இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர் 65%
பிரான்சிலுள்ள 'லியோன்' என்ற நகரில் இன்டர்போலின் தலைமையகம் உள்ளது. இந்தியாவிலிருந்து சி.பி.ஐ. உயர் அதிகாரி, முன்னாள் சென்னை நகரக் காவல் ஆணையர் அருள், இன்டர்போல் அதிகாரியாக நியமிக்கப்பட்டபோது அவரால் பரிசளிக்கப்பட்ட 'பகவத் கீதை' அங்கே வைக்கப்பட்டுள்ளது. ஒரு குண்டு வெடிப்பின்போது, கட்டடம் இடிந்தபோதும், சேதமாகாமல் புத்தகம் தப்பியுள்ளது.
1856ஆம் ஆண்டு 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலை ராபர்ட் கால்டுவல் எழுதினார். 53 ஆண்டுகள் இந்தியாவில் தமிழ், திருமறைத் தொண்டாற்றிய அவர், 15 ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய, தமிழின் தொன்மையினை நிலை நிறுத்தும் இந்நூலுக்காக, 'க்ளாக்ஸோ' பல்கலைக் கழகம் அறிஞர் பட்டம் வழங்கியது.
லத்தீன், ஹீப்ரூ ஆகிய மொழிகள் தற்போது வழக்கிலில்லை. கிரேக்கம் வளர்ச்சி அடையவில்லை. சமஸ்கிருதம் மந்திர மொழியாக மாற்றம் பெற்று விட்டது. சீனம், எழுத்து-படம் வடிவிலுள்ளதால் செம்மொழித் தகுதி பெறவில்லை. தமிழ் மட்டுமே எல்லாத் தகுதியும் கொண்டுள்ளது.
உச்சரிப்பு ஒழுங்குற தமிழில் உள்ள சில வழக்குச் சொல்லாடல்கள்:
ஆரல்வாய் மொழிக் கோட்டையிலே ஆழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம்.
கடலோரத்தில் உரல் உருளுது, புரளுது, தத்தளிக்குது, தாளம் போடுது.
யார் தச்ச சட்டை, தாத்தா தச்ச சட்டை
ஊழிக்காற்று,பாழும் கிணறு, கூழைக்குடி.
வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் கீழே விழுந்தான்.
தமிழின் பொருள் மாறிய சில வார்த்தைகளுக்கு உரிய விளக்கம்:
இறுத்தல் - வடிகட்டுதல்
சுணங்குதல் - தாமதித்தல்
கெத்துதல் - ஏமாற்றுதல்
அழுக்கறுத்தல் - பொறாமைப்படுதல்
நொள்ளுதல் - விழுங்குதல்
தரித்தல் - அணிதல்
கெக்களித்தல் - குலுங்கிச் சிரித்தல்
பழமொழிகள்:
முதுமை வரையல்ல, மரணம் வரை கற்கிறோம். (யுக்ரேனியன்)
கல்வி இல்லாச் செல்வமும், கற்பில்லா அழகும் பிரகாசிக்காது. (தமிழ்)
ஏகாந்தத்தில் படிப்பது, மனிதர்களின் பேச்சைக் கேட்பதற்குச் சமமாகாது.(சீனம்)
என் தவறுகளை எனக்குச் சொல்பவர் என் ஆசிரியராகிறார்.(சீனம்)
உலகின் முதல் நாகரிகம் உயிரினம், உயிரினத்தின் முதல் நாகரிகம் மனிதன், மனிதனின் முதல் நாகரிகம் பெண்.(ஜப்பான்)
கவரும் கவிதைகள்:
எனக்குப் பிடித்தவை அனைத்தும் தொலைவினில் உள்ளன. அன்று நிலவு, இன்று நீ !
கற்பனையை எழுதினேன்,கிறுக்கல் என்றனர். உன்னை எண்ணி கிறுக்கினேன் கவிதை என்றனர்.
பறக்க முடியா பறவைக்குச் சிறகுகளும், நடக்க முடியாக் கால்களுக்கு கொலுசும் சுமைதான் !
காற்றே, நீயும் என்னைப் போல்தானோ? புத்தகங்களைப் படிக்காமல் புரட்டுகிறாய் !
தொகுப்பு: திருமதி சிமோன்
Aucun commentaire:
Enregistrer un commentaire