எந்தக் கலையாக இருந்தாலும் அதன் எல்லையைக் கடந்தவர்கள் ஒருசிலராகத்தான் இருப்பார்கள். அவர்களைக் காலமும், சரித்திரமும் என்றும் மறப்பதில்லை. ஏனெனில் அக்கலைக்கு அங்கீகாரமும், வளர்ச்சிப் பாதையும் அவர்கள் வித்திட்டவை. தெய்வீக இசையான கர்னாடகக் கலைஞர்களின் முகப் பொலிவினைக் காணும்போது, அந்த அழகு இசை தந்த வரமோ எனத் தோன்றுகிறது.

எம்.எஸ். சுப்புலட்சுமி (1916 - 2004 ) "பாரத ரத்னா" பட்டம் வாங்கிய ஒரே இசைக் கலைஞர்(1998 ). "ராமன் மக்சய்சே " விருது பெற்ற முதல் இந்தியர் (1974 )
தாய் சண்முகவடிவாம்பாள் வீணையிலும், பாட்டி அக்கம்மாள் வயலினிலும் தேர்ந்தவர்கள். முதலில் இவர்களிடம் பயின்று, பின்னர் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரிடம் கற்றார். பிறகு பண்டிட் நாராயண் ராவ் வியாசர், டாக்டர் நெடுனுரி கிருஷ்ண மூர்த்தி (சமஸ்கிருதம், தெலுங்கு), காரைக்குடி சாம்பசிவ ஐயர், மழவராயனேண்டல் சுப்பராம பாகவதர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ஆகியோரால் பட்டைத் தீட்டப்பட்டார்.
13 வயதில் முதன்முதல் சென்னை மியூசிக் அகாடெமியில் பாடினார். பின்னர் பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் பாடியுள்ளார்! திரைப் படங்களிலும் நடித்துள்ளார். இந்திய கல்சரல் அம்பாசடர் ஆக வெளி நாடுகளுக்கு பயணித்துள்ளார்.
அடைந்த சிறப்புகள்:
"எடின்பர் இன்டர்நேஷனல் பெஸ்டிவல் ஆப் மியூசிக் & ட்ராமா-1963
"கார்னெகி ஹால், நியூ யார்க், யு என் ஜெனரல் அச்செம்ப்லி-1966
ராயல் ஆல்பர்ட் ஹால், லண்டன்-1982
பெஸ்டிவல் ஆப் இந்திய இன் மாஸ்கோ-1987
"பத்ம பூஷன்" - 1954
சங்கீத் நாடக் அகாடமி அவார்ட் - 1956
சங்கீதக் கலாநிதி - 1968 (முதல் பெண்மணி)
பத்ம விபூஷன் - 1975
காளிதாஸ் சம்மான் - 1988
இந்திரா காந்தி அவார்ட் - 1990
திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான்
இதன்றி பல பல்கலைகழகங்களின் "கௌரவப் பட்டம்" இவரை நாடி வந்தன.
இவரது வெண்கலச் சிலை 2006 இல் நிறுவப்பட்டது.
சாதனைகள்:
வெங்கடேச சுப்ரபாதம் (எச்.எம்.வி. ரெகார்ட்) மூலம் இவர் குரல் ஒலிக்காத இல்லம் தமிழ் நாட்டில் இல்லை! இதன் ராயல்டி தொகை வேதப் பாடசாலைக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் மூலம் அளிக்கப்படுகிறது.
200 சாரிட்டி நிகழ்ச்சிகள் மூலம் ஒரு கோடி ரூபாய் தானமாகக் கொடுத்துள்ளார்.
அவரது அழகு முகமும், இனிய குரலும் கர்னாடக இசைக்குக் கிடைத்த மறக்க முடியாத வரப்பிரசாதம்!
டி.கே.பட்டம்மாள்:(1919 - 2009 )
1947 ஆகஸ்ட் பதினைந்து நள்ளிரவு பாரதியின் "விடுதலை" கீதம் இவரது இனிய குரலில் தான் நாடெங்கும் ஒலித்தது.
முதல் தரப் பாடகி எனப் பெயர் பெற்றவர். முதல் தமிழ் சினிமாப் பாடகி!
குறிப்பிட்ட ஒருவர் என்று சொல்லமுடியாதபடி பலரிடம் கற்றார். முறைப்படி கற்காத போதே, பள்ளி டிராமாவில் இவர் பாடியப் பாட்டைக் கேட்டு கிராமபோன் கம்பனி ஒன்று இவரைப் பாட வைக்க, அறிமுகமானார்.
நாட்டுப் பற்று, பக்தி மிகுந்த பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார். இவரால் பாரதியின் பல பாடல்கள் உயிர் பெற்றன! காந்தி பற்றிய இவரது பாடல்கள் அவர் குரலில் பலரை அழ வைத்தன.
திருமதி சிமோன்

எம்.கே. தியாகராஜ பாகவதர்
காலம் - 1910 - 1959 சிறந்த சினிமா நடிகர், இயக்குனர்,தயாரிப்பாளர், எல்லவற்றையும் விடச் சிறந்த கர்னாடக இசைக் கலைஞர்.
சிறு வயதிலேயே இந்து மதப் பாடல்களை, பஜனைப் பாடல்களைப் பாடுவதில் தேர்ந்திருந்தார். இவரது குரலைக் கேட்டு கே.ஜி. நடேச ஐயர் "ஹரிச்சந்திரா" என்ற திரைப்படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். தன்னை இன்னும் நன்றாக உருவாக்கிக்கொள்ள விரும்பி ஆறு வருடங்கள் தியாகராஜர் மதுரை பொன்னுசாமி ஐயங்காரிடம் (வயலின்) இசை கற்றார்.
உச்ச ஸ்தாயில் பாடுவதில் வல்லவர். கர்னாடக அடிப்படையில் பக்திப் பாடல்கள் பல இன்னும் அவரை நிலை நிறுத்தியுள்ளன. பாபநாசம் சிவனுடன் பல பாடல்கள் பாடியுள்ளார்.
1920 இல் பாடி, நாடக நடிகரானார். 1934 இல் "பவளக்கொடி" திரைப்படம் அமோக வெற்றி அடைய, மொத்தம் 14 படங்கள் நடித்ததில் ஆறு பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது. '44 இல் "ஹரிதாஸ்", பாட்டுக்காக சென்னையில் ஒரே தியேட்டரில் மூன்று வருடங்கள் ஓடியது. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் இவரே.
துரதிர்ஷ்டவசமாக, லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கில் '44 இல் சிறைப்படுத்தப் பட்டார். மூன்று வருடங்களுக்குப் பிறகு நிரபராதியென விடுதலையானார்.
எனினும் அவர் புகழ் வாழ்வு அத்துடன் அஸ்தமித்துப் போனது.
இரண்டாம் உலக யுத்தத்தின் பொது சென்னை கவெர்னர் கேட்டுக்கொண்டதற் கிணங்க, மேடைகளில் பாடி, பெரும் தொகையை வசூலித்து பிரிட்டிஷாரிடம் அளித்தார். மகிழ்ச்சி அடைந்த அரசு "திவான் பகதூர்" என்ற பட்டத்தை அளிக்க முன் வந்த போது, அதை மறுத்து விட்டார்.
குறுகிய காலத்தில் தன் குரலால் எல்லோரையும் மகிழ்வித்த அந்தக் கலைஞர்,
மின்னி மறையும் நட்சத்திரமாகவே விரைவில் மறைந்தும் விட்டார்.திருமதி சிமோன்