இயற்கை கண்ணுக்கும், மனதுக்கும் மட்டும் நிறைவு தருவதில்லை. தன்னால் உயிர் கொண்டுள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் வாழ இடமும், உணவும் அளிக்க வல்லதாய் இருக்கிறது. அதனைப் பாதுகாத்து பயன் பெற, மனித இனத்துக்கு சற்றே மனசாட்சியும், விழிப்புணர்வும், உயிர்கள் மீது அன்பும் தேவை. இந்தக் குறைந்த பட்ச நல்லியல்புகளை வளர்த்துக்கொள்வோம், இயற்கையையும் அதன் போக்கில் விட்டு நாமும் வாழ்வோம்!
இன்னும் வற்றாத இயற்கைச் செல்வங்கள்:
வங்காள விரிகுடாவில் எண்ணெய் வளமும், இயற்கை எரி வாயுவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலடியிலுள்ள மண்ணும் கனிவளம் நிறைந்துள்ளதாம். பல்வகை உயிரினங்களோடு, முத்து, பவளம் போன்ற செல்வங்களுக்கும் குறைவில்லையாம்!
உலகின் பெரும் நாகரிகங்கள் ஆற்றுக்கரைகளில்தான் அமைந்திருக்கின்றன. குடிநீர், வேளாண்மை, பல வகை தொழிற்சாலைகள் ஆற்றை நம்பித்தான் உள்ளன. ஆற்றோட்டத்திலிருந்து மின்சாரமும் எடுக்கப்படுகிறது.
வளர்ந்த மரம் ஒன்று ஒரு ஆண்டில் கால் நடைத் தீவனம், எரி பொருள், கட்டுமானப் பலகை, பிசின், மருத்துவப் பொருட்கள் நீங்கலாக கீழ்க்கண்ட வகையில் 16 லட்ச ருபாய் ஈட்டுத் தருகிறது:
தட்ப வெப்ப நிலையைச் செப்பனிடுவதால் - 3 லட்சம்
ஒளிச் சேர்க்கை மூலம் வெளிப்படும் பிராண வாயுவால் - 2.5 லட்சம்
நிலம் பலப்படுவதால் - 2.5 லட்சம்
வன விலங்குகளைப் பாதுகாப்பதால் - 2.5 லட்சம்
நைட்ரஜனை ஈர்த்து புரதத்தை உருவாக்குவதால் - 0.25 லட்சம்
மலர்கள் விதைகளை உருவாக்கி அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதோடு உணவாகவும், நறுமணப் பொருட்கள் தயாரிக்கவும் மட்டுமே உபயோகப்படுவதில்லை.
ஹாப்ஸ் - பீருக்குச் சுவையூட்ட
மாரிகோல்டு - மஞ்சள்கருவுக்குநிறமூட்டகோழிகளுக்குக்கொடுக்கப்படுகிறது.
ஆரஞ்சு,க்ளோவர்,டுபேலோ - தேன்
ப்ரக்கொலி,காலிபிளவர் - மலர்காய்கள்
குங்குமப்பூ,கிராம்பு - நறுமணம்
ஸ்டுவாஷ் - ரொட்டித்தூளில் புரட்டி வறுக்கப்படுகிறது
சூரியக் காந்தி, சிக்கரி - சாப்பிடக்கூடியவை
ரோஜா, ஜாஸ்மின் - மூலிகைத் தேநீர் மற்றும் தேயிலையில் மணம் சேர்க்க உதவுகிறது.
திருமதி சிமோன்
Aucun commentaire:
Enregistrer un commentaire