பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 14 octobre 2011

இணையமெனும் இனிய வலை


இ புக் (தொடர்ச்சி)
புத்தக அலமாரியை நிரப்பி வைக்காமல் அவை தரக்கூடிய செய்திகளை ஒரு சின்ன பென் டிரைவ்  இல்   தரவிறக்கம் செய்து நம்முடனே எடுத்துச்செல்லும் அளவுக்கு தொழில் நுட்பும் மிகவும் வளர்ந்துள்ளது.புத்தக பிரியர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இது அரிய உதவியாகும்.  
சீனாவில் இ புக் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நாட்டின் அகாடமி ஆப் பிரஸ் அண்ட் பப்ளிகேஷன்  நிறுவனம் நடத்திய ஆய்வு  தெரிவித்துள்ளது. இதன்படி 2010ஆம் ஆண்டில் மட்டும் 18 முதல் 70 வயதுடையவர்கள் சுமார் அறுநூற்று பதின்மூன்று மில்லியன் மக்கள் இ புக் வாசகர்களாக மாறியுள்ளனர்.
பல புதிய ஆராய்ச்சிகள் பயணக்குறிப்புகள், மற்றும் வரைபடங்கள்(maps), ஜிபிஎஸ்  (2011) சாத்தியம்.  வண்ண மின் புத்தகங்கள்,  வளையும் மின் புத்தகங்கள் வர வாய்ப்புள்ளது. பல மொழிப் புத்தக ஆற்றலை மின் புத்தகங்கள் விரைவில்  பெற்றுவிடும். என்னதான் முன்னேற்றம் என்றாலும் காகித புத்தகங்களை படிப்பது போல வராது என்று சிலர் சலித்து கொள்வதுண்டு. புத்தகங்களின் பக்கங்களைத் திருப்புவது போலவே திருப்பவும், பக்கம் திருப்பும்போது சரக் என்ற ஒலி கேட்கும்  வண்ணமும் ஏற்பாடுகள் உள்ளன.  படிப்பதற்குச் சுமையை ஒரு காரணமாக்க இனிமேல் வாய்ப்பிருக்காது.  பல புத்தகங்களைச் சுலபமாக படிக்கும் ஒலி/ஒளி எதிர்காலம் மிகவும் நம்பிக்கையூட்டுகிறது.

லிப்ராய்ட' இ-புக்
ஜெர்மன்   நூலாசிரியரால் வடிவமைக்கப்பட்ட  மல்டிமீடியா வசதியுடன் கூடிய புதுவித போர்மெட்  புக். இச்சாதனத்தில் இ புக் படிக்கும் போது குறிப்பெடுத்துக்கொள்ளவும்  தெரியாத வார்த்தைகளின் பொருள் காணவும்    புத்தகத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும்  வசதிகள் உள்ளன. மேலும் ஆயிரக்ணக்கான இ-புத்தகத்தைப் புதிய வடிவில் எளிய முறையில் பதிந்து வைத்துக்கொள்ளலாம்.

அமேசான் கின்டில் :
மின்னூல்களை எளிதாக  வாசிக்க  அமேசான்.காம்   -இனால் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட  கருவியாகும் இது.  கம்பியற்ற இணைப்புக்களின் உதவியுடன் மின்னூல்கள், செய்தி இதழ்கள்,   வலைப்பதிவுகள்  போன்ற அனைத்து  எண்முறை ஊடகங்களையும்  இணைய உலாவிகள்  மூலம் தேடிப் பெற்றுக் கொள்ளவும், வாங்கவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும், எளிதாக மின்னூல்களை வாசிக்கவும் இந்தக் கருவி பயன்படுகின்றது.
கின்டில் வன்பொருள் கருவிகள் மின்தாள்களில் எழுத்துக்கள், வடிவங்களை (electronic paper) காட்சிப்படுத்துகின்றன. இதனால் தாள்களில் வாசிப்பது போன்ற தோற்ற உருவாக்கம் பெறப்படுகின்றது. அத்துடன் இவை குறைந்தளவு ஆற்றலைப் பயன்படுத்தவும் உதவுகின்றது.இது உலகில் மிகவும் அதிகம் விற்பனையாகியுள்ள படிப்பானாகும். கிண்டிலுக்கு போட்டியாக சோனி நிறுவனத்தின் ஈ-ரீடர், பார்ன்ஸ் அன் நோபிள் நிறுவனத்தின் நூக், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடு பலகைக் கணினி ஆகியவை உள்ளன. இவற்றுள், அமேசான், சோனி, பார்ன்ஸ் அன் நோபிள் ஆகியவை மின் புத்தகங்கள், கருவிகள் இரண்டையும் விற்கின்றன. ஆனால் ஆப்பிள் கருவியை மட்டும் விற்கின்றது; புத்தகம் விற்பதில்லை.


மின்னூல்  வர்த்தகம் :
மின் புத்தக வர்த்தகத்தில் பெரும் பிரச்சனையாக விளங்குவது  காப்புரிமை  மீறல். காகிதப் புத்தகங்களை அவ்வளவு எளிதில் பிரதி எடுத்து எவராலும் விற்க முடியாது. ஆனால்  இணையத்தில்  மின் புத்தகங்களை வாங்கும் ஒருவர் எளிதாக அதனை பிறருக்கு இலவசமாக தந்து விட முடியும்.தற்போது உலகில் மின் புத்தக விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் அமேசான்.கூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது. http://books.google.com/books என்ற முகவரியில் இதனைக் காணலாம். கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஐ-போன், ஐ-பாட் என எந்த டிஜிட்டல் ரீடிங் வசதி கொண்ட சாதனத்திலும் இதில் உள்ள நூல்களைப் படிக்கலாம். இதனால், ஒரு குறிப்பிட்ட நூலில் 34 பக்கங்களை ஐ-பாட் மூலம் படித்துவிட்டுப் பின் இன்னொரு நாளில், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரில் 35 ஆம் பக்கத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம்.

இணையதள நூலகங்கள்: உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை சர்வசாதாரணமாக இணையதளங்களில் காணமுடிகிறது. அதனால் இணையதள நூலகங்கள் பெயர் பெற்று வருகின்றன.தேவையான புத்தகங்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இதில் ஒரு சிலவற்றுக்கு மட்டும் கட்டணம் வசுலிக்கசூப்படுகிறது.
சென்னை நூலகம் :http://www.chennailibrary.com/ebooks/ebooks.html

இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்களை மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் எளிதாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி. http://www.noolaham.org/

  பல இணையதள நூலகங்கள் இணைந்து உலக புத்தகக்காட்சி கண்காட்சியை நடத்துகின்றன. இதிலிருந்து 25 லட்சம் புத்தகங்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த புத்தகக்காட்சியின் இணைய தள முகவரிwww.worldebookfair.com
 புத்தகங்களை நாடுவோம். நம் அறிவை வளர்த்துக்கொள்வோம்.
இவ்வளவு மாதங்களாகப்  பின்னப்பட்ட   இணையவலை இத்துடன் நிறைவு பெறுகிறது.

திருமதி.லூசியா லெபோ.