பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 14 octobre 2011

இந்திய சரித்திரப் பெருமைஇந்தியா பழம்பெருநாடு, அதன் பெருமை சொல்லி மாளாதது என்று அனைவரும் அறிவர். ஆயினும் புதிய தலைமுறைக்கு அல்லது இன்றைய இளம் வயதினருக்கு அவற்றில் சிலவற்றையேனும் அறிவிப்பது, நாட்டுப் பற்றை ஊட்டும் செயலாகும். அத்தகு அரிய, தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள் சில :

1498 : வாஸ்கோடகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழி கண்டார். 1600 -இல் 220 ஆங்கில வணிகர்கள் கிழக்கு இந்திய வணிகக் குழுமத்தைத் தோற்றுவித்தனர். முதலில் டெல்லி சுல்தானிடம் உத்தரவு பெற்று 1612 இல் சூரத்தில் வணிகத்தை ஆரம்பித்தனர்.

1636 -இல் ஆங்கில வைத்தியத்தால் ஷாஜஹான் மகள் தீக் காயங்களிலிருந்து பிழைக்க, அந்த வைத்தியர் கல்கத்தாவில் வியாபார அனுமதியை ஆங்கிலேயருக்கு பெற்றுக் கொடுத்தார்.

1639 -இல் தொண்டை மண்டல மன்னனிடம், மாதம் 100 வராகனுக்கு மதராஸ் குப்பத்தைக் குத்தகைக்கு எடுத்தனர்.


1662 -இல் இங்கிலாந்து மன்னர் போர்த்துக்கீசிய இளவரசியை மணக்க, பம்பாயைத் திருமணப் பரிசாகப் போர்த்துக்கல் மன்னன் அளித்தான்.  மணமகன் சார்லஸ் அதை ஆங்கிலேயருக்கு ஆண்டுக்கு பத்துப் பவுன் வாடகைக்குக் கொடுத்தான்.

1690 -இல் காலிகட் (கல்கத்தா) குப்பத்தை விலைக்கு வாங்கினர் பிறகே நாடு பிடிக்கும் ஆசையில், படை, பீரங்கி, துப்பாக்கித் துணையுடன் நரி வேலை செய்து, பிரிவினையை உண்டாக்கி:

1752 -இல் கிளைவ் ஆற்காடு நவாபிடமிருந்து செங்கல்பட்டைப் பிரித்தார்.
1757 -இல் பிளாசிப் போரில் வங்காளத்தை வளைத்தனர்.
1765 -இல் பீகார், ஒரிசா வரிவசூல் உரிமை பெற்றனர்.

சிறிது சிறிதாக இந்தியா முழுவதையும் அபகரித்து, 1858 -இல் விக்டோரியா பேரரசியாக முடிசூட்டப்பட்டார்.

1790 முதலே புலித்தேவன்,  கட்டபொம்மன் போன்றோர் ஆங்கில ஆதிக்கத்தை  எதிர்த்து, வரி கொடுக்க மறுத்தனர். பின்னர் இது மக்கள் இயக்கமாக, ஒரு நூற்றாண்டு கால போராட்டத்திற்குப்பின் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஏழாம் ஆண்டு  ஆகஸ்ட் பதினைந்தில் காந்தியின் சத்தியாக்கிரக எதிர்ப்பை மூலதனமாகக் கொண்டு இந்தியா விடுதலை அடைந்தது.

1950 சனவரி இருபத்தியாறு இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.

1954 இந்தியாவில் இருந்த பிரெஞ்சு குடியேற்றப் பகுதிகள ;(புதுச்சேரி, காரைக்கால், மாஹே,ஏனம்) இந்திய அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.

1961 போர்த்துக்கீசியர் வசமிருந்த கோவா, டையூ, டாமன் பகுதிகளை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1942 காந்தி தொடங்கிய ”வௌ;ளையனே வெளியேறு”இயக்கம் தமிழ் நாட்டிலும் எதிரொலித்தது. சத்தியக்கி;ரகமாகக் காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட போது ராஜாஜி உட்பட பலர் திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை சென்று உப்புச் சட்டங்களை  மீறினர்.

( சிவனடி எழுதி, பதினான்கு தொகுதிகளாக ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தேழு முதல் 1999  வரை வெளியான ”இந்திய சரித்திரக் களஞ்சியம்” ஏழாயிரம்  பக்கங்களுடையது.)


 இந்தியத் தேசியக் கொடியின் வரலாற்றினைப் பார்ப்போம்:

காந்திஜி ஆப்பிரிக்காவில் இந்தியர் உரிமையை மீட்க 20  ஆண்டுகள் போராடினார். சட்டப்படி மணந்தவருக்கே அங்கீகாரம் உண்டு என்ற நிலை, இந்திய முறைப்படி மணந்த தம்பதிகளையும், குடும்பத்தையும் பாதிக்கும் என்று  அதை எதிர்த்துப் போராடும்போது போராட்டத்தில் முதன் முதலாகப் பெண்களையும் சேர்த்துக்கொண்டார். அப்போது பதினாறே வயதான வள்ளியம்மை அதில் பெரிதும் ஈடுபாட்டோடு கலந்து கொண்டாள். ஆங்கிலச் சிப்பாய் ஒருவன், கொடி கூட இல்லாத இந்தியா எனக் கேலி செய்ததைப் பொறுக்காத வள்ளி, தன் புடவையைக் கிழித்து, இதோ இந்தியக் கொடி என உயர்த்திக் காட்டினாள். அதிலிருந்த மூவர்ணத்தை அடிப்படையாகக்கொண்டே பிற்காலத்தில் காந்தி இந்தியக் கொடியை உருவாக்கினார்.

