கருக்கலைப்பு என்பது கருவை அல்லது முதிர்கருவை கருப்பையிலிருந்து முற்றாக அகற்றி விடுவதாகும். (சில சமயங்களில் தானாகவே இவ்வாறான நிலை ஏற்படும் பொழுது அது கருச்சிதைவு எனப்படும்). இது பொதுவாக வேண்டுமென்றே செய்யப்படும் கொடூரம் . இந்த சிசுக்
கொலைகள் உலகெங்கும் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன. .
கருக்கலைப்பு இன்றைய மருத்துவத்துறையின் வளர்ச்சிக்கேற்ப நவீன சாதனங்களின் உதவியுடன் பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் மலிந்து போயிருக்கும் கருக்கலைப்புக்கு பல்வேறு காரணங்கள் பல்வேறு தரப்பினரால் கூறப்பட்டாலும் ஆய்வுகளின்படி,
கருக்கலைப்புக்களில் 95 வீதமானவை குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காகவே
செய்யப்படுகின்றன. பாலியல் வல்லுறவு, குழந்தைகள் ஊனமாகப் பிறப்பதற்கான அறிகுறிகள், குழந்தை
பிறப்பதினால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் போன்றவையாலும் கருக்கலைப்புக்கள் செய்யப்படுகின்றன.கருக்கலைப்பிற்கு ஒரு சில நியாயமான காரணிகள் இருந்தாலும் அநேகமானவை
சுயநலத்திற்காக செய்யப்படுகின்றதென்பதே உண்மை.
மேற்குலக நாடுகளில்
நிலவுகின்ற, தற்பொழுது நம் நாட்டிலும் புகுந்துள்ள உடன் வாழ்வு (Living Together), தற்காலிக
திருமணம், Life partner, Boy/Girl friend போன்ற சீர்கேட்ட இவ் வாழ்க்கை முறைகளின்
விளைவாகவும் இந்தக்
கருக்கலைப்பு வீதம் அதிகரித்து வருவதாக சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டன் 1967 ஆண்டிலும் ஐக்கிய அமெரிக்கா , ஐரோப்பா 1973 ஆம் ஆண்டிலும் சிங்கப்பூர் அதற்கு அடுத்த ஆண்டிலும் கருக்கலைப்புக்கு சட்ட
அங்கீகாரம் வழங்கியுள்ளன.2007 இல் போர்த்துக்கல் இதை அமுல்படுத்தியது .
கருக்கலைப்பை ஒத்துக் கொள்ளாத
நாடுகள் பல இருக்கின்றன . சிலி,
எல்சால்வடார், மெல்ட்டா, வாடிகன் சிட்டி மற்றும்
நிக்குராக்வா போன்றவையே அவற்றில் சில.கொலம்பியாவிலும்
கருக்கலைப்பு சட்ட விரோத செயலாகும்.
எகிப்து, ஈரான், ஈராக், ஜப்பான்,
குவைத், சவுதி அரேபியா, துருக்கி,
எமிரேட்ஸ் உட்பட பல நாடுகளில்
கருக்கலைப்புக்குத் தடையில்லை. ஆனால் கருக்கலைப்பு கணவனின்
அனுமதியுடன் தான் நடக்க வேண்டும்
என்கிறது சட்டம்.
இந்தியாவைப்
பொறுத்தவரை 1971 முதல் கருக்கலைப்பு சட்டரீதியாக
ஒத்துக் கொள்ளப்பட்டது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த
வேண்டும் என்பதற்காக இது சட்டமாக்கப்பட்டது.
இந்தியாவில் பெண் சிசுக் கொலையே அதிகமாகச் செய்யப்படுகின்றது.
இந்தியாவில் தலைவிரித்தாடும் வரதட்சணைக் கொடுமையால் பெருமளவில் பெண் சிசுக்
கொலைகளே புரியப்படுகின்றன. ஒவ்வொரு
ஆண்டும் 10 இலட்சம்
பெண் சிசுக்கள் கருவறுக்கப்படுகின்றன. அதாவது தினந்தோறும் 2500
சிசுக்கள் அழிக்கப்படுகின்றன. 2007, 2008ஆம் ஆண்டுகளின் பொருளாதார
ஆய்வுகளின்படி, பெண் சிசுக் கொலைகள் சீனாவில் 45 விகிதமாகவும் இலங்கையில்
58 விகிதமாகவும் காணப்படுகின்றது.
பீஜிங்:சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும்
நோக்கத்துடன் 1971ம் ஆண்டு முதல்
ஒரு குழந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டு
வருகிறது. அதன்படி, நகரப் பகுதிகளில் ஒரு
குடும்பத்துக்கு ஒரு குழந்தை மட்டுமே
பெற்றுக் கொள்ளலாம். கிராமப் பகுதிகளில் முதல்
குழந்தை பெண்ணாக இருந்தால் 2வது
குழந்தை பெற்றுக் கொள்ளலாம். மீறினால் தண்டனை என்று சட்டம்
கொண்டு வரப்பட்டது. இதனால் அங்கு 1971 முதல்
2010 வரை 33 கோடி கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளன
என்று சீன நல்வாழ்வுத்துறை இணைய
தளம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம்
தெரியவந்துள்ளது.
இதன் எதிரொலியாக அந்நாட்டில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகமானது, பணிபுரிபவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
இலங்கையில் தற்பொழுது நாள்தோறும் ஆயிரம் கருக்கலைப்பு சம்பவங்கள்
இடம்பெற்று வருவதாக சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா 09 2013
அன்று தெரிவித்துள்ளார்.
அயர்லாந்தில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் சவிதா ஹாலப்பனவர், அங்கு அவருக்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால்
காலமானார்.தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கண்டறியப்பட்டால்,
அச்சூழலில் கருக்கலைப்பை அனுமதிக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்படும் என
அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஐரோப்பாவில் கருக்கலைப்புச் செய்யும் பெண்களில்
அதிகமானவர்கள் 25 வயதிற்கும் குறைந்தவர்கள். ஆபிரிக்காவில் 26% பெண்கள் 20இற்கும்
குறைந்த வயதில் கருக்கலைப்புச் செய்கின்றனர். அமெரிக்காவில் 35% பெண்கள் 45 வயதை
அடையும் முன்பு ஒரு முறையேனும் கருக்கலைப்பிற்குள்ளாகி விடுகின்றனர்.
உ
லகம் முழுவதிலும் நடைபெறும் கருக்கலைப்புகளில் பாதி கருக்கலைப்புகள்
பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படுகின்றன. பிரசவத்தின்போது நடைபெறும் உயிர் இழப்புகளைவிட, பாதுகாப்பற்ற வகையில் செய்யப்படும் கருக்கலைப்புகளில் உயிர் இழப்புகள் அதிகம். பெண்களின் கல்வியறிவின்மையும் விழிப்புணர்ச்சி இல்லாமையுமே இதற்கு காரணமாகும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது.
இன்று
கொலை செய்யப்படுவது குழந்தையல்ல! அது நாளைய ஞானி,
விஞ்ஞானி, வழிகாட்டும் தலைவன், தலைவி, கவிஞன்,
சிந்தனையாளன் சிறந்த படைத்தலைவன் என்பதை
நினைவில் கொண்டு சிந்திப்போம்.
தொகுப்பு:
லூசியா லெபோ.
Aucun commentaire:
Enregistrer un commentaire