நகைச் சுவை
- இந்த நெக்லசைப் போட்டுக்கிட்டா, 10 வயசு இளமையாத் தெரிவீங்க!
அப்ப வேண்டாம்பா! இதை அவுத்த ஒடனே 10 வயசு கூடுதலாத் தெரியுமே!
- கேடி கபாலி ஒரே ஒரு பிளேடை வைத்து தொழிலை ஆரம்பிச்சான். இப்ப கோடிக் கணக்கில சோ்த்திட்டான்.
அவ்வளவு பிளேடை வச்சிக்கிட்டு என்ன செய்வான்?
- திருட்டு மாட்டை விலைக்கு வாங்கினாயாமே?
மாடு எங்கே திருடுச்சின்னு எனக்கென்னங்க தெரியும்?
- திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன, சரி பின்ன நரகத்தில எது நிச்சயிக்கப்படுது?
வேறென்ன, திருமணத்துக்குப் பின் வரும் நாட்கள் தான்!
- தபால் போடுகிறவர் தபால்காரர், பேப்பர் போடுகிறவர் பேப்பர்காரர், பால் பாக்கெட் போடுகிறவர் பால்காரர். அப்போ பிச்சை போடுகிறவர்?