தியுள்ளது. இவை அனைத்துமே இலவசச் சேவைகளே. 

  நட்பு, குடும்ப   உறவு  இவற்றை  மேம்படுத்தும் இந்த தொழில் நுட்பம் பள்ளிகளில், கல்லூரிகளில்   ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.    

  • இந்தத் தொழில் நுட்பத்தால்  ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்ட பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் பாடத்திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடலாம்.
  • வெளிநாட்டுப் பள்ளிகளுடன் இணைப்பு இருந்தால்  அவரவர் கலாச்சாரம், மொழி மற்றும் பல செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
  • தாங்கள் படித்த புத்தகத்தின் ஆசிரியருடன்   கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
  • பயிற்சி முகாம்களில் பங்கேற்க முடியாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே  பயனைப்  பெறலாம்.
  • பிற மொழிகளைக் கற்க நல்ல சாதனம் இந்தத் தொழில் நுட்பம் .
  •  படிப்பில் பின்தங்கி இருக்கும் பிள்ளைகள் பள்ளி நேரத்துக்குப் பிறகு பள்ளியிலோ  தங்கள் விட்டிலோ  tutors  என்ற ஆசிரியர்களின்     உதவியை பெறலாம்.
  • வெளி ஊரில் அல்லது வெளி நாட்டில் உள்ள ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் சிறப்பு  உரை ஆற்ற  பள்ளிகள் ஏற்பாடு செய்யலாம் .
 இது போன்று பல வசதிகள் பெரும்பாலும் வெளி நாட்டுப் பள்ளிகளில் நடைமுறையில் உள்ளன. நம் நாட்டில் இம்முயற்சியை மேற்கொள்ள இன்னும் சிலகாலம் காத்திருக்க வேண்டும்.  ஆனால்,
 வளர்ந்து வரும் கண்ணினி நுட்பத்தால் வணிகத்துறை, அரசுத்துறைகள், தனியார் நிறுவனங்களில்     கலந்துரையாடல், கருத்தரங்கு, பேட்டி காணுதல், பணியாளர்களை  தேர்ந்தெடுக்கும் நேர்முக பேட்டி-
interview- இவற்றிற்கு  இந்தக் காணொளி உரையாடல் பயன் படுத்தப் படுகிறது.
உங்களிடம் கணினி வசதி இருந்தால்  ஒரு சிறு காமிரா, மேற்குறிப்பிட்ட மென் பொருட்களில் ஏதாகிலும் ஒன்றைத் தெரிவு செய்து உங்கள் உறவுகள், பேரப் பிள்ளைகள், நண்பர்களுடன் அளவளாவி மகிழுங்கள்.  (எதிர் திசையில் இருப்பவர்களுக்கும் இந்த இணைப்பு வசதி இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்துங்கள்).

திருமதி   லூசியா லெபோ