(நேபால் விமான விபத்தில் மறைந்த குழந்தை நட்சத்திரம் 'தருணி ')
இந்த அழகு முகம் மறைந்துவிட்டது என்ற செய்தி நம் உள்ளத்தை ஊடுருவித் தாக்கவில்லை? ஒரு பூவைப்போல அசைந்தாடி கவனத்தைக் கவர்ந்த புதையல், இனி இல்லை என்ற உண்மை இதயத்தை வலிக்கச் செய்யவில்லை? இந்த அருமைக் குழந்தையை அறிந்தவர்கள், உறவினர் எப்படித் தவித்திருப்பார்கள் என்ற எண்ணம் ஏக்கத்தின் ஊடே தோன்றவில்லை? இந்த அழகுப் பெட்டகத்தை ஈன்ற அந்த முகமறியா தாயும், தந்தையும் எப்படித் துடித்திருப்பார்கள் என்ற உண்மை மனதைப் பிழிய வில்லை?
ஈர நெஞ்சம் கொண்ட யாரும் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது. கையறு நிலையில் விதியைச் சபிக்காமல் இருக்க முடியாது. இறைவனுக்கு ஏன் கருணை இல்லாமல் போயிற்று என்ற கேள்வி பிறக்காமல் போகாது. யாருக்கோ, என்றோ வந்த சோகம் என்று வாளாவிருக்க முடியாது!
எவருடைய குழந்தையோ இந்த பூமியில் இல்லாமற் போன வெறுமை இத்தகைய வலிமைக் கொண்டது என்றால், நம் உதிரத்தில் தோன்றிய, நமது இன்பத்தின் சான்றான, வழித் தோன்றலை, குடும்ப விளக்கை இழக்கும் பாரம் எத்தகையதாக இருக்கும்?
பெற்று, அதன் முகத்தைப் பார்த்தப் பின்தான் அது நம் குழந்தைய?! உருவானப் பிறகு, அதற்கு உலகைப் பார்க்கும் உரிமை இல்லையா? அந்த உரிமையைப் பறிக்க நாம் யார்?
அதுவும் அந்தக் கொலைப் பாதகத்தைச் செய்வது அதைத் தாங்கி நின்றவளையும் எப்படி மனதாலும், உடலாலும் பாதிக்கும் என்பதை இந்நினைவு தோன்றுமுன் எண்ணிப் பார்ப்பது நலம்.
அதுவும் அந்தக் கொலைப் பாதகத்தைச் செய்வது அதைத் தாங்கி நின்றவளையும் எப்படி மனதாலும், உடலாலும் பாதிக்கும் என்பதை இந்நினைவு தோன்றுமுன் எண்ணிப் பார்ப்பது நலம்.
கரு, கருப்பையில் ஒட்டுமுன் கலைப்பது சுலபம். ஆனால் அதற்கான மருந்தோ அல்லது கலைக்கும் முறையோ தாய்க்கு எமனாக மாறலாம்.
ஹார்மோன் மருந்துகளை அதிக அளவில் உட்கொண்டால், ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு, கரு ஒட்டாது வெளியேறும்.
சில உணவு வகைகள், வைட்டமின் ஏ, ஈ போன்றவற்றை மிக அதிக அளவில் உண்டால் சமச் சீரற்றத் தன்மை உருவாகி, கரு வெளியேறும்.
கரு முழுதும் வெளியேறாது, அதன் பிசிறுகள் தங்கினால், உதிரப் போக்கு நிற்காமல் இருக்கும்.
கருக்கலைப்பின் போது சுகாதாரம் மிக மிக அவசியம். இல்லையேல் தொற்றுக் கிருமிகள் மூலம் நோய்ப்பட வாய்ப்புள்ளது.
கர்ப்பப்பை வலுவிழந்து போய் விடச் சாத்தியக் கூறு உள்ளதால், பிறகு என்றைக்குமே கருத் தரிக்க வாய்ப்பில்லாமல் போகலாம்.
இறந்த பிண்டம் வயிற்றில் இருக்கும்போது ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படும்.
தாயின் ரத்தம், உறையும் தன்மை இழப்பதன் மூலம் மரணம் சம்பவிக்கலாம்.
கரு கருப்பையில் ஒட்டிய பிறகு, 12 வாரங்கள் வரை சட்ட பூர்வ கருக்கலைப்புச் செய்யலாம். ஆனால் பொதுவாக 7ஆவது வாரத்தில் கருவின் இதயத் துடிப்பு வளர்ச்சியுறுகிறது என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் அது உலகில் நடமாடத் தன் முதலடியை எடுத்து வைக்கிறது என்றுதானே அர்த்தம்? ஒரு வேளை 12 ஆவது வாரத்தில் பல்வேறு காரணங்களால் அது நின்று போக வாய்ப்புள்ளதாம். அதனால் தான் 7-12 வாரங்களில் ஸ்கேன் எடுக்கச் சொல்கிறார்கள். 'மன வளர்ச்சிக் குறைபாடு' இருந்தாலும் இதன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.
இதற்குப்பின் செய்யப்படும் கருக்கலைப்புகள் தாயின் உயிருக்கு எந்த விதமான ஆபத்தையும் கொண்டு வரலாம்.
இதை விட முக்கியமானது-தாய்மைக்கு இருப்பிடமான பெண்மை, மனதார இந்தக் கொடுமையை ஏற்காது. அவள் மனதில் முள்ளாக நெருடி, என்றும் குற்ற உணர்வை ஏற்படுத்தும்.
இன்பத்தில் சரிசமமாக பங்கு கொள்ளும் ஆணும், மனசாட்சி உள்ளவனாக இருந்தால் என்றேனும் அந்த முள் குத்தும்!
இதை விட முக்கியமானது-தாய்மைக்கு இருப்பிடமான பெண்மை, மனதார இந்தக் கொடுமையை ஏற்காது. அவள் மனதில் முள்ளாக நெருடி, என்றும் குற்ற உணர்வை ஏற்படுத்தும்.
இன்பத்தில் சரிசமமாக பங்கு கொள்ளும் ஆணும், மனசாட்சி உள்ளவனாக இருந்தால் என்றேனும் அந்த முள் குத்தும்!
திருமதி சிமோன்
Aucun commentaire:
Enregistrer un commentaire