அன்புடையீர்,
வணக்கம். பிரான்ஸ் கம்பன் கழகம் பெரும் சாதனை ஒன்றை ஓசையிடாமல் செய்திருக்கிறது. கடந்த இரு வருடங்களில், 10,000 க்கும் மேற்பட்ட கம்பராமாயணப் பாடல்களை விளக்கவுரையுடனும், சுவை மிகுந்த பாடல்களின் அழகு நயத்துடனும் ஓதி முடித்திருக்கிறது. இலக்கியச் சுவை காண விரும்பியோரும், பக்திச் சுவையுடன் நெருங்கியோரும் நிறைவு கண்டுள்ளனர்.
குறைந்த அளவில் 35 நபர்களும், மொத்த அளவில் 150 நபர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். நிறைவு விழா சென்ற 22-5-2010 அன்று நடைபெற்றது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் தரப்பட்டன. இலக்கியச் சுடர் இராமலிங்கம் அவர்கள், எல்லோருமே உற்சாகத்தோடு பாடல்களை உரக்கப் படித்ததை மிகவும் பாராட்டினார். ராமபட்டாபி்ஷேகம் பற்றி மட்டுமே அனைவரும் அறிந்திருக்க, இப்படி முற்றும் ஓதியதால், பரதனுக்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டதையும் அறிந்து கொள்ள முடிந்தது என்றும் கூறினார்.
அடுத்து, திருக்குறளை விளக்கத்துடன் ஆய்ந்தறிய கழகம் முடிவு செய்துள்ளது. நகைச்சுவைத் தென்றல் சண்முக வடிவேல் அவர்கள் உலகப் பொதுமறை பற்றிய விளக்கங்கள் வாழ்வுக்குத் தெளிவு கொடுக்கும் எனக் கூறி, அதன் சிறப்புகள் பற்றி உரையாற்றினார்.
கலந்து கொண்டு பயனடைய விரும்புவோர் கழக உறுப்பினர்களை அணுகி “குறள் அரங்கம்” பற்றிய விபரங்களைப் பெறலாம்.
முதல் “குறள் அரங்கம்” வருகிற 27-6-2010 அன்று கம்பன் தலைமையகத்தில் நடைபெறும். நன்றி.
இராசேசுவரி சிமோன்
பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்
dimanche 13 juin 2010
இன்றைய அறிமுகம் -- ழான் தார்க்
பிரான்ஸ் நாட்டின் ஒப்பற்ற வீராங்கனையாகப் போற்றப்படும் ஜான், எளிய விவசாயக் குடும்பத்தில் 1412இல் பிறந்தாள். படிக்காத அந்தப் பெண், தன் தாய் நாட்டைக் காக்கக் கடவுள் தனக்கு ஆணையிட்டிருப்பதாக நம்பி, ராணுவத்தில் சேர முயன்றாள். மக்கள் செல்வாக்கைப் பெற்றுவிட்ட அவளைத் தவிர்க்க இயலாமல் இராணுவத்தில் சேர்த்துக் கொண்டனர்.
17 வயதான அவள், பிரான்ஸ்-இங்கிலாந்து நடுவே 100 ஆண்டுகளுக்கு மேல் (1337-1453) நடந்துகொண்டிருந்த ஐந்து போர்களில், ஆணுடை தரித்து ராணுவம் முழுதும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதிசயத்தக்க வெற்றிகளை அடைந்தாள்.
தலைமைப் பொறுப்பேற்ற அவள் எதிர்கொண்ட பிரச்சனைகள் அதிகம்.
பெண்ணைப் போர்க்களத்தில் ஏற்காத எதிராளிகளும், மதவாதிகளும் உண்டாக்கிய அவப்பெயரைப் போக்க, அவள் தன் கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டியதாயிற்று!
ஜான் பெற்ற வெற்றியினால் அரசனான சார்லஸ் ஏழுக்கு எதிரானவர்கள் அவளை 10,000 பவுண்ட் காசுக்கு அவளுடைய 19ஆவது வயதில், 23-5-1430 இல் இங்கிலாந்து போர்வீரரிடம் பிடித்துக் கொடுத்தனர்.
அரசியல்ரீதியான பகைக்கு, மதத்திற்கு எதிரான கொள்கை உடையவளாக அவளைக் குற்றம்சாட்டி, 1431 மே மாதம் 30ஆம் தேதியன்று இங்கிலாந்து நாட்டின் மத அமைப்பு உயிருடன் அவளை எரித்துக் கொன்றது. அவள் மீது சாட்டப்பட்ட குற்றங்களில் சில-ஆணுடை அணிந்தது, சிறு வயதில் பெற்றோரை விட்டு வந்தது, புனிதர்கள் தனக்கு முன் தோன்றி நாட்டைக் காக்கச் சொன்னதாக தெய்வ நிந்தனை செய்தது போன்றவை.
மே மாத முதல் தேதி ஜான் தார்க்கின் நினைவு நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1456இல் போப் (ஸ்பெயின் நாட்டுக்காரர்) அவளைப் புனிதையாக அறிவித்தார்.

இலக்கியப் புது வரவும், கம்பனின் மதிப்பீடும்
உலகம் உண்மை உணர்தல் வேண்டும்
பொருள்--தமிழர் வரலாறு, ஆசிரியர்--பன்னீர்ச்செல்வம் லுார்துமரியநாதன்,
வெளியீடு--அமுதா பதிப்பகம், புதுச்சேரி-2201684--விலை 75ரூ.
உலகத் தலைமகன் தமிழனே! அவன் மொழியும், நாகரிகமுமே முதன்மை வகித்தவை. இந்த உண்மை தமிழனால் பதிப்பிக்கப்படாததும், ஏனைய நாடுகளால் அறியப்படாததுமாக இருக்கும் அவல நிலையினால் அடைந்த ஆதங்கத்தோடு ஆசிரியர் அவற்றை நிலைநாட்ட போதுமான ஆதாரங்களை அடுக்கியுள்ளார்.
உலகம் உணருமுன் ஒவ்வொரு தமிழனும் அதை உணர்வது எத்துணை அவசியம் என்பதை இப்புத்தகம் நன்கு வலியுறுத்துகிறது.
ராசி சிமோன்
(இங்கு தங்கள் படைப்புக்களை அறிமுகப்படுத்த விரும்புவோர், இரு புத்தகங்களை கம்பன் கழக முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)

சிந்திக்க, செயல்பட
தாமஸ் ஆல்வா எடிசன்--
அடுத்தவர் பாத்திரத்தில் என்ன வெந்து கொண்டிருக்கிறது என்று பார்க்காதீர்கள். உங்கள் பாத்திரத்தில் உள்ளது கருகி தீய்ந்து விடும்.
ஒப்பிட்டு பார்க்காதவரையில் எதிலும் நல்லது கெட்டது என்பதே தெரிவதில்லை.
சில சமயம் முட்டாள்களாக காட்சியளிப்பது கூட அறிவுள்ள செயலே!
யாரோ--
இறைவனிடம் வேண்டும் உதடுகளைவிட, சமயம் பார்த்து உதவிடும் கரங்கள் புனிதமானவை!
பிறர் குற்றங்களில் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால்,
பிறர் நிறைவுகளில் வருத்தம் ஏற்படுவது இயல்பு.
விளக்கு எரிந்தால் எண்ணெய் குறையும். உன் மனம்
எரிந்தால் எண்ணம் தேயும்.
மகிழ்ச்சியைப்போன்ற அழகு சாதனம் வேறெதுவும் இல்லை!

கவிச் சோலை
கண்ணியம்
தன்மானம் பேணிடலும்
சகமானங் காத்திடலும்
தணிவாய் எங்கும்
இன்சொல்லே பேசுதலும்
இன்செயலே செய்திடலும்
இன்பம் தங்கும்
மென்னுரையால் குறைநீக்கி
மேன்மையுற வைத்திடலும்
மேலாம் என்றும்
நன்னடத்தை கண்ணியமாம்
நாள்தோறும் அவ்விதமாய்
நடத்தல் நன்றே!
தன்குறைகள் களைந்தபின்னே
தான்பிறர்மேல் குற்றங்கள்
சாட்டல் வேண்டும்!
தன்னிலையில் தாழாமல்
தன்மானம் இழக்காமல்
தமிழர் என்றும்
நன்னெறியில் சென்றிடவே
நல்லொழுக்கக் கல்வியினை
நாளும் பேணி
இன்னெறியாம் தமிழினையே
இல்லமதில் இயம்பிடுவோம்
இன்பம் காண்போம்!
பேராண்மை பேணுவதும்
பெரும்பெண்மை காப்பதுவும்
பீடு பெற்றுப்
பாராளும் பெருந்தகைமை
பாங்குடனே ஏற்றாலும்
பண்பாய்ப் பேசும்
கூர்மதியால் நன்மைகளே
கூட்டிடுதல் மாண்பென்னும்
குணத்தை ஏற்றே
ஊர்போற்ற வாழ்ந்திடுதல்
உண்மையிலே கண்ணியமாம்
உயர்வோம் நன்றே!
தேவராசு
தன்மானம் பேணிடலும்
சகமானங் காத்திடலும்
தணிவாய் எங்கும்
இன்சொல்லே பேசுதலும்
இன்செயலே செய்திடலும்
இன்பம் தங்கும்
மென்னுரையால் குறைநீக்கி
மேன்மையுற வைத்திடலும்
மேலாம் என்றும்
நன்னடத்தை கண்ணியமாம்
நாள்தோறும் அவ்விதமாய்
நடத்தல் நன்றே!
தன்குறைகள் களைந்தபின்னே
தான்பிறர்மேல் குற்றங்கள்
சாட்டல் வேண்டும்!
தன்னிலையில் தாழாமல்
தன்மானம் இழக்காமல்
தமிழர் என்றும்
நன்னெறியில் சென்றிடவே
நல்லொழுக்கக் கல்வியினை
நாளும் பேணி
இன்னெறியாம் தமிழினையே
இல்லமதில் இயம்பிடுவோம்
இன்பம் காண்போம்!
பேராண்மை பேணுவதும்
பெரும்பெண்மை காப்பதுவும்
பீடு பெற்றுப்
பாராளும் பெருந்தகைமை
பாங்குடனே ஏற்றாலும்
பண்பாய்ப் பேசும்
கூர்மதியால் நன்மைகளே
கூட்டிடுதல் மாண்பென்னும்
குணத்தை ஏற்றே
ஊர்போற்ற வாழ்ந்திடுதல்
உண்மையிலே கண்ணியமாம்
உயர்வோம் நன்றே!
தேவராசு
மனித நேயம்
தொழிலதிபர் விசுவநாத்தின் ஒரே செல்லமகள் நிலா. இரண்டு வயதிலேயே தாயை இழந்துவிட்டதால், தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள். நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த விமலாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட விசுவநாத், அவள் இறந்தபோது ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால், பணம் இல்லாதவர்களைக் கண்டால் வெறுப்புடன் நடந்துகொண்டார். தன் மகளை அவர்களிடமிருந்து காப்பாற்ற, அக்கறையுடன் வளர்ப்பதாக நினைத்துக்கொண்டு அதிக கட்டுப்பாட்டுடன் வளர்த்து வந்தார். அதனால் நிலாவுக்கு தந்தையிடம் அன்போடு பயமும் இருந்தது.
அவர்கள் எதிர்வீட்டு மாடிப்பகுதிக்கு, சந்திரன் தன் மனைவி வேணி மற்றும் தங்கை அமுதாவுடன் குடி புகுந்தான். மெத்தப்படித்த சந்திரனுக்குச் சரியான வேலை கிடைக்காததால், ஒரு சிறிய கம்பெனியில் வேலை பார்த்து வந்தான். தங்கை அமுதா நிலாவோடு ஒரே வகுப்பில் படித்து வந்தாள்.
ஒரு நாள் நிலா தன் காரில் அமுதாவை வீடுவரை அழைத்துவந்ததைக் கேள்விப்பட்ட விசுவநாத் மகளை மிகவும் கடிந்துகொண்டார். மற்றொரு நாள் நிலா கேட்ட ஒரு புத்தகத்தை கொடுத்துப் போக வந்த அமுதாவை, அவள் காதுபடவே மோசமாகப் பேசினார். அதன்பிறகு அமுதா நிலா வீட்டுக்கு வருவதே இல்லை!
இந்நிலையில் திடீரென்று ஒருநாள் விசுவநாத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால், மாற்றுச் சிறுநீரகம் பொருத்தவேண்டும் எனச்சொல்லி விட்டனர். இது கேட்ட நிலா மிகவும் இடிந்து போனாள். தாயில்லா நிலையில், தந்தை நிலையும் இப்படி ஆனதால் நொந்து போனாள். எவ்வளவோ பணமிருந்தும், அப்பாவின் நண்பர்கள் பலர் இருந்தும் மாற்றுச் சிறுநீரகம் கிடைக்காது வருந்தினாள். தவித்து நின்ற அவளைத் தேடி அமுதா வந்தாள்.
“அழாதே நிலா! உன் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும். கட்டாயம் உன் தந்தை பிழைத்துக் கொள்வார். இறைவனை வேண்டிக்கொள்” என்று ஆறுதல் கூறினாள். தோழியைக் கண்டதும் அவள் தோளில் சாய்ந்து, கதறி அழுத நிலாவுக்கு அவள் சொன்னது எதுவும் காதில் விழவில்லை! அப்போது அங்கே வந்த மருத்துவர், “உங்கள் தந்தைக்கு பொருத்துவதற்கு சிறுநீரகம் கிடைத்து விட்டது. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் ஒரு கையெழுத்து போடுங்கள்” எனக்கேட்டார். இயந்திரமாக கையெழுத்து போட்ட நிலாவை அணைத்துக் கொண்டாள் அமுதா! “என் அண்ணன்தான் உன் தந்தைக்குச் சிறுநீரகம் தருகிறார். அது உன் அப்பாவின் உடம்புக்கு ஒத்துப்போக வேண்டுமே என்றுதான் இறைவனை வேண்டிக்கொள்ளச் சொன்னேன். நல்லவேளை பொருந்தி விட்டது. இனி பயப்படாதே! உன் அப்பா நிச்சயம் பிழைத்துக்கொள்வார்” என்று சொன்ன அமுதாவை நன்றி பெருக்கோடு தழுவிக்கொண்டாள் நிலா.
வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து, விசுவநாத் நன்றாக உடல்நலம் தேறினார். மருத்துவர் மூலம் தனக்குச் சிறுநீரகம் தந்தது சந்திரன்தான் என அறிந்த விசுவநாத், மனமகிழ்ந்து சந்திரனை வரவழைத்து “என் உயிரைக் காப்பாற்றிய உனக்கு ஏதேனும் உதவி செய்து என் நன்றியைக் காட்ட விரும்புகிறேன். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் கேள்” என்றார். அதற்கு அவன் “வேண்டாம் ஐயா, நான் பணத்தை எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை. என் தங்கையைப் போன்றவள் நிலா! அவள் துயர் போக்க, என் தந்தை போன்ற உங்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்தேன். மனிதாபிமானம் உள்ள எவரும் செய்யக் கூடியச் செயல்தான் இது. நீங்கள் அமைதியாக இருந்து, உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றான்.
விசுவநாத் இதைக் கேட்டு அவரையறியாமல் கலங்கினார். “நான் பணமிருந்தால் போதும். எதையும் பெற்றுவிடலாம் என்று நினைத்திருந்தேன். அது இல்லாதவர்களை பணத்திற்காக எதையும் செய்பவர்கள் என்று கணித்திருந்தேன். ஆனால் “மனித நேயம்” மிக்க நீ உன் செய்கையால் உயர்ந்து என் எண்ணத்தை மாற்றி விட்டாய். உனக்கு என்ன கைம்மாறு செய்வதென்று தெரியவில்லை” என்றார்.
“நீங்கள் பிழைத்ததே போதும் ஐயா! நான் வருகிறேன்” என்று புறப்பட்டான் சந்திரன். விசுவநாத் அவனை மறித்து, “நீ நிலாவைத் தங்கை என்று நினைப்பது உண்மையானால், தந்தை என்ற முறையில் நான் சொல்வதை மறுக்காமல் ஏற்க வேண்டும். என் கம்பெனி பொது மேலாளராக உன்னை நான் நியமிக்கிறேன். இதை ஏற்றுக் கொண்டு, என்னை கௌரவிக்க வேண்டும்” என்று வேண்டினார்.
சந்திரன் புன்முறுவலுடன் ஒப்புக் கொண்டான். நிலாவும், அமுதாவும் மகிழ்ச்சிப் பெருக்கோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
சரோசா தேவராசு

குறுக்கெழுத்து 3
குறுக்கெழுத்து 3
இடமிருந்து வலம :
1 மார்சு மாதம் 8-ஆம் நாள் கொண்டாடப்படும் தினம்.
4 தாம்பூலத்தில் வெற்றிலையுடன் போடுவது
7 நம் நாட்டை ஆட்டி வைக்கும் தீரா நோய்.
12 தமிழ் நடிகையின் பெயர்
13 சமயம்
மேலிருந்து கீழ் :
1 இனிமைக்கு வடமொழிப் பெயர்
2 பெண்ணின் கண்ணுக்கு உவமையாகும் மீன்.
7 கால்நடைகள் உணவு
9 தொழிற்சாலை
11 நலத்துக்கு வடமொழியில் இப்படிக் கூறுவார்கள்.
வலமிருந்து இடம் :
3 பிறந்த நாளில் இருந்து கணக்கிடப்படுவது
4 பசு கொடுப்பது
6 உடல் உறுப்பு
9 வீட்டில் இது புகுவது தீமை.
10 பாதை
12 சீதையின் தந்தை
15 முக்கனிகளில் ஒன்று
கீழிருந்து மேல் :
5 (இ)ரத்தம்
7 ஒளி விழா
8 தொலைவை அளக்கும் அளவு
9 உணவு
11 பாரம்
12 சரணாகதி
13 மறைவானது
14 அகல் விளக்கின் பழம் பெயர்
15 மங்கல நிகழ்சிகளில் கட்டும் தோரணம்.
லுாசியா லெபோ
Inscription à :
Articles (Atom)