1906 ஆகஸ்ட்ஏழாம் தேதி கல்கத்தாவில் முதன்முதல்  இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பச்சை,மஞ்சள்,சிவப்பு நிறங்களைக்கொண்டு, மேல் பகுதியில்  எட்டு வௌ;ளை மலர்களும் நடுவில்”வந்தே மாதரம்” நீல, தேவநாகிரி எழுத்திலும், கீழே வௌ;ளை நிறச் சூரியனும், அதனெதிர் பக்கத்தில் பிறை நிலவு நட்சத்திரமும் இடம் பெற்றன.

ஜெர்மெனியில் அனைத்து நாட்டு சமதர்ம மகாநாடு 1907 -இல் நடந்தது. பிரதிநிதிகள் தங்கள் நாட்டுக் கொடியை முன்னால் ஏற்றி வைப்பதைக் கண்ட 'காமா' எனும் வடமாநிலமங்கை, நட்சத்திரம் நீங்கலாக பொறித்த கொடியை உருவாக்கி ஏற்றினார்.

1917 -இல் அன்னிபெசென்ட் அம்மையும், பாலகங்காதர திலகரும் முற்றிலும் மாறுபட்ட கொடியை உருவாக்கினர். ஐந்து சிவப்புப் பட்டை,நான்கு பச்சைப் பட்டைகள் கொண்டு, பிரிட்டிஷ் முத்திரையும் நட்சத்திரம், பிறை நிலவும், சிதறிக் கிடக்கும் ஏழு நட்சத்திரங்களும் அதில்இருந்தன. பிரிட்டிஷ் முத்திரை இருந்ததால், அக்கொடி ஏற்கப்படவில்லை!

1921 -இல் பச்சை,சிவப்பு, வௌ;ளை நிறங்களோடு கைராட்டை இடம் பெற்றது.

1931 -இல் கைராட்டை நடுவில் பொறிக்கப்பட்ட மூவர்ணக்கொடியைக் காங்கிரஸ் இயக்கமும், ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தியேழாம் ஆண்டு ஜூலை இருபத்திரண்டு அரசியல் நிர்ணய மகா சபையும் அங்கீகரித்தன.

1947 ,ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி, அந்நிய ஆதிக்கம் முடிவுக்கு வந்த பின், கைராட்டைக்குப் பதிலாக இருபத்திநான்கு கதிர்கள் கொண்ட அசோகரின் ”தர்மச்சக்கரம்” நீல நிறத்தில் இடம் பெற்றது.

தேசியக் கொடியின் சிவப்பு-வௌ;ளை-பச்சை நிறங்கள் தியாகம்-உண்மை-செழிப்பைக் குறிக்கின்றன. அசோகச் சக்கரம் தர்மத்தை உணர்த்துகிறது.


தேசியச் சின்னம் - மூன்று சிங்கங்கள் ஒட்டி அமர்ந்திருக்கும் நிலை.
தேசியப் பறவை - மயில்
தேசியப் பூ - தாமரை
தேசிய விலங்கு - புலி
தேசிய கீதம் - ஜனகனமன
தேசிய விளையாட்டு - ஹாக்கி
தேசிய உடை - ஷர்வானி ஃ புடைவை


உலகம்  அளிக்கத் தவறிய விருது!

இந்த நூற்றாண்டின் அதிசயத் தலைவனை அஹிம்சாவாதியை நேர்மையின் மறுபிறப்பை உரிய முறையில் தக்க நேரத்தில் பாராட்டத் தவறி நோபல் பரிசு தேர்வுக் குழுவினர் மாற்ற இயலாத களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

மகாத்மா காந்தியின் பெயர் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தியேழு முப்பத்திஎட்டு முப்பத்தியொன்பது நாற்பத்தியேழு நாற்பத்திஎட்டாம்  ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் மூன்று முறைகள் மட்டுமே இறுதிச் சுற்றுவரைச் சென்றது. முதன்முதல் பரிசீலனைக்கு வந்தபோது ”அவர் இந்திய தேசியவாதி ஆப்பிரிக்காவில்கூட இந்தியர்களுக்காகத்தான் போராடினார்”எனக் காரணம் கூறப்பட்டது. 1948 -இல் அவர் உயிருடன் இல்லை. அப்போது ”நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்படுகிறவர் ஏதாவது ஒரு அமைப்பினைச் சார்ந்திருக்க வேண்டும். அவர் சொத்துக்களுக்கு அதிகார பூர்வ வாரிசு இருக்க வேண்டும்” என்று சொல்லப்பட்டன! அவர் எந்த அமைப்பிலும் இல்லை. உயிலும் எழுதவில்லை. எனவே நிரந்தரமாக நோபல் விருது கிடைக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

 1948 -இல் ‘உயிருடன் இருக்கும் எவரும் இந்த ஆண்டுநோபல் பரிசைப் பெறும் தகுதியுடன் இல்லை’ என்று அறிவித்தார்கள்!


நோபல் பரிசு கிடைக்காததால் மகாத்மாவின் தரமென்னவோ தாழவில்லை! அவரது புகழும் மங்கவில்லை! மாறாக நோபல் பரிசுக் குழுவினர் தங்கள் முன்னோர்களின் செயலுக்காகத் தலை குனிந்து வருந்தக் கூடும்!


திருமதி சிமோன்