
அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர். காரணம் அது முதலில் பரீட்சை வைக்கிறது. பின்னர்தான் பாடம் கற்பிக்கிறது.
வேர்ணன் சண்டர்சலா
மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆனால் அங்கேயே நீண்ட நாள் தங்க முடியாது.
பெர்னார்ட் ஷா
அறிவு இல்லாத கண்ணியம் பலவீனமானது. பயனற்றது. கண்ணியம் இல்லாத அறிவு ஆபத்தானது. அஞ்சத்தக்கது.
ஜான்சன்
தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் வேறில்லை.
காந்தி
உறுதி..உறுதி.. இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கூடக் கடினம்.
உட்வேல்
வாழ்க்கை என்பது தியாக உணர்வோடும், துணிவோடும் ஈடுபட வேண்டிய கடினமான தொழில்.
டி.டாக்குவேல்லி
வாழ்க்கை மறைபொருளாக இருப்பதால்தான் ரம்மியமாக இருக்கிறது.
காண்டேகர்
கடமை உணர்வே நேர்மையான வாழ்க்கைக்கு சூத்திரம்.
ஹென்றி
உலகில் தன் கடமையைச் சரிவரச் செய்யும் எவரும் ஒருபோதும் உலகின் மீது அதிருப்தி கொள்வதில்லை.
கதே
அன்புள்ள இதயம் எப்பொழுதும் இளமையோடு இருக்கும்.
யூதர்
தொகுப்பு:
திருமதி சிமோன